09-18-2003, 03:15 PM
எங்கை தொடங்கிறது எண்டுதான் தெரியேல்லை. சரி எனக்கு நடந்த கதையை முதலில் சொல்லுறன். பணிப்பாளருக்கு திருமலையில் ஒரு தடவை ஒரு வாகனம் தேவைப்பட்டது. தாம் சம்பந்தப்பட்ட இயக்கத்திற்காக களவு செய்வதற்கு. அதற்கு எனது அண்ணனை இவர் தனது சகாக்களுடன் அணுகி மிரட்டினார். அப்ப இவையின்றை ஆட்சிக்காலம். பக்கத்தி நாட்டு படை வேறை இவையின்றை காவலுக்கு. இவை நடத்த இருந்த கடத்தல் போதை வஸ்து கடத்துவது. இதற்ககாவே எனது அண்ணன் இவர் அப்போ ஒரு அரச உத்தியோகத்தன், அரசின் வாகனம் எனவே கொழும்புக்கு செல்ல தடை, சோதனை எதுவும் கிடையாது. போதைவஸ்தை கொழும்புக்கு கடத்த அண்ணருக்க கொடுக்கப்பட்ட வாகனத்தை தருமாறு பணிப்பாளர் தலைமையில் வந்த குழு மிரட்டியது. அண்ணன் தர மறுக்கவே நீ இதக்க வெகு விரைவில் பதில் சொல்வாய் என்று விட்டு சென்றவரக்ள. அன்றிரவு வீட்டுக்கு வந்தனர். அனைவருக்கும நல்ல வெறி, நல்லவேளை அண்ணன் இல்லை. அங்கு வந்து எனத அம்மாவை கண்டபடி து}சணத்தில் பேசி, விட்டு உன்றை மகன்மார் இருண்டு பேரையும் விட்ட வைக்க மாட்டம் என்று கூறி விட்டு வீட்டில் கிடந்த சாமான் களை அடித்து நொருக்கியதுடன் அம்மாவின் நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர். அப்பாவுக்கு அதை பார்த்ததில் மார்படைப்பு வேறு அடுத்த நாள் வந்து விட்டது. நல்லவேளை நமது வீட்டுக்கு அருகில் ஒரு வைத்தியர் இருந்ததால் உயிர் பிழைத்தார். அன்றிரவு நானும் அண்ணனும் நல்ல வேளை மாமி வீட்டில் தங்கினோம். இல்லை என்றால் அன்றே நம்மை கடத்தி முடித்திருப்பாரகள். அன்று ஊரை விட்டு வெளிக்கட்டவர்கள் தான் நானும் எனது அண்ணனும் இன்னமும் போகவில்லை. அடுத்த நாள் பணிப்பாளர் குழு கட்டிய கதை, புலிகள் நம் வீட்டை கொள்ளையடித்தார்கள் என்று. இது அவர் செய்த விழையாட்டில் ஒரு துரும்பு. இன்னமும் பல இருக்கு. பணிப்பாளர் திருமலையில் செய்த கொலை பற்றிய சில தகவல் எனக்கு தெரியும் ஆனால் ஞாபகம் வரவில்லை. திருமலையில் என் நண்பனுடன் தொடர்பு கொண்டு நிச்சயம் எழுதுவேன்.

