Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"அகவை 30 ல் கால் வைக்கும் த.வி.போராட்டம்
#2
<b><span style='font-size:25pt;line-height:100%'>30 ஆவது அகவையில் கால் பதிக்கும் விடுதலைப்புலிகள்!</span>

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் தமிழீழ விடுதலைப் போரட்டம் மூலம் சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களிலிருந்து தமிழர் தாயகத்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டு இன்று (05.05.05) 30 ஆவது அகவையில் கால் பதிக்கிறது.

மே மாதம் 5 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு 30 ஆவது அகவை ஆரம்பம்.

1970 ஆம் ஆண்டளவில் சிங்கள பேரினவாத அரசுகள் தமிழ்மக்களுக்கு இழைத்து வரும் அநீதிகளை கண்டு வருந்திய தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக மக்களின் விடுதலைக்காக போராட களமிறங்கினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழ்மக்களுக்காக ஆயுத போராட்டத்தை தொடங்கிய ஆரம்பகால கட்டத்தில் தமிழ்மக்கள் சிங்கள பேரினவாதத்திற்கெதிராக நடத்திய அகிம்சை வழியிலான போராட்டங்கள் தோல்வியில் அமைந்தன.

இந்நிலையில் தமிழ் இளைஞர்கள் எழுச்சிப் போராட்டத்தில் குதித்த காலம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்து பல எதிர்ப்பு போராட்டங்களை கலந்து கொண்டார்.

தமிழ் மாணவர் பேரவை ஒழுங்கான கட்டுப்பாடுகள் இல்லாததன் காரணமாக தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மாணவர் பேரவையிலிருந்து வெளியேறி கொள்கையில் தெளிவும் தளராத இலட்சிய உறுதியும் கொண்டு தீர்க்க தரிசனமான நோக்கோடு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆரம்பித்த இயக்கத்திற்கு முதலில் புதிய தமிழ்ப் புலிகள் என பெயரிடப்பட்டது.

1976 ஆம் ஆண்டு மே 5 ஆம் நாள் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் மாற்றப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மிகப் பலம் பொருந்திய இயக்கமாக கட்டி வளர்த்த தலைவர் பிரபாகரன் அவர்கள் சிறீலங்கா அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் பல தாக்குதல்களை நெறிப்படுத்தினார்.

16 வயதில் தமிழ்மக்களுக்காக போராட வேண்டுமென கிளர்ந்தெழுந்த தலைவர் அவர்கள் ஆரம்பத்தில் பல சவால்களை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

உண்மையான தேசப்பற்றும் சுயநலமற்ற சமூகப்பற்றும் அசாதாரண ஆற்றலும் உடைய விடுதலை வீரர்களை உருவாக்கி அசைக்க முடியாத பேரியக்கமாக தமிழீழ விடுதலைப்புலிகளை தலைவர் அவர்கள் வளர்த்துச் சென்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் சிறீலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் மீதும் தாக்குதல்களை நடத்தியதுடன் தமிழ் தேசத்துரோகிகளையும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

1976 ஆம் ஆண்டு தமிழினத் துரோகியான யாழ் மேஐரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அல்பிரட் துரையப்பா தமிழீழ விடுதலைப்புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களினால் நேரடியாக நெறிப்படுத்தப்பட்ட தாக்குதலாக யாழ். திருநெல்வேலி தாக்குதல் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதில் 13 இராணுவத்தினர் உயிரிழந்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தமிழர் தாயகத்தில் பரவலாக இடம் பெற்றன.யாழ். மாவட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் யாழ். வடமராட்சி மீது சிறீலங்காப் படையினர் 1987 ஆம் ஆண்டு ஒப்ரேசன் லிபரேசன்; நடவடிக்கையினை மேற்கொண்டு பெரும் பகுதியினை ஆக்கிரமித்த சூழலில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப் படையினர் மீது முதலாவது கரும்புலி தாக்குதலை கப்டன் மில்லர் நிகழ்த்தினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத சிறீலங்கா அரசாங்கமும் படைகளும் இந்திய அரசிடம் ஒடின.
1987 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு திருப்புமுனையாக இந்திய ஆதிக்க சிறகுகள் இலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் இலங்கைத் தீவில் விரித்தன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அகிம்சை வழியில் உணர்த்த முயன்று தோல்வியில் முடிந்ததை அடுத்து விடுதலைப்புலிகள் - இந்திய போர் இடம்பெற்றது.இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது திணறியது.

அமைதியென்ற பெயரில் கால் பதித்த இந்தியா 1990 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் நிலைகொள்ள முடியாது வெளியேறியது.

1990 ஆம் ஆண்டு பிரேமதாச அரசுடன் விடுதலைப்புலிகள் நடத்திய பேச்சுவார்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இரண்டாம் ஈழப்போர் இடம்பெற்றது.

இக்காலத்தில் தமிழர் தாயகத்திலிருந்த சிறீலங்காப் படையினரின் படைத்தளங்கள் பல தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சி கண்டன.

