05-05-2005, 04:35 PM
பெண்ணின் வயிற்றுக்குள் 5 அடி நீள பன்டேஜ் விசாரணை நடத்துமாறு அமைச்சர் பணிப்பு
முப்பத்தேழு வயது பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து ஐந்து அடி நீளமான பன்டேஜ் துணி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடி விசாரண நடத்துமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சம்பிக விஜேரத்ன மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தம்புள்ள தலகிரியாகவைச் சேர்ந்த செனவிலதா என்ற பெண்மணி ஒரு சில வாரங்களுக்கு முன் தம்புள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளார். வைத்தியசாலையிலிருந்து வீடு சென்ற பின் தினமும் வயிற்று வலி ஏற்படவே அவர் பரிசோதனைக்காக மாத்தளை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை அரச வைத்தியசாலை டாக்டர்கள் இப்பெண்ணை பரிசோதனை செய்த போது வயிற்றுக்குள் பன்டேஜ் துணி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். தம்புள்ள அரச வைத்தியசாலை டாக்டர்கள் பெண்ணின் கர்ப்பைப்பையை அகற்றி விட்டு மீண்டும் தைக்கும் போது பன்டேஜ் துணியை வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை அரச வைத்தியசாலை டாக்டர்கள் இப்பெண்ணை மீண்டும் சத்திர சிகிச்சைக்குள்ளாக்கி பன்டேஜ் துணியை அப்புறப்படுத்தியுள்ளனர். இப்பெண் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் உடனடியாக மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சம்பிக விஜேரத்னவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே அவர் இது விடயமாக விசாரணை செய்து பூரண அறிக்கையொன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
சிவராம் படுகொலை தொடர்பாக சர்வதேச
தினகுரல்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS