04-30-2005, 04:32 PM
Quote:பொதுவாகவே எமது தாய் தந்தையர் காலத்திலே பல விடயங்களை செய்து முடிப்பதற்கே பல நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது அதே விடயங்களை ஒரு சில மணித் துணிகளிலேயே முடித்து விட முடிகின்றது,வசம்பு)
தந்தையர்காலத்தில் என்ன எம்தாத்தா காலத்திலும் ஒரு வேலையை செய்ய மனிதவலு அதிகம் பயன்பட்டது எனது தாத்தா அதிகாலை 5 மணிக்கு எழுந்து தோட்டத்திற்கு போய் தண்ணீருற்றி 3 4 சாக்கு கத்தரிக்காய் மிளகாய் என்று பிடுங்கி மாட்டு வண்டிலில் சந்தைக்கு கொண்டு போய் விற்று காலை நான் பாடசாலைக்கு புறப்படும்போது 7.30ற்கு பணத்தை வீட்டில் கொடுத்துவிட்டு உணவருந்திவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு போய்விடுவார். அவர் இறக்கும் போது 81 வயது அதுவும் வருத்தத்தால் அல்ல யுத்தத்தால் செல் விழுந்து. 81 வயது வரை அவரிற்கு பெரிய வருத்தம் எதுவும் வந்தில்லை காரணம் அவரின் உடல் உழைப்பு.
இன்று 50 போர் செய்யும் வேலையை ஒரு இயந்திரம் செய்து விட்டு போகிறதுஅதனால்
1)மனிதவலு கூடிய சனத்தெகை கூடிய நாடுகளின் எதிர் காலம் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றன
2)எல்லாநாடுகளிலும் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கின்றது
3)வேலை வாய்ப்பின்மையால் குற்ற செயல்கள் அதிகரிக்கின்றன
இவைகளால் எதிரணியினரைபோல் வேலையற்றமனிதன் வீடின்றி வீதிகளில் சோம்பேறிகளாய்.படுத்துறங்கி கொண்டிருக்கிறான்.
; ;

