05-01-2005, 12:33 PM
அனைவர்களுக்கும் எனது வணக்கம் பட்டிமன்றத்தில் வாய்ப்பு தந்த தூயாவுக்கு எனது நன்றிகள்.
நண்பர் வசம்பு வம்பாக கூறினார் விஞ்ஞானத்தால் நாங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று விஞ்ஞானத்தால் நாங்கள் மேடையில்லாமல் பட்டிமன்றம் நடத்துகின்றோம் என்று. ஆமய்யா நாங்கள் இந்த 25 வீத நன்மையை பெறுவதற்கு 75வீத எதிர்பயனை பெறுகிறோம்..ஒரு தொலைக்காட்சி நிகழ்வை பாத்துக்கொண்டிருக்கிறோம் அடுத்த நிகழ்வை பார்ப்பதற்கு எழுந்து செல்லவேண்டிய அவசியமில்லை இருந்தபடியே மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஒரு மனிதனை சுறுசுறுப்பில்லாமல் சோம்பேறியாக்கும் ஒரு நிகழ்வுதான் ;இது. இந்த விஞ்ஞானத்தின் வளர்ச்சிதான் மனிதனை மிகவும் துயரத்தில் கொண்டுசெல்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இந்த இலத்திரனியல் சாதனங்களினால் எவ்வளவு கதிர்வீச்சுக்கள் இடம்பெறுகின்றன என்பதை வசம்பு அறியமாட்டாரா இல்லை அறிந்தும் தன்னுடைய பக்கத்துக்காக விதண்டாவாதம் செய்கிறாரா? இந்த கதிர்வீச்சுக்களால் மூளைபாதிக்கப்பட்டு மனிதன்சோம்பலாகின்றான் என்று இவர் சார்ந்த விஞ்ஞானமே கூறுகின்றது
சில காலத்துக்கு முன்னர் பிரிட்டனிலிருந்து மாட்டிறைச்சி இறக்குவதற்கு மற்றைய நாடுகள் தடைசெய்தன அதற்கு காரணம் மாடுகளுக்கு இறைச்சி
யில் தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுத்து மாடுகளை நன்கு கொழுக்கவைத்தனர் இதனால் பெரும்இலாபம் கிடைத்தது. இந்த இறைச்சிகளை உண்டவர்கள் நோய்களினால் பாதிக்கப்படத்தொடங்கினர். நோய் வாய்ப்பட்டவர்கள் என்ன உற்சாகமாகவா இருப்பார்கள். என்னுடைய அணித்தலைவர் சியாம் குறிப்பிட்டதுபோல விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்தில் மக்கள் உடலுளைப்பால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் வயதுபோனவர்கள்கூட சுறுசுறுப்பாக இருந்தார்கள். அவர்கள் இயற்கை உணவுகளை உண்டார்கள் இன்றோ அதிக உற்பத்திக்காக கண்ட கண்ட இரசாயனப்பொருட்களை பயன்படுத்துகின்றார்கள் அதனால் ஆராக்கியமற்ற ஒரு சமுதாயம் உருவாகிறது. பழங்கள் கூட சுவைகளை இழந்துவிடுகிறது. அடுக்குமாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாவிட்டால் மாடிப்படிகளில:; ஏறுவதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றார்கள்.அவர்கள் இளைஞர்களாகட்டும். ஆனால் எங்கள் முதியவர்கள் சுலபமாக ஏறிவிடுவார்கள்.. அவர்கள ;இந்த விஞ்ஞானத்தால் சோம்பலாக்கப்படாதவர்கள். இயற்கையின் கொடைகளை உண்டு இயல்பாக வாழ்ந்து மனத்தாலும் உடலாலும் உற்சாகமாக வாழ்கின்றவர்கள்.. எதிரணியினரிடம் ஒரு கேள்வி உங்கள் உடல்எங்கள் ஊரவர்களைபோல வேலைசெய்வதற்ககு இடம் கொடுக்குமா?
பத்து கிலோ வை தூக்கிக்கொண்டு 100 மீற்றர் தூரம் நடப்பதற்கே உடல் இடம் கொடுக்காது என்பதுதான் உண்மை.. விஞ்ஞானத்தை நாங்கள் கையாள்வதுபோல காலக்கிரமத்தில் தொழில்நுட்பம் எங்களை கையாளப்போகின்றது. .ஓசோன் மண்டலத்தில் துளை விழுந்துவிட்டதாம் ;து விஞஞானிகள்தான் கூறுகின்றனர். அதற்கு காரணம் பூமியிலிருந்து வெளியேறும் தொழிற்சாலை புகைகள் காரணம். இப்படியான செய்திகள் மனித உள்ளங்களை பாதிக்கின்றது. அதனால் அவர்கள் சோர்வடைகின்றனர்.அதனால் நாங்கள் மனிதனை சோம்பலாக்கும் விஞ்ஞானத்தை கைவிட்டுமுடிந்தவரை மனித உழைப்பில் தங்குவோம். அதிக இயந்திரங்களை பயன்படுத்தி மனிதவளத்தை பாவிக்காமல் விடுவோம். இயந்திரங்களை பயன்படுத்தி வேலையில்லா திண்டாட்டத்தை பெருக்கி சோம்பேறிகளை உருவாக்காமல் நல்ல ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க நல்ல தீர்;ப்பு சொல்வார்கள் எங்கள் நடுவர்கள். என்று நம்பிக்கொண்டு வாய்ப்புக்ககு தூயாவுக்கு நன்றிகள் கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]