04-28-2005, 03:18 PM
வெக்டோன் தனது தமிழ் ஒளிபரப்பு சேவையினை நிறுத்தியமை மிகவும் மனவருத்தம் அளிக்கின்றது. தமது சேவையினை நிறுத்திய வேளையில் இரு முக்கிய விடயங்கள் அங்கே தெரிவிக்கப்பட்டன. முதலாவது விடயம்: இதுவரை காலமும் தேசியத்தலைவரின் ஆசியுடன் வெற்றி நடை போட்ட வெக்ரோன் தமிழ்ச்சேவை தொலைக்காட்சி என்பது. இரண்டாவது விடயம் அனைவராலும் ஆழ்து சிந்திக்க வைக்கும் முக்கிய செய்தி. அதாவது திவாயின என்னும் சிங்கள இனவாத பத்திரிகையில் வந்த செய்தியின் பின்விளைவாக, இலங்கை பேரினவாத சிங்கள அரசினால் வெக்டோன் இலங்கை நிர்வாகத்திற்கு இலங்கையில் இயங்கிட அனுமதி மறுக்கப் பட்டமையானது. அதற்கு சிங்கள அரசாங்கத்தின் கூலிக் குளுக்களும், இங்கிலாந்தில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியும் என வெcடோன் நிறுவனம் தமது நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டமைக்கான காரணங்களாக தெரிவித்துள்ளனர்.
வெcடோன் தழ்ச்சேவையானது யாரால் எதற்காக நடத்தப்படுகின்றது என்னும் விடயத்தினை ஒரு புறம் தள்ளிவைத்து விட்டு. சுனாமியின் போது செய்திகளை படம் பிடித்து, அங்குள்ள அவலத்தினை உடனுக்குடன் தந்தமைக்காகவும், செய்திகளை தமிழ் மொழியில் உடனுக்குடன் இலவசமாக தந்தமையினாலும் அந்த நிறுவனத்தினை நாம் பாராட்டிவிட முடியாது.
தமிழ் மக்களின் தேசியத்தின் உண்மை நிலைதனை உலகிற்கு பறைசாற்றிட பாடுபடல் வேண்டும். தமிழருக்கு தமிழில் செய்திகள் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஆங்கிலத்தில் தமிழ் மக்களின் போராட்ட ஞாயங்களை எடுத்து சொல்வது. திவாயின போன்ற சிங்கள இனவாத பத்திரிகைகள். ஒன்றை மட்டும் சொல்லி நிற்கின்றன. இலங்கையில் சிறுபான்மை ஊடகங்கள் என்றுமே பேரினவாதிகளின் ஊடகங்களை மிஞ்சிவிடவோ,சமமாக இருப்பதனையோ அன்றேல் தமிழ் ஊடகங்கள் வளர்வதையோ விரும்பவில்லை என்பதே. எனவே இதனை உணர்ந்து வெcடொனெ தமிழ் தொலைக்காட்சி தமிழ் தேசிய தொலைக்காட்சியுடன் இணைந்து தனது சேவையினை வழங்கி அதன் பேரினவாத எதிரிகளுக்கும், கூலிகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டுமென தமிழ் மக்கள் வேண்டுகின்றனர்.
இன்று தேசியத்தலைவரின் ஆசியுடன் என்று சொல்கின்ற இன் நிறுவனம், ஏன் தேசியத்தொலைக்காட்சியுடன் சேர்ந்து இயங்கிடல் கூடாது. வெக்டோன் தேசிய தொலைக்காட்சியின் ஆங்கில சேவையாக செயற்படலாமே.....
தமிழ் அன்பன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->