04-30-2005, 02:11 AM
எமக்கு ஒருகுடை தான் வேண்டும் அதுவும் பலமான நிரந்தரமான குடையாக தான் வேண்டும். அல்லலுற்ற எமக்கு ஒரு தலைவன் கிடைத்தான் அவன் சிந்தனைகளே இன்று வேர்விட்டு விழுதெறிந்து அடிமைவிலங்குடைத்து சர்வதேசமே கைகொடுக்குமளவுக்கு எம்மை சர்வதேச அந்தஸ்த்திற்கு உயர்த்தியுள்ளது. எனவே அந்த தலைவனின் உள்ளத்துணர்வின் வெளிப்பாடு இங்கு ஐரோப்பிய நாட்டில் இருக்கையில் ஏன் நாம் மாற்றாந்தாயின் சேவைக்காக ஏங்கவேண்டும். அந்தவகையில் நாம் மாற்றாந்தாய்களின் போலி அன்புக்கரங்களைத் தட்டிவிட்டு எமது தாயின் உரிமைக்கரத்தைப் பற்றிப்பிடிப்போம். ஒருமனப்படுவோம் ஒருகுடையின் கீழ் அணிதிரள்வோம்.