யாழ். கோட்டை கொக்காவில் மாங்குளம் கொண்டச்சி போன்ற பல படைத்தளங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சி கண்டன.

1991 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தின் ஆதிக்க சின்னமான ஆனையிறவு படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகாய கடல்வெளி என்ற நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளினால் தமிழர் தாயகத்தில் பரவலாக சிறீலங்காப் படைகள் மீது கடும் தாக்குதல்களை தொடுத்தனர்.

1993 ஆம் ஆண்டு பூநகரி படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் தவளை நடடிக்கையினை மேற்கொண்டு ஆயிரம் வரையான படையினரை கொன்றொழித்து முதல் தடவையாக சமர் தாங்கியொன்றினை கைப்பற்றினர்.

1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைதிப் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

அப்பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்ததால் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது.மூன்றாம் ஈழப்போர் ஆரம்பத்தில் பல தாக்குதல்களை தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்காப் படையினர் மீது நடத்தியிருந்தனர்.

1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டின் மீது சிறீலங்காப் படையினர் சூரியக்கதிர் படை நடவடிக்கையினை மேற்கொண்டதால் யாழ். குடாநாட்டிலிருந்து 5 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர்.

1996 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டினை சிறீலங்கா படையினர் முழுமையாக ஆக்கிரமித்த சூழலில் தமிழீழ மக்களின் விடுதலை அமைப்பான விடுதலைப்புலிகளும் வன்னிக்கு நகர்ந்தனர்.

1996 ஆம் ஆண்டு முல்லைத்;தீவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டு 1ää500 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் முதல் தடவையாக இரண்டு ஆட்லறிகள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்டது.

1996 ஆம் ஆண்டு கிளிநொச்சி மீது சிறீலங்காப் படையினர் சத்nஐய படை நடவடிக்கை மூலம் ஆக்கிரமித்தனர்.

1997 ஆம் ஆண்டு சிறீலங்காப் படையினர் வன்னி மீது nஐயசிக்குறு படை நடவடிக்கையினை மேற்கொண்டனர். 18 மாதங்களின் பின்னர் இப்படை நடவடிக்கை விடுதலைப்புலிகளினால் தோல்வி அடைய செய்யப்பட்டது.

1999 ஆம் ஆண்டு கார்த்திகை முதலாம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் தமிழர் தாயகத்தின் பெரும் பகுதிகள் சிறீலங்கா படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டன.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

ஆனையிறவினை கைப்பற்ற சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தீச்சுவாலை படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளினால் முறியடிக்கப்பட்டது.

ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியுடன் சிறீலங்காவின் சமபலம் பொருந்திய இரண்டு படைகள் உள்ளது என்பதை சர்வதேசம் சமூகம் ஏற்றுக்கொண்டது.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் தற்காலிக அமைதிச் சூழல் உருவாக்கப்பட்டது.

தற்காலிக அமைதிச் சூழல் மூலம் தமிழர் தாயகத்தின் தமிழ்மக்களுக்கு எந்தவித தீர்வுகளும் எட்டாத நிலையில் இந்த அமைதிச் சூழல் நகர்ந்து செல்கிறது.

தமிழ்மக்களின் விடிவுக்காக போராடி வரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தனது 30 ஆவது அகவையினை நாளை நிறைவு செய்கிறது.

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழீpழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பக்கபலமாக தமிழர் தாயக மக்கள் தற்போது அணிதிரண்டு உள்ளார்கள்.

தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் இறுதிக் கட்டத்திற்கு கொண்டு வந்து விட்டார்.

தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் தமிழினம் விடுதலை பேறவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் இலட்சியம் வெற்றி பெறவும் மாவீரர்களின் கனவு நனவாகவும் தமிழினம் அணிதிரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் 30 ஆவது அகவை நிறைவில் உறுதி பூணுவோம். </b>

நன்றி புதினன்.
----------------------------------------------------------------------

<b>30 அகைவையில் காலடி எடுத்து வைக்கும் தமிழிழ விடுதலைபுலிகளுக்கு புலம் பெயர் வாழ் தமிழிழ மக்கள் என்றும் அதரவாய் பக்கபலமாய் உறுதுனையாய் நிற்ப்போம்.</b>
[b]

,,,,.
Reply


Messages In This Thread
[No subject] - by selvanNL - 05-06-2005, 01:06 AM
[No subject] - by sinnappu - 05-06-2005, 01:10 AM
[No subject] - by vasisutha - 05-06-2005, 01:36 AM
[No subject] - by Eelavan - 05-06-2005, 08:25 AM
[No subject] - by sinnappu - 05-06-2005, 11:07 AM
[No subject] - by Eelavan - 05-06-2005, 04:15 PM
[No subject] - by eelapirean - 05-07-2005, 05:54 AM
[No subject] - by sinnappu - 05-09-2005, 12:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)