05-02-2005, 02:23 AM
Vasampu Wrote:உதே போல்த்தான் புவியிலிருந்தே நீர் ஆவியாக மேலே சென்று பின்பு மழையாக பொழிகின்றதென்பது ஆண்டால் பாடல்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. அது போல் செப்புப் பாத்திரங்களில் உள்ள தண்ணீர் கெட்டுப் போகாதென்று சமீபத்தில்த்தான் கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் நம் முன்னோர்கள் இதை எப்பவோ நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியம் தோள் உடைப் பற் பற்பநா பன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
(- திருப்பாவை- 4 )
மழை எப்படி பெய்கிறது என்பதை நாம் அறிவோம். சூரியனின் வெப்பதால்
கடல் , நீர் நிலைகளிலுள்ள தண்ணீர் வியாக மாறி , மீண்டும் மழையாக
பொழிவதை அறிவோம்.
அறியவில் பின் காலத்தில் கூறியதை, கி.மு. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் முன்னமே உரைத்துவிட்டாள்.
.

