05-04-2005, 05:29 AM
குளக்கட்டான், வசி, தமிழ் நாதத்தில் பிரசுரமான முதலாவது கட்டுரையுடன் நானும் தொடர்புபட்டுள்ளேன் பார்த்தீர்களா? கருணாவுக்கு ஒரு கடிதம் என்ற கட்டுரையை வீரகேசரி வார இதழில் படித்துவிட்டு அவசர அவசரமாக நானும் எனது நண்பன் ஒருவனும் சேர்ந்து வேகமாக தட்டச்சு செய்து தமிழ் நாதத்துக்கு அனுப்பி வைத்தோம்! அவர்களும் காலத்தின் தேவை கருதி உடனே அதை பிரசுரித்துவிட்டனர், ஆனால் அதில் அதிக எழுத்துப்பிழைகள் காணப்பட்டதால் மாமனிதர் சிவராம் அவர்கள் தமிழ் நாதத்தோடு தொடர்புகொண்டு முக்கியமாக எழுத்துப்பிழைகளை கருத்துத்தில் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்! அதன் பின் அவரின் கட்டுரைகள் தொடர்சியாக தமிழ் நாதத்தில் பிரசுரமாக தானே வழிசெய்துகொடுத்தார்!

