04-29-2005, 06:08 PM
தராக்கி என்று அளைக்கப்பட்ட திரு சிவராம் அவர்கள் பேரினவாதிகளால் கொல்லப்பட்டமையானது, அனத்து தமிழ் மக்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. போர் நிறுத்தம் என்னும் போர்வையில் தமிழ் மக்களிக்கு இலங்கை பேரினவாத அரசினால் தீமையே இளைக்கப்படுகின்றது என்பதற்கு ஐயன் சிவராமின் படுகொலையும் இன்னொமோர் எடுத்துக்காட்டு. இதில் இருந்து உலகம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றையே. அதாவது தமிழ் மக்களையும் அவர்களின் கவசங்களாகிய தமிழ் உணர்வாழர்களையும் புத்திஜீவிகளையும் ஆண்டாண்டுகாலமாக கொன்றொளித்து, ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலத்தினை சூனியமாகிடலாம் என சிங்கள பேரினவாதமும் அதன் கூலிகளும் கங்கண்ம் கட்டி நிற்கின்றன. எனவே இந்த யதார்த்த நிலைதனை உலகம் புரிந்துகொண்டு ஈழத்தமிழ் மக்கள் தாமாகவே இலங்கை பேரினவாத அரசிடம் இருந்து பிரிசென்று தனி அரசினை நிறுவிட வளிவகை செய்திடல் வேண்டும். தமிழ் புத்தி ஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பு இலங்கை நாட்டில் இல்லை என்றால். சாதாரண தமிழ்பொதுமனிதனின் பாதுகாப்பிற்கு எவ்வளவு அச்சுறுத்தல் இருக்கும் என்பதனை உலகம் புரிந்துகொள்ளல் வேண்டும்.
புரிந்து கொள்வதோடு மட்டும் நின்றுவிடாது தமிழ் மக்கள் புலிகளின் பாதுகாப்புடனும் சுயகௌரவத்துடனும் இலங்கை பேரினவாத அரசிடமிருந்து பிரிந்து சென்று தங்களை தாங்களே ஆளும் நிலைதனை உருவாகிடல் வேண்டும். இல்லையேல் தமிழ் இளைஞ்ஞர்கள் தங்கள் இனத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் மேலும் தீவிரமாக இறங்குவர்.
தமிழ் ஊடகத்துறையின் உண்மைச் செய்தியாளன் தாரகி டி சிவராம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
ஈழத்து இளவட்டங்கள்