04-29-2005, 12:06 PM
அரசின் கைக்கூலிகளால் கடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளரும் தமிழ்நெட் செய்திச் சேவையின் ஆசிரியருமான தராகி என்று அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கண்டெடுக்கப்பட்ட உடல் திரு.சிவராமினுடையது என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டுவதாக ஆரம்பத்தில் தகவல்கள் தெரிவித்தன. தராக்கி சிவராம் அவர்கள் இரும்புக் கம்பிகளால் அடித்தே படுகொலை செய்யப் பட்டுள்ளதாகவும் இதனால் அவரது முகம் சிதைவடைந்துள்ளதாகவும் தற்போது தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன..பம்பலபிட்டியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இரவு உணவை முடித்த பின்னர் சிவராமும் மற்றும் ஒரு ஊடகவியலாளாரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இன்ரக்கூலர் ரக வாகனத்தில் வந்தவர்களால் சிவாராம் கடத்தப்பட்டார். கடத்தியவர்களில் இருவர் தமிழ் பேசியதாகவும் மற்றையவர்கள் சிங்களவர்கள் என்றும் சம்பவத்தை அவதானித்த சாட்சிகள் தெரிவித்திருந்தனர். சிவராமுக்கு பல தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா புலனாய்வு துறையின் பலவீனம் மற்றும் புலனாய்வு துறைக்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து இவர் அண்மையில் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. டெய்லி மிரர் எனும் ஆங்கில ஊடகத்திலும் பல தமிழ் ஊ;டகங்களிலும் படைத்துறை ஆய்வு கட்டுரைகளை இவர் எழுதி வந்தவர் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விமல் வீரவங்க சிவாரம் குறித்தும் தமிழ் நெற் இணையத்தளம் குறித்தும் கடுiமாயான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை நினைவு கூரத்தக்கது. இரு மொழி புலமை வாய்ந்த இராணுவ ஆய்வளாரன இவர் சர்வதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். தமிழ் மக்களிள் விடுதலைப் போராட்டத்தின் நியாத்தினை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு செல்லம் ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிங்கள பேரினாவதம் நடத்தும் தாக்குதலின் தொடர்ச்சியே சிவராமின் கொலை என சுட்டிக்காட்டப்படுகின்றது. சர்வதேச அரங்கில் அரசாங்கத்தின் கபட நாடகத்தை அம்பலப்படுத்திய சிவராமை கொலை செய்தமையின் ஊடாக ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயல்பாடுகளை சர்வதேச அரங்கில் விமர்சனம் செய்வதற்கு ஊடகவியலாளர்கள் அச்சமடையும் நிலை ஒன்றை தோற்றுவிப்பதே இந்த படுகொலையின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.

