Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தியாக தீபம் திலீபனின் நினைவாக...
#8
தியாகி திலீபன் ஒரு இலட்சிய நெருப்பு.

<span style='font-size:25pt;line-height:100%'>~~ஐயா திலீபா எங்கு ஐயா போகின்றாய்? ஐயா திலீபா எங்கு ஐயா போகின்றாய்?~~எங்கள் உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் நல்லு}ர் வீதியிலே உரத்து கேட்டது இன்றும் உணர்வு சேர எங்கள் நெஞ்சங்களில் ஓலிக்கின்றது. </span>


என்ற பாடல் எங்கள் உள்ளங்களிலே பதினாறு ஆண்டுகள் கடந்தும் பசுமரத்தாணியாய் ஓங்கி ஒலிக்கின்றது.

இராசையா பார்த்திபன் என்ற சொந்தப் பெயரைக் திலீபன் அவர்களது அறப்போருக்கான காரணம் என்ன? யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த திலீபன் அவர்களது சாகும் வரை உண்ணாவிரதத்திற்கான காரணத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பின்வருமாறு கூறுவதிலிருந்து காணுங்கள்.

~~சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம் தான் எமது இனப் பிரச்சினையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்து. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆகவே, பாரத அரசிடம் தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டும். எனவேதான் பாரத்துடன் தர்மயுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன் அத்தோடு பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான்||

13.09.1987 இல் இந்தியத் தூதருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளுக்கு எவ்வித சாதகபதிலும் கிடைக்காத நிலையிலேயே, காந்தியின் தேசத்திற்குக் காந்தி கையாண்ட கருவியையே கையிலெடுத்தான் எங்கள் மகாத்மா. லெப். கேணல் திலீபன் அவர்கள். ஏனவே முன்வைக்கப்பட்ட 5 அம்சக்கோரிக்கைகளையே முன்னிலைப்படுத்தி.

15.09.1987 செவ்வாய் காலை 9.55 க்கு ~~வெள்ளி மயிலேறி வரும் வேலவனின் வீதியிலே|| நீராகாராம் ஏதுமின்றி சாகும் வரை உண்ணா நோன்பை ஆரம்பித்தமை மனக் கண் முன் இன்றும் நிழலாடுகின்றது. தியாக தீபம் திலீபன் அவர்கள் முன் வைத்த கோரிக்கைகளாவன,

(01). பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

(02).புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும்.

(03). இடைக்கால அரசு நிறு வப்படும் வரை~~புனர்வாழ்வு|| என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

(04). வடக்கு-கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

(05) இந்திய அமைதிப் படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படையினர் என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க்கிராமங்கள், பள்ளிக் கூடங்களில் நிலை கொண்டுள்ள இராணுவப்பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

மேற்கூறிய நியாயபுூர்வமான 5 கோரிக்கைகளையே திலீபன் அவர்கள் முன்வைத்திருந்தார். இவருக்கு ஆதரவாக மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் விடுதலைபுலிவீரர்கள் சாகும் வரை உண்ணா விரதம் இருந்தார்கள். ~~நேரு பேரனின் து}துவன் ஏன் எனக் கேட்காது ஏளனத் தோடு நடந்தான்|| முன்னம் நடந்த தாக்குதலொன்றில் குடலின் ஒரு பகுதியை இழந்திருந்த திலீபன் அதை சிறிதும் பொருட்படுத்தாது வயிற்றினிலே போர் தொடுத்தார். இந்திய தேசத்திடம், ~~திலீபன் அழைப்பது சாவையா? இந்த சின்ன வயசில அது தேவையா? என்று சிறுமியொருத்தியின் கணீரென்று குரல் நியாயம் கேட்டது.

மக்களின் உணர்வுக் கொந்தளிப்பைக் கண்டுணர்ந்த திலீபன் அவர்கள் உண்ணாவிரத மேடையிலே இரண்டவது நாள் ஆற்றிய உரை முத்திரை பொறித்தது.

~~மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும்|| அது நிச்சயமாகத் தமிழீழத்தை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும். அதனை வானத்திலிருந்து அந்த அறுநு}ற்று ஐம்பது போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன். உண்மையான, உறுதியான இலட்சியம் எமது இலட்சியம். அந்த இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்|| என்று உண்ணா நோன்பின் களைப்பின் மத்தியிலும் சோர்வு குன்றாது உறுதிபடக் கூறியிருந்தார்.

