04-29-2005, 04:48 AM
(மேலதிக இணைப்பு) பிரபல ஊடகவியலாளர் தராக்கி சிவராம் கடத்தப்பட்டுள்ளார்
ஜ காவலூர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமைää 29 ஏப்பிரல் 2005ää 0:15 ஈழம்
பிரபல ஊடகவியலாளரான தராக்கி என்ற புனைபெயரில் அறியப்பட்ட திரு.தர்மரட்ணம் சிவராம் அவர்கள் சிறீலங்கா நேரப்படி நேற்று வியாழக்கிழமை இரவு 10:30 மணியளவில் பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளதாக புதினத்தின் கொழும்புச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறிதொரு ஊடகவியலாளருடன் உணவு விடுதியொன்றில் இருந்த சமயம் அங்கு பிரவேசித்தவர்களே இவரை சிறிய வான் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும் அக்; குழுவில் நான்கிலிருந்து ஆறுபேர் வரை இருந்ததாகவும் புதினம் ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தராக்கியின் மனைவிää பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தற்போது உத்தியோகபூர்வமாக குற்றத்தாக்கல் செய்துள்ளதாகவும் பிந்திய செய்திகள் மூலம் அறியவருகிறது.
திரு.தராக்கியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்காக அவரது கைத்தொலைபேசிக்கு அழைத்தபோதுää தொலைபேசி அழைப்பு செல்கின்ற போதிலும்ää பின்னர் அது யார் மூலமோ ரத்து செய்யப்படுவதைக் கேட்க முடிகிறது.
கொழும்பின் பிரபல ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி மிரரின் ஆய்வாளராகவும்ää பல மேற்குலக ஊடகங்களில் பிரபல்யமானவருமான தராக்கியின் மீது சிறீலங்கா அரசு கடந்த காலங்களில் பலத்த கெடுபிடிகளைப் பிரயோகித்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கடந்த வருடமும் இரு தடவைகள் அவரது இல்லம் அரச படைகளினால் சோதனையிடப்பட்டதுடன் அவர் மீதான மறைமுக அழுத்தமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெகுவாகப் பிரயோகிக்கப்பட்டிருந்தது.
மிகவும் துணிவான வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தும் திரு.சிவராம் அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறைக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றிய கட்டுரையொன்றை அண்மையில் இடம்பெற்ற சொறிவில தாக்குதல் சம்பவத்தோடு எழுதியிருந்தார்.
அத்தோடு கிழக்கில் பிரதேசவாதம் கிளப்பட்டபோதுää அது திட்;டமிட்ட சதியே என்ற வகையிலான ஆதாரங்களை வெளிக்கொணர்ந்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறீலங்கா அரசினாலும்ää அதன் ஆதரவு ஆயுதக்குழுக்களினாலும் பலத்த நெருக்குதலிற்கும் மிரட்டலிற்கும் உள்ளான போதும் தனது ஊடகப் பணியைச் சிவராம் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். குறிப்பாக ஆங்கில ஊடகமான தமிழ்நெற் இணையத்தளத்தின் ஆசிரியராகவும் திரு. தர்மரத்தினம் சிவராம் அவர்கள் கடமையாற்றி வந்துள்ளார்.
நேர்த்தியான இராணுவ ஆய்வாளராக திரு. சிவராமை அவரது கட்டுரைகள்ää நேர்காணல்கள் புலப்படுத்தின என்பதோடுää அமெரிக்கப் படைத்துறை உள்ளிட்ட பல படைத்துறைகள்ää புலிகளைப் பற்றிய அபிப்பிராயங்களையும்ää கருத்துப்பரிமாறல்களையும் திரு. சிவராமுடன் மேற்கொண்டு வந்தன.
தனக்கு விடுக்;கப்பட்ட அச்சுறுத்தல்கள் பற்றிய பரிமாற்றமொன்றினை ஜேர்மனியில் இயங்கும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புடன் திரு.சிவராம் அவர்கள் கடந்த ஆண்டு யூன் மாதம் மேற்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.