05-04-2005, 05:51 PM
[u][b]வால் நட்சத்திரங்கள் உருவானது எப்படி?
வால் நட்சத்திரங்கள் மிகப்பழமையான காலத்தில் உருவாகிய பொருட்களாகும். சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியன் உருவான காலத்தில் அதனிடமிருந்து வீசப்பட்ட தூசுக்களும் வாயுக்களும் ஒன்று கூடி பூமிஇ செவ்வாய்இ சனி முதலான ஒன்பது கிரகங்கள் உருவாகின. அதே சமயம் தூசுகள்இ வாயுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சில சிறிய பொருட்கள் இன்று வரையும் சூரியனை வெகு தொலைவிலிருந்து சுற்றி வருகின்றன. இவையே வால் நட்சத்திரங்களாகும். சூரியன் உருவான காலகட்டத்தில் உருவானதால் வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தால் சூரியனின் தோற்றத்தை பற்றிய பல தகவல்களை அறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
வால் நட்சத்திரங்கள் எங்கிருந்து வருகின்றன?
பூமியிலிருந்து 600 கோடி கிலோமீட்டர் தொலைவில் புளுட்டோ கிரகத்தை தாண்டி இருக்கும் குயிப்பர் பெல்ட் என்ற பகுதியிலிருந்தும்இ பூமியிலிருந்து 7 இலட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்ட் மேகம் எனப்படும் பகுதியிலிருந்தும் வால் நட்சத்திரங்கள் பெரும்பாலும் வருகின்றன.
வால் நட்சத்திரத்தின் உள்ளே என்ன உள்ளது?
பாறைஇ பனிக்கட்டிஇ தூசிஇ வாயுக்கள் இவை அனைத்தும் சேர்ந்து தான் வால் நட்சத்திரங்கள் உருவாகின்றன. பெயர்தான் வால் நட்சத்திரமே தவிர உண்மையில் வால் நட்சத்திரம் நட்சத்திர வகையை சார்ந்தது அல்ல. வால் நட்சத்திரத்தின் மையப்பகுதியில் பாறை போன்ற பொருளினால் உருவாக்கப்பட்ட திடப்பகுதி உள்ளது. இதன் விட்டம் சராசரியாக ஒரு கிலோமீட்டர் நீளத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் நீளம் வரை இருக்கும். சில சமயங்களில் 100 கிலோ மீட்டர் அளவில் கூட மையப்பகுதி இருப்பதுண்டு. இந்த மையப்பகுதியை சுற்றி வெப்ப வாயுக்களைக் கொண்ட கோமா என்ற பகுதி உள்ளது. இந்த கோமா பகுதி பாறையை விட 1000 மடங்கு வரை பெரிதாக இருக்கும். இதுவே வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதியாக நமக்கு தெரிகிறது. இதனை தொடர்ந்து வாயுக் களாலும்இ பனிக்கட்டிகளாலும்இ தூசு மேகங்களாலும் உருவான வால்பகுதி உள்ளது. இது சில சமயம் லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் வரை கூட நீண்டிருக்கும். சூரியனை நெருங்க நெருங்க வால் நட்சத்திரத்தின் வெப்பம் கூடி அதன் ஒளிரும் வால்பகுதியின் நீளம் நீண்டுகொண்டே செல்லும். வால்பகுதி எப்போதும் சூரியனின் எதிர் திசையை நோக்கியே இருக்கும்.
வால் நட்சத்திரங்களின் அழிவு
வியாழன் (ஜூபிடர்) போன்ற பெரிய கிர கங்களின் அருகில் செல்கையில்இ அந்த கிரகங் களின் மிதமிஞ்சிய ஈர்ப்பு சக்தியால் வால் நட்சத்திரங்கள் பல சிறிய துண்டுகளாக பிரிந்து பின்னர் அந்த கிரகத்திலேயே விழுந்து அழிகின் றன. சமீபத்தில் கூட ஷூமேக்கர் லெவி-9 என்ற வால் நட்சத்திரம் ஜூபிடர் கிரகத்தில் விழுந்து அழிந்தது.
நன்றி: தினகரன்

" "
" "
" "