இது மக்கள் எழுச்சிகளைப் பரவலாகக் கிளர்ந்தௌச் செய்தது. குறிப்பாகப் பருத்தித்துறைக் காவல்துறை நிலையத்திலிருந்த சிங்களக் காவல்துறையினர் 18.09.1987இல் மக்களால் விரட்டப்பட்டதைக் குறிப்பிடலாம். காந்தீயத்தைத் தந்த பாரத நாடு தமிழீழக் காந்தீயத்தை அலட்சியம் செய்ததால் 26.09.1987 சனி காலை 10.48 க்கு தியாக தீபம் அவர்கள் தியாகச்சாவடைந்தார். பாரதத்தின் பொய் வேடம் போட்டு உடைக்கப்பட்டது. ஈழத்தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஆழமான வடுவை ராஜீவ்காந்தி உண்டு பண்ணிய அவலம் அரங்கேறிது.

தியாகதீபம் திலீபனைத் தேசியத் தலைவர் அவர்கள் பின்வருமாறு நினைவு கூறுகிறார்.

~~நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற hPதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடிதுடித்துச் செத்துக் கொண்டிருக்கும் பொழுதெல்லாம், என் ஆன்மா கலங்கும். ஆனால், நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக்கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சக்கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருஷனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்".

வரலாற்றில் இதற்கு முன்னரும் உண்ணாவிரதமிருந்து சிலர் உயிர் நீத்திருக்கிறார்கள். அன்றைய பர்மாவில் ஒரு பௌத்த துறவி அவ்வாறு உயிர் நீத்ததையே ஆரம்பமாக எங்கோ அறிந்த நினைவு ஐரிஷ் போராளியான ~~பொபிசாண்ட்ஸ்|| சிறையிலே உண்ணாவிரதமிருந்து உயிரிழந்தமையும் நினைவிற்கு வருகின்றது. ஆனால், முதன் முதல் நீராகாரம் ஏதுமின்றி சாகும் வரை உண்ணாவிரதமிருந்த பெருமை 1986 நவம்பரில் தமிழீழத் தேசியத் தலைவரையே சாரும்.

திலீபன் நினைவு நாளை தமிழர் தேசியப்படை தமக்கேயுரித்தான பாணியில் நினைவு கூர்ந்ததை வரலாற்றில் காணலாம். யாழ் கோட்டை கைப்பற்றப்பட்டது. (1990-09-26), ஓயாத அலைகள் -2 மூலம் கிளிநொச்சி தமிழர் தரப்பால் சிங்களத்திடமிருந்து மீட்கப்பட்டது. (1998 செப்டெம்பர்) முதலானவை சில எடுத்துக்காட்டுக்கள். நல்லு}ரிலே நிறுவப்பட்ட திலீபனது நினைவுத்து}பி மீள புனரமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது.

தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பிய ஈகத்தை நினைவுகூறும் எமக்கு முன்னால் விரிந்து கிடக்கும் தேசப் பணியை விரைவுபடுத்துவதன் தேவையைத் தேசியத் தலைவர் அவர்களின் பின்வரும் வரிகளே போதிக்கின்றன.

~~மக்களின் ஒன்றுதிரண்ட சக்தி மூலமே - மக்களின் ஒரு முகப்பட்ட எழுச்சி மூலமே - நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்"
www.paadumeen.com
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 09-15-2003, 09:30 AM
[No subject] - by TMR - 09-16-2003, 06:57 AM
[No subject] - by kuruvikal - 09-16-2003, 12:42 PM
[No subject] - by உண்மை - 09-17-2003, 11:34 AM
[No subject] - by S.Malaravan - 09-18-2003, 06:00 PM
[No subject] - by S.Malaravan - 09-18-2003, 06:50 PM
[No subject] - by sun - 09-18-2003, 09:15 PM
[No subject] - by Mathivathanan - 09-18-2003, 09:49 PM
[No subject] - by sun - 09-19-2003, 05:43 AM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 07:20 AM
[No subject] - by sun - 09-19-2003, 07:28 AM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 07:35 AM
[No subject] - by Mathivathanan - 09-19-2003, 07:59 AM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 08:51 AM
[No subject] - by S.Malaravan - 09-19-2003, 06:48 PM
[No subject] - by S.Malaravan - 09-19-2003, 07:15 PM
[No subject] - by தணிக்கை - 09-21-2003, 08:55 PM
[No subject] - by mohamed - 09-24-2003, 12:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)