04-28-2005, 04:32 PM
உங்கள் எண்ணம் நல்லதுதான் மதுரன். ஆனால் தேசியத் தொலைக்காட்சியாகக் கருதப்படுகிற ரிரிஎன் தொலைக்காட்சி பொதுவாகவே புலிஆதரவு ஊடகமாகத்தான் அனைத்துத் தரப்பினராலும் பார்க்கப்படுகிறது. அதனால் மற்றத் தரப்புகள் ரிரிஎன் தொலைக்காட்சியைச் சார்ர்த் தொலைக்காட்சி என்கிற அடிப்படையிலேயே செய்திகளையும், கருத்துக்களையும் உள்வாங்கும்.
அதேநேரம் வெக்ரோன் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை அதனை நடுநிலைத் தொலைக்காட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும் புலிஆதரவு என்கிற வட்டத்தைத் தாண்டி அனைத்துத் தரப்பும் பார்க்க முடிந்தது. அது உண்மையில் நம்பகத்தன்மையை ஒரு ஊடகம் உருவாக்குவதற்கு ஏதுவாக இருந்தது. ஆரம்பத்தில் இந்தியத்தமிழ் அறிவிப்பாளர்கள் தமிழ் உச்சரிப்புகளைக் கொலை செய்தார்கள் தான். பின்னர் அது குறைக்கப்பட்டது.
தற்போதைய காலகட்டத்தில் ஊடகத்தின் நம்பகத்தன்மையை உருவாக்குவது தான் சவாலான விடயம் எனவே அது தேசியத் தொலைக்காட்சியுடன் இணைந்து செயற்படுவது எந்தளவு வெற்றியளிக்கக்கூடிய விடயம் என்று தெரியவில்லை. தொழில்நுட்பவியலாளர்களைப் பொறுத்தவரை வெக்ரோனின் பின்னணியில் இருந்த அநேகர் வேற்று நாட்டவர்கள் தான்.
ஆனால் உங்கள் எண்ணத்தின்படி நம் செய்திகளை, நிலைப்பாடுகளை வெளியுலகிற்கு காட்டக்கூடிய ஒரு ஆங்கில ஊடகம் அவசியம் என்பது ஏற்புடையதே. அதனை உரியவர்களும் கவனத்தில் எடுப்பார்கள் என்றே நம்புகிறேன்.