09-18-2003, 01:56 PM
தலை கால் எண்டு தயவு செய்து குழம்ப வேண்டாம். ஒரே நபரால் பிரச்சனைப்பட்ட பலர் ஒன்று சேர்வது ஒன்றும் புதிதல்ல. தடை செய்யப்பட்ட நண்பர் கூட உன்னால் ஒரு விரோதியாக ஒரு காலத்தில் கருதப்பட்டவர். சேதுவைப்பற்றி எனக்கு தெரியாது. அனால் இவரும் பணிப்பாளரால் சூடுகண்ட பூனை. ஆனால் பணிப்பாளர் பற்றி முன்பு நான் பலரிடம் கூறிய போதும் பலர் நம்பவில்லை. முன்னை நாள் அறிவிப்பாளர்கள் சிலர் என்னுடன் சண்டைக்கு கூட வந்தனர். அதனால் தான் பொறுமையுடன் இவ்வளவு காலமும் இருந்தேன். இனியும் பொறுக்க முடியாது எள்ற கட்டத்தில் தான் இவற்றை எழுதுகிறேன். பணிப்பாளரின் முழுக் கதையையும் நான் முன் பார்த்தவன். இந்த நாட்டில் இவர் வானொலி அமைக்க தொடங்கும் போது நான் வந்த புதிது. திருமலையில் அயல் நாட்டு இராணுவத்துடன் வந்து செய்த அட்காசம் வரலாற்றில் மறக்க முடியாதது. இதையெல்லாம் அவர் மறந்தாலும் பாதிக்கப்பட்ட என்போன்றவர்கள் மறக்க முடியாது. வானொலி பற்றி எனக்கு அக்கறையில்லை, ஆனால் இவர்போன்றவரகள் மக்களை ஏமாற்றுவதை இனியும் நாம் விட்டு வைக்க கூடாது.

