04-30-2005, 01:52 AM
திரு தராக்கி D.சிவராம் கடத்தப்பட்டுள்ளார் என்ற செய்தியை வாசித்தவுடனேயே ஏதோ குடும்பத்தில் ஒருவரை இழந்த மனவுணர்வே ஏற்பட்டது அந்தளவுக்கு திரு தராக்கி அவர்கள் துணிகரமான இதயத்தோடு ஈழ விடுத்தலைப்போராட்டத்தின் முன்னெடுப்பையும் தமிழினத்துரோகிகளையும் தனது பேனா நுணியில் வெளிப்படுத்தியவர். எதிரிகளின் வாயிற்படிகளில் இருந்துகொண்டே தமிழ்த்தேசியம் பற்றி உரக்கக் கூவிய செந்தமிழன் குள்ள நரிகளின் நயவஞ்சகத்தால் இன்று மீளாத்துயில் கொள்கிறான். இவருக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில் இங்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழ்தேசியத்திற்கெதிராக செய்ற்படுவோரையும் / நிறுவனங்களையும் இனங்கண்டு இத்தகைய புல்லுருவிகளை நாம் எம்மத்தியில் இருந்து பிடுங்கி எறிய திடசங்கர்ப்பம் பூணுவோமாக. நாம் இவ்வாறு செய்ய பின்னிற்கும் தறுவாயில் இன்னும் பல தராக்கிகளை இழக்கப்போவது யாராலும் தடுக்கமுடியாதொன்று. இந்தப்புல்லுருவிகளின் அசுர வளற்சியின் வெளிப்பாடு தான் வெக்ரோண் நிறுவனத்தின் மூடுவிழா என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும் புல்லுருவிகள் அல்ல. எனவே எதிகாலத்தில் இதை மனதில் வைத்து செயற்படுவோமென்றால் அதுவே தராக்கியவர்களின் ஆத்துமாவிற்கு நாம் செய்யும் சாந்தியாகவிருக்கும்.

