Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒருகதை
#26
<span style='font-size:30pt;line-height:100%'>... பட்டால்தான்...</span>
கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவையாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான்.
எட சண்முகநாதன் நான் ஆரோ கள்ளர் கள்ளதிறப்பு போட்டு கதவை திறக்கிறாங்கள் எண்டு நினைச்சன் எங்கையடா ஒருகிழமை லீவுஎண்டனி அதுக்குபிறகு நாலுநாளா ஆளை காணேல்லை உன்ரை கான் போனுக்கும் அடிச்சுபாத்தன் வேலை செய்யேல்லை என்னடா உன்ரை கோலம் தலைமயிருக்கு கலரும் அடிச்ச காதிலை தோடு கோலம் மாறிப்போய் வந்திருக்கிறாய். எங்கை போனனி??

இல்லைமச்சான் சிவா ஒருகிழைமை லீவுதானே அதுதான் நானும் இவள் நத்தாசாவும் கொலண்டுக்கு போனனாங்கள்.இப்பதான் வந்தனாங்கள். அதுதான் என்ரை கான் போனையும் நிப்பாட்டி வைச்சிருந்தனான் .அதுசரிநீயென்ன எழுதிகொண்டிருக்கிறாய்?.

அதுஆர் நத்தாசா

அதுதான் மச்சான் அண்டைக்கு என்னேடை பஸ்சிலை கண்டாய் அவள்தான்

ஓ சண்முகநாதா அந்த ஊதினா பறந்து போற மாதியொருத்தி உயரமா வெள்ளை தலைமயிர் அவளோ

ஓம் அவள்தாண்டா சிவா

அது சண்முகநாதன்....

நிப்பாட்டுமச்சான் எத்தினைதரம் சொல்லியிருக்கிறன் என்ரை முழுப்பெரை சொல்லி கூப்பிடாதையெண்டு சண் எண்டு சுருக்கமா கூப்பிடு.உன்னாலை என்ரை பிரெஞ்சுகார சினேகிதர் எல்லாம் என்னை நக்கல் அடிக்கிறாங்கள். உன்க்கு எத்தனை தரம் சொன்னாலும் கேட்கமாட்டாய்.

சரி சரி சண் கேவிக்காதை பழகிப்போட்டுது அதுதான்ரா சின்னனிலையிருந்து நீயும் நானும் சினேகிதம் கூப்பிட்டுபழகிப்போட்டுது.அதுசரி பிரெஞ்சுகாரனும்தான் கல்லு .மண். முட்டாள் எண்டு பேர் வைச்சிருக்கிறான் அதை நாங்கள் நக்கலடிக்கிறமா? அதைவிடுநானும் நீ ஏதோ பொழுது போக்கா உந்த வெள்ளையளோடை சினேகிதமா திரியிறாய் எண்டுதான் நினைச்சனான். ஆனா உன்ரை போக்கு பிழையாய் தெரியிது.சொல்லுறனெண்டு கோவிக்காதையடா.ஊரிலை உன்ரை மனிசி பிறந்து இன்னமும் நேரை உன்ரை முகத்தை பாக்காத உன்ரை பிள்ளை. உதுகளை விட்டிட்டு நீ வெள்ளைக்காரிக்கு பின்னாலை திரியிறாய் அதுகள் பாவமல்லோ.

ஆஆ தொடங்கிட்டான்ரா மச்சான் சிவா உன்ரை புத்திமதியை கொஞ்சம் நிப்பாட்டு ஏதோ அந்த நேரம் வீட்டுகாரர் கலியாணம் செய்ய சொன்னதாலை தெரியா தனமா கட்டிப்போட்டன்.அதுக்கு இப்ப என்ன செய்ய சொல்லுறாய்.மனிசிபிள்ளையை இஞ்சை கூப்பிடசொல்லுறியா?.உனக்கே தெரியும் என்ரை மனிசி ஒரு சுத்த பட்டிக்காடு அதுக்கு இஞ்சத்தைய நாகரீகங்கள் சரிவராது அதை இஞ்சை கூப்பிட்டு என்ன செய்ய சொல்லுறாய்.அதுமட்டுமில்லை பிரெஞ்சுகாரியை பிடிச்சாத்தான் மச்சான் பாசையும் கெதியா பிடிக்கலாம்.வேணுமெண்டா நீயும் ஒண்டு பிடியன்

