05-02-2005, 04:39 PM
அனைவருக்கும் எனது வணக்கங்கள் .தூயாவுக்கு எனது நன்றிகள். நான் பட்டிமன்றத்தில் பழக்கப்பட்டவன் அல்ல.இங்கு ஏதோ என்னால் முடிந்த கருத்துக்களை வைக்கின்றேன்..
ஆனாலும் வியாசனுக்கு ரொம்பவும்ஏற்றம்தான் ஐயா நான் மற்வர்கள் ஏதாவது சொல்வார்கள் என்று காத்திருந்தேன்.அவர்கள் வர தாமதமாவதால் அவசரத்துக்கு உள்ளுர் மேளத்தை பயன்படுத்துவதுபோல நான் வந்திருக்கின்றேன்.
நான் வியாசனைப்போல அதிகம்தெரிந்தவன் அல்ல ஐயா வியாசரே நீங்கள் கூறும் திடகாத்திர மனிதர்களே கூறியிருக்கினர்றார்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று. அதனால்தான் விஞ்ஞானனிகள்; புதிது புதிதாக எதையாவது கண்டு பிடிக்கின்றார்கள். எந்த ஒரு செயலுக்கும் இரண்டுபக்க விளைவுகள் உண்டு நன்மையும் தீமையும் கலந்து இருக்கின்றது. மின்சாரத்தை கண்டு பிடித்தார்கள் அதனால் பெரிய நன்மைதான் அதில் சிறிய தீமையும் இருக்கலாம்..அதற்காக மின்சாரத்தை ஒதுக்கிவிடமுடியாது. இந்த மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் மனிதன் சோம்பேறியாகிவிடவில்லை. அதை வைத்து இன்னமும் சாதிக்க வேண்டும் என்று உற்சாகமாக போராடுகிறான். மனிதனை போராட தூண்டுகிறது விஞ்ஞானம்.. சுனாமி வருவதற்கு முன்னரே விஞ்ஞானத்தினால் கண்டு பிடிக்கமுடிந்திருக்கிறது. அது விஞ்ஞானத்தின் சாதனை. ஆனால் அதை தெரியப்படுத்தாமல் விட்டது உங்கள் பழமை வாதம். அது உடனடியாக தெரியப்படுத்தப்பட்டு உயிழப்புக்கள் இல்லாதிருந்தால் எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்.
வியாசன் குறிப்பிட்டிருந்தார் புதிதுபுதிதாக நோய்கள் உருவாகுவதாக ஐயா வியாசரே நீங்கள் பத்தாம் பசலி கருத்துக்ளை வைத்திருக்கின்றீர்கள். அம்மை மலேரியா காசநோய் போன்ற கொடிய நோய்களை வருவதற்கு முன்னே தடுப்பதற்கான வகைகளை கொடுத்தது இந்த விஞ்ஞானம். நோய்களால் சோர்ந்திருந்த மனிதனை நோய்களிலிருந்து வருமுன்னரே தடுத்துமனிதனை உற்சாகப்படுத்துகின்ற விஞ்ஞானத்தை நீங்கள் குறை கூறுவது கீழேயிருந்து ஏணிமூலம் ஏறி மேலே சென்றுவிட்டு இந்த ஏணி சரியில்லை என்று சொல்வதுபோல இருக்கின்றது. இருட்டிலே இருந்த மனிதனை இன்று வாழ்க்கையை இரசிக்கின்ற அளவுக்கு அவனுக்கு தேவையானவற்றை கண்டு பிடித்து கொடுத்துக்கொண்டிருக்கின்றது விஞ்ஞானம். வானொலி தொலைக்காட்சி தொலைபேசி என்பன தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம். அதனால்தான் 10000 கிலோ மீற்றருக்கு அப்பால் உங்களுடைய பெற்றோர் தும்மியதை தும்மி முடிந்த ஒரு விநாடியில் உங்களால் அறியமுடிகிறது.
வைத்தியதுறையில் விஞ்ஙானத்தின்சாதனைகள்தான் எவ்வளவு மலடுகள் என்று மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு மனமுடைந்து போயிருப்வர்கள் கூட குழந்தைகளை பெற்றுக்கொண்டு உற்சாகமாக வாழமுடிகிறது. விஞ்ஞானம் எப்போ தொல்லையாக மாறுகிறது என்றால் அதை அளவுக்கதிகமாக உபயோகிப்பதனால். உதாரணமாக தொலைக்காட்சி அளவுடன் உபயோகித்தால் பிரச்சனை இல்லை அதுவே நாள் முழுவதையும் பிடித்துக்கொண்டால் அதுவே தொல்லை. ஐயா எதிரணியினரே நீங்கள் இங்கு வாதாடுவது நுனி மரத்திலிருந்து அடிமரத்தை வெட்டுவதுபோல இருக்கிறது. ஐயா வியாசரே இனிமேலாவது நுனிமரத்திலிருந்துகொண்டு அடிமரத்தை வெட்டாதீர்கள். நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் நடுவர் திட்டுவார் அதனால் வாய்புக்கு நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். மனிதனை உற்சாகப்படுத்தும் விஞ்ஞானத்துக்கு எல்லோருமாக ஒரு ஓப்போடுவம்.....................................

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>