05-07-2005, 10:56 AM
ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். தூயாவுக்கு பொருத்தமா இருக்கும்.
ஒரு மன்னன் வேட்டைக்குப் போனானாம் அந்தக் காலத்து மன்னன் வேட்டைக்கு போறதெண்டா அது சாதாரண விசயமில்லை. ஒரு பெரிய படையைக் கூட்டிக் கொண்டு போருக்கு போவது மாதிரித்தானாம். மன்னன் வேட்டையாடித்தான் சாப்பிட வேணும் எண்டில்லை. அதுவும் மன்னனேதான் வேட்டைக்கு போகவேணும் எண்டில்லை. அதெல்லாம் ஒரு கௌரவம். ஒரு உடற்பயிற்சி. அவ்வளவுதான்.
அப்ப வேட்டைக்கு போன மன்னன் ஒரு மானைக் கண்டுட்டு அதைக் கலைச்சுக் கொண்டு போயிருக்கிறார் குதிரையில. மான் தறிகெட்டு ஓட ராசா கலைக்க கன தூரம் மன்னன் வந்திட்டார் பரிவாரத்தை விட்டுட்டு. கடைசியா மன்னன் மானையும் கொல்லேல்ல கூட வந்தவங்களையும் தவற விட்டுட்டார்.
இந்த நிலையில மன்னனும் சரியா களைச்சுப் போனாராம். அதைவிட மன்னன் மானையும் வேட்டையாடேல்லை என்ற ஆத்திரம் அவமானம் சரி மற்றவங்கள் வரும்வரைக்கும் இந்த மரத்துக்கு கீழை இருப்பம் எண்டு இருந்தாராம்.
மரத்துக் கொப்பில இருந்த குருவி ஒண்டு (நம்ம குருவியில்லை இது வேற தூயா மாதிரி) "யாருக்கு ஒரு சதம் வேணும் யாருக்கு ஒரு சதம் வேணும்" எண்டு பாட வெளிக்கிட்டுச்சாம். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தார் மன்னர். அது விட்டபாடில்லை. ஏற்கனவே வெறுப்பில இருந்த மன்னனுக்கு பொல்லாத ஆத்திரம் "இஞ்ச கொண்டா அந்தக் காசை" எண்டாராம். அவ்வளவுதான்.
அந்தக் குருவி " ஒரு சதத்துக்கு வழி இல்லாத ராசாவப் பாரு. ஒரு சதத்துக்கே வழி இல்லாத ராசாவப் பாரு" எண்டு பாடத் தொடங்கீட்டுதாம்.
இதென்னடா வம்பாப் போச்சு. என்ர பரிவாரங்களும் வாற நேரமாப் போச்சே. அந்தக் குருவி இப்பிடி மானத்த வாங்குதே எண்டு நினைச்ச மன்னன் சரி பிரச்சனை வேண்டாம் குருவியோட எண்டுட்டு " எனக்கு வேண்டாம் உன்ர காசு எண்டாராம். பிறகென்ன குருவிக்கு கொண்டாட்டம்தான்.
"எனக்குப் பயந்து வேண்டாமெண்ட ராசாவப் பாரு. எனக்குப் பயந்து வேண்டாம் எண்ட ராசாவப் பாரு எண்டு பாடத் தொடங்கீட்டுதாம். ராசா துண்டைக் காணம் துணியக் காணம்....

!