அண்டைக்கு படம் அனுப்பியிருக்குதுகள்.மனிசி எண்ணைவைச்சு தலையைவழிச்சிழுத்து.பிள்ளைக்கு நெத்தியிலை கன்னத்திலை முக்கிலையெண்டு பொட்டு வைச்சு வாழைப்பாத்திக்கை நிண்டு படம் எடுத்து அனுப்பியிருக்கிதுகள்.என்னெண்டு கேட்டா கதலிவாழை குலைபோட்டு வடிவாயிருக்காம் அதுதான் பட மெடுத்தவையாம்.அப்ப இதுகளை இஞ்சை கூப்பிட்டு என்ன செய்ய சொல்லுறாய்

அடேய் சண் உன்ரை கதையைபாத்தால் எங்கடை அரைவாசிப்பேர் வெளிநாட்டுக்கு வந்திருக்கேலாது. ஏன் நீகூடத்தான் ஊரிலை நீ எப்பிடி திரிஞ்சனியெண்டு கொஞ்சம் நினைச்சு பாத்தனியே. ஏதோ எங்கடசனம் இங்கை வந்து இந்த நாடுகளிற்கும் ஏத்தமாதிரி தங்களை கொஞ்சம் மாத்திகொண்டுதானே வாழுதுகள்.நான் முடிஞ்சா பாசையை படிச்சு பிடிக்கிறன் இல்லாட்டி தெரிஞ்சதை கதைச்சு போட்டு போறன் உப்பிடித்தான் பாசை பிடிக்கவேணுமெண்டில்லை
உன்ரை மனிசிபட்டிக்காடு என்டுறாய் அந்தபட்டிக்காட்டாள் தந்த சீதன காசிலைதான் நீ வெளிநாடு பாத்தனி அதைவிட உனக்கு ஒண்டரை வயசிலை ஒரு பொம்பிளைப்பிள்ளையும் இருக்கு. உன்ரை மனிசிஉன்னினை எவ்வளவு அன்பிருந்தபடியா உன்ரை பேரையே சுருக்கி உன்ரை மகளுக்கும் சண்முகி எண்டு பேர்வைச்சிருக்கும். கொஞசம் யோசி மச்சான்.


சிவா எனக்கு உன்ரை புத்திமதி கேக்க நேரம் இல்லை உன்ரை மனிசி வரப்போகுதெண்டு சொன்னனி அதாலை நானும் உன்னோடை இனி வீட்டிலை இருக்கேலாது.நானும் நத்தாசாவும் ஒரு வீடு எடுத்திருக்கிறம்.நேரம் கிடைக்கேக்கை நான் வந்து என்ரை சமான்களை எடுக்கிறன். அதை சொல்லத்தான் வந்தனான் போட்டுவாறன்.

டேய் சண் கோவிக்காதை ஏதோ நல்ல சினேதன் எண்ட உரிமையிலை கனக்க கதை;ச்சுப்போட்டன்.வந்தனி பங்குஆட்டிறைச்சி வாங்கி கறிவைச்சிருக்கிறன் சாப்பிட்டு போவன்.ஏதோ உன்ரை புத்திக்கெட்டினபடி நட.

சிவா இதுதான் இதுதான் பங்காடு மாதகடைசியிலை சீட்டு வட்டி கலியாணம் காதுகுத்து எண்டு இப்பிடியே வாழ்ந்து கொண்டிருங்கோ.நான்போட்டுவாறன்.
சண் கோவமாக வெளியேறுகிறான். கடவுளே நீதான் இவனுக்கு நல்வபுத்தியை கொடுக்கவேணும் என்று நினைத்தபடி தான் மனைவிக்கு எழுதிகொண்டிருந்த கடிதத்தை தெடர்கிறான்.

சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு திருமணவரவேற்பு வீட்டில். காய் சிவாஎன்று ஒரு குரல்
சிவா திரும்பிபாத்தான்.
டேய் சண் எப்பிடியடா இருக்கிறாய். உன்னை கண்டு கனகாலம்என்ரை மனிசி வந்ததுக்கு மற்றது பிள்ளை பிறந்ததுக்கு எண்டு உனக்கு சொல்லுவமெண்டு உன்ரை கான் போனுக்கு அடிச்சனான் வேலை செய்யேல்லை வேறை ஆக்களை விசாரிச்சனான் நீ வேறை இடத்தை போட்டாயெண்டு சொன்னாங்கள்.எப்பிடியிருக்கிறாய் எங்கை உன்ரை நம்பரைதாவன்.உன்ரை வீட்டுகாரரும் உன்னை தேடி என்னட்டை அடிக்கடி விசாரிச்சபடி.

வீட்டுகாரரின்ரை துன்பம்தாங்கேலாமைதான் சிவாநான் நம்பரை மாத்திப்போட்டன்.என்ரை நம்பரை தந்தா நீகட்டாயம் வீட்டுகாரரிட்டை குடுத்துடுவாய்.உன்ரை நம்பர் என்னட்டையிருக்குதானே ஏதும் தேவையெண்டால்நான் அடிக்கிறன்.மற்றது தற்செயலா அண்டைக்கு இவன் ரவி கண்டிட்டு தன்ரை கலியாணத்திற்கு கட்டாயம் வரவேணுமெண்டு அடம் பிடிச்சான்.
நத்தாசாவும் எங்கட கலியாணத்தை பாக்க வேணுமெண்டு கேட்டாள் அதுதான் வந்தனான்.
என்கூறிக்கொண்டிருக்கும்போதே நத்தாசா அங்கு வந்தாள். சிவா தன்னையும் தன்மனைவி பிள்ளையையும்அவளிற்கு அறிமுகம்செய்து வைத்தான்.

விருந்து தொடங்கியது பலவகை மதுக்களும் பரிமாறப்பட்டது.இசை மெல்லமெல்ல உயரதெடங்க கொஞ்சம் கொஞ்சமாக பலரும் நடனமாட தொடங்கினர்.நத்தாசாவும் சண்ணும் ஆடதொடங்க அவர்களே அந்த விருந்தில் முக்கிய பாத்திரமானார்கள்.
பலரின் கண்களும் அவர்களையே பார்த்தபடியிருந்தன.
என்ன சொன்னாலும் சண் மச்சகாரண்டா பார் பிடிச்சாலும் பிடிச்சான் புளியம் கொம்பா பிடிச்சிருக்கிறான்.என்று ஒருவர் கூறியது சண்ணின் காதில் விழுந்தது.

இன்னெருவர்.அங்கைபார் என் வளவளவெண்டுஉடம்பு என்னமா ஆடுறாள் நீயும் இருக்கிறியே சோத்தை திண்டு திண்டு அரிசி ழூட்டை மாதிரி ம்ம்ம்..சண் குடுத்து வைச்சவன் என்றார்.
சண்ணிற்கோ தலைகால் புரியாத மகிழ்ச்சி மட மடவென்று விஸ்கியை உள்ளே இறக்கிகொண்டு வீழுந்து பிரண்டு ஆடிக்கொண்டிருந்தான்

மறுநாள் மதியம் நத்தாசா சண்ணை நித்திரையிலிருந்து எழுப்பினாள்.
சண் எழும்பு வெளியிலை போய் ரெஸ்ரோரண்டிலை சாப்பிட்டிட்டு இரவுக்கு நாங்கள் வழமையா போற கிளப்பிற்கு போகலாம்.

சண் தலையை நிமிர்த்திபாத்தான்.ஆஆ தலையிலை கல்லை வைச்சமாதிரி பாரமா இருக்கு ராத்திரி கனக்க அடிச்சிட்டன் சரியா தலையிடிக்கிது. நத்தாசா கட்டாயம் இரவுக்கு கிளப்பிற்கு போகத்தான் வேணுமோ??.

சண் என்ன கேள்வி ஒவ்வொரு சனிக்கிழைமையும் வழமையா போறதுதானே மருந்து குளிசை இரண்டை போடும் எல்லாம் சரியாயிடும். நாளைக்கும் லீவுதானே நல்லா படுத்து நித்திரை கொள்ளலாம்.

