04-30-2005, 11:46 AM
தாயகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் ஊடகவியலாளர்களில், ஆங்கில ஊடகங்களிலும் பிரகாசித்து முதல் முத்தாய் ஜொலித்தாய்! அன்று மாற்று இயக்கம் உனது ஆரம்பமானாலும் காலத்தின் தேவையறிந்து தேசியத்துடன் இணைந்தாய்! தேசியத்திற்கு சில இடர்கள் வந்த போதெல்லாம் உன்குரல் ஒலிக்கத் தவறியதில்லை! உன் அரசியல், இராணுவ ஆய்வுகள், எதிர்வு கூறுகள் தீர்க்க தரிசனமானவை! தேசியத்தின் குரலாக வலம்வரும் "தமிழ்நெற்" தொடங்கப்பட்டு சிலவருடங்களானாலும், சர்வதேசத்தில் பிரபல்யம் வாய்ந்த செய்தி இணையத்தளங்களில் ஒன்றாக மாற்றியவர்களில் முன்னனியில் நிற்பவன் நீ! உன்னை வீழ்த்தியவர்கள் கோழைகள்! உன் பேனாவிற்கு முன் அவர்களில் துப்பாக்கி வென்றுவிட்டதாக கனாக் காண்கிறார்கள்! அவர்களிற்கான புதைகுளீகள் தாயாராகிவிட்டன! மலரப்போகும் எம் தாய்த்திருநாட்டிற்கான ஆசீர்வாதங்களை வானத்திலிருந்து கொண்டு வாழ்த்துவாய்! உன்னை இழந்து துடிக்கும் உன் மனைவிற்கும், செல்வங்களுக்கும் எங்களது ஆழ்ந்த மனவேதனைகளை தெரிவிப்பதோடு, உனக்கு எங்கள் அஞ்சலிகளை தெரிவிக்கும்போது ... "மாமலையொன்று மண்ணிலே வந்து ...." என்ற தேசிய கீதமொன்று இதயத்தை தொட்டுச் செல்கிறது!! நீ இறக்கவில்லை!! எம்முடன் என்றென்று வாழ்வாய்!!!
" "