சொன்னா இவள் கேக்கவா போறாள் என நினைத்தவாறே போய் சில குளிசைகளை வாயில் போட்டு தண்ணிகுடித்து கொண்டு தயாரானான்.
இருவரும் ஒரு உணவு விடுதியில் உணவருந்திவிட்டு உலாவி விட்டு இரவு 11 மணியளவில் வழக்கமாக செல்லும் இரவுவிடுதிக்குள் நுளைந்தனர்.

சண்ணிற்கு தலைவலி தீராமல் நெற்றியை கையால் பிடித்தபடியே உள்ளே நுளைந்ததும்.ஒரு விஸ்கி ஐஸ் சொன்னான்.

நத்தாசா உன்க்கு என்ன வேணும் நான் திருப்பி விஸ்கி குடிச்சாத்தான் தலையிடி நிக்கும். நத்தாசா சம்பெய்ன் என்றாள்.இருவரும் தங்கள் குடிவகைகளை பொற்றுக்கொண்டதும் கிளாசோடு கிளாசை முட்டி அளவு சரியாக இருக்கிறதா எனப்பார்த்து விட்டு(சின் அல்லது சியஸ்)மதுவை அருந்தினர்.

வா சண் ஆடலாம் நத்தாசா சண்ணின் கைகளை பிடித்தாள் .
இல்லை நத்தாசா எனக்கு இண்டைக்கு ஆடுற மனநிலையில்லை உடம்பு சரியில்லை நீ போய் ஆடு நான் பிறகு வாறன் .

நத்தாசா ஆடப்போய்விட்டாள்.சண் இன்னெரு விஸ்கிக்குசொல்லிவிட்டு நத்தாசாவின் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது ஒரு கறுப்பினத்தவன் (ஆபிரிக்கன்) நத்தாசாவிடம் வந்து நான் உன்னுடன் ஆடலாமா என்றான். தாராளமாக என்று நத்தாசா அனுமதித்தாள். இருவரும் பக்கம் பக்கமாக நின்று ஆடிக்கொண்டிருந்தனர்.நிமிடங்களை மணித்தியாலம் விழுங்கிக்கொண்டிருந்தது.

சண் தனது எட்டாவது கிளாசை முடித்து விட்டு ஒன்பதாவதிற்குள்நுளைந்தான் இப்போ அவனிற்கு தலைவலி போய் போதை தலையில் கிறுகிறுத்தது.நிமிர்ந்து நத்தாசாவை பார்த்தான். அவளிற்கும் அந்த கறுப்பனிற்குமான இடைவெளி குறைந்து கறுப்பன் நத்தாசாவை பின்புறமாக கட்டிபிடித்தபடி காற்று கூட புகமுடியாத நெருக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தான்.

சண்எழுந்தான் சற்று தடுமாறியவன் சதாகரித்துக்கொண்டு நத்தாசாவிடம் போய். வா நத்தாசா வீட்டிற்கு போகலாம்.

என்ன சண் இப்பதானே இரண்டுமணி என் அவசரம் கொஞ்சம் பொறு போகலாம்.

இல்லை நத்தாசா என்னாலை நிக்கேலாது போவம் வா. என்று அவளின் கையை பிடித்த இழுத்தான்.
அப்போ அவளுடன் ஆடிக்கொண்டிருந்த கறுப்பன்சண்ணிடம்.ஏய் என் அவளை இடஞ்சல் செய்கிறாய். என்று கேட்க. சண் அவனை தள்ளிவிட. விழப்போனகறுப்பன் தட்டுதடுமாறி எழந்து கைவிரல்களை மடக்கி ஓங்கி சண்ணின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

அம்மா...... சண் தன்னையறியாமல் தமிழில் கத்தியபடி கீழேவிழ.நத்தாசாவும் கத்த விடுதி வாசல் காவலாளி வந்து முவரையம் வெளியேற்றினான் வெளியே வந்த சண்ணிற்கு உதடுகள் வெடித்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது ஒரு கடதாசியினால் வாயை பொத்தியபடி போய் காரில் ஏற நத்தாசா காரை ஒட்டியபடி. சண் நீயேன்......

நத்தாசாஇப்ப ஒண்டும் கதைக்காதை என்னாலை கதைக்க ஏலாதுவீட்டை போய் கதைப்பம்.

வீட்டிற்கு வந்ததும் கண்ணாடியில் போய்பார்த்தான் கீழ் உதடு வெடித்து வீங்கியிருந்தது. பாவிப்பயல் தன்ரை சொண்டுமாதிரியே எனக்கும் வீங்கவைச்சிட்டான். என்றவாறு போய் ஒர ஐஸ் கட்டியை எடுத்து உதடுகளில் ஒற்றியடி இன்னொரு ஐஸ் கட்டியை கிளாசில் போட்டு கொஞ்சம் விஸ்கியை ஊற்றினான்.

சண் போதும் நிப்பாட்டுநீகனக்க குடிச்சதாலைதான் கிளப்பிலையும் பிரச்சனை.
என்ன என்னாலை பிரச்சனையோ நான்வரச்சொல்லேக்கை வந்திருந்தா ஒருபிரச்சனையும் வந்திருக்காது உனக்கு அந்த கறுப்பனோடை ஆடவேணும்அதுதான் பிரச்சனை.

இருவருக்குள்ளும் வார்த்தைகளில் வன்முறை முற்றி அசிங்ககங்களாய் வந்து விழுந்தன.


என்னடி சொன்னனி என்ரை பிறப்பையா கேவலமாய் பேசிறாய் என்றபடி சண் கையை ஓங்க.

என்ன அடிப்பியா அடிபாப்பம். வெளியே போடா தமிழ்நாயே என்றுநத்தாசா கத்த சண்ணிற்கு அப்போதான் ரோசம் பொங்க அவளின் கன்னத்தில் ஓங்கியறைந்தான்.
அவளும் கத்தியபடி சண்ணை நகங்களால் கீறித்தள்ள. இவர்களின் சத்தத்தில் அக்கம் பக்கத்தவர்கள் விழித்து கொள்ள வீட்டின் அழைப்பு மணியை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டு சண் கதவை திறந்தான்.

பக்கத்து வீட்டுக்காரர். இப்ப நேரம் என்ன நாங்கள் நித்திரை கொள்வதில்லையா??சத்தத்தைநிறுத்துகிறீர்களா அல்லது பொலிசுக்கு போன்பண்ணவா என்று கேபமாய் கேட்க அந்த தருணம் பார்த்து நத்தாசா சண்ணை வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டாள்.

நத்தாசா கதவை திற கத்திப்பார்த்தான் அந்த கட்டிடத்திலிருந்த மீதிப் பேரும் விழித்துக்கொள்ள நிலமை மேசமாவதை உணர்ந்த சண் கதவிற்கு காலால் ஓங்கி உதைந்து விட்டு கீழிறங்கி வந்து கட்டிடத்தின் படிகளில் அமர்ந்தவாறு காற்சட்டைபைக்குள் கைவிட்டான் அப்பாடா நல்லவேளை சிகரற்றாவது பொக்கற்றுக்கை கிடக்கு.என்றவாறு ஒருசிகரற்ரை பற்றவைத்து ஒரு இழுவை இழுத்துவிட காவல்துறை வாகனமொன்று அவனருகில் வந்து நின்றது.
போச்சுடாவந்திட்டாங்கள். பக்கத்துவீட்டுகாரன் ஆரோ அடிச்சிட்டாங்களா? இல்லை இவள் நத்தாசா தான் அடிச்சு கூப்பிட்டாளோ தெரியாது என்று நினைத்தபடியிருக்க ஒரு அதிகாரி அவனிடம் வந்து .வணக்கம் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் என்றார்.

என்ரை அடையாள அட்டை மேலை வீட்டிலை இருக்கு எனக்கும் என்ரை நண்பிக்கும் ஒரு சின்னப் பிரச்சனை அதுதான் ..... என்று இழுக்கஒருஅதிகாரி அவனை சுவருடன் சாத்தி வைத்து காலிலிருந்து தலைவரை தடவி சோதனை போட்டுவிட்டு


நத்தாசா என்று ஒருபெண்தான் எங்களை வரவழைத்தார் அவரா உங்கள் நண்பி வாருங்கள் மேலே உங்கள் வீட்டிற்கு போகலாம் என்றவாறு
அவனையும்கொண்டு வீட்டிற்கு போனார்கள் நத்தாசா அழுதழுது அடித்ததாக முறையிட்டாள்.அவர்கள் ஒரு கடதாசியில் விபரங்களை எழுதிக்கொண்டு நாளை ஞாயிற்றுகிழைமை விடுமுறைநாள் எனவே திங்கட்கிழைமை காலை நத்தாசாவை காவல் நிலையத்திற்கு வரும்படி கூறிவிட்டு சண்ணிற்கு விலங்கடித்து கொண்டு போய் விட்டார்கள்.திங்கள் காலை ஒரு காவலதிகாரி வந்து சண்ணை அழைத்தகெண்டு போய் ஒருமேலதிகாரிமுன் இருத்தினார்.மேலதிகாரி சில சம்பிரதாய பெயர்விபர கேள்விகளை கேட்டுவிட்டு உங்கள் நண்பி காலை வந்தார் உங்களிற்கு நல்ல காலம் அவர் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் நீங்கள் இனி அவர் இருக்குமிடத்திற்கு போகவோ வேறு வழிகளில் அவரிற்க தொந்தரவு கொடுக்கவோ கூடாது உங்கள் கைத்தெலை பேசியும் பணப்பையையும் அவர் கொண்டு வந்து கொடுத்து விட்டு போயிருக்கிறார் மேலதிகமாக ஏதும் உங்கள் உடமைகள் அவரிடம் இருந்தால் நீங்கள் எங்களின் உதவியுடன் தான் அவற்றை பெற்று கொள்ளலாம்.உங்களை எச்சரித்து விடுவிக்கிறேன் நீங்கள் போகலாம் என்றார்.



சண் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தான். நல்ல வேளை அவள் வழக்கு போடேல்லை தப்பிட்டன் இனி அவள் இருக்கிற பக்மே போகூடாது எல்லாத்திற்கும் ஒரு கும்பிடு என்று நினைத்த கொண்டு இப்பை எங்கை போறது கைத்தெலைபேசியை எடுத்து சிவநாதனின் இலக்கத்தில் அமத்தினான்.

கலோ நான் சண் எங்கை வேலையிலையே நிக்கிறாய் கொஞ்சம் பிரச்சனை மச்சான்.இப்ப றோட்டுக்கு வந்திட்டன் என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை அதுதான் உன்க்கு அடிச்சனான்.

உதெல்லாம் நான் எதிர்பாத்ததுதான்டா சண் சரிசரி எனக்கு இன்னும் ஒருமணித்தியாலத்திலை வேலை முடிஞ்சிடும் எங்கை நிக்கிறாயெண்டு சொல்லு நான் வந்து உன்னை ஏத்துறன்

சிவா போய் சண்ணை தனது வண்டியில் ஏற்றிதனது வீட்டிற்கு கூட்டிப்போனான். போகும் வழியில் சண் நடந்தவைகளை சிவாவிற்கு கூறிக்கொணடே வீடுபோய் சேர்ந்தனர்.

சண் இரண்டுநாளாய் நீ பொலிசிலை வடிவா சாப்பிட்டோ நித்திரையோ கொண்டிருக்கமாட்hய் போய் குளிச்சுட்டுவா நேற்று பங்குஆடுவாங்கின்னான் மனிசி அந்தமாதிரி கறி வைச்சிருக்கு சாப்பிட்டு வடிவா நித்திரையை கொள்ளு.இந்தா துவாயும் உடுப்பும்.

சண் நன்றாக குளித்து உடை மாற்றிகொண்டு கண்ணாடியில் ஒரு முறைபார்த்தான்.காதிலும் நாக்கிலும் குத்தியிருந்தவையெல்லாத்தையும் கழற்றி குப்பை கூடைக்குள் எறிந்து விட்டு வெளியே வந்தான்.

சண் வா மச்சான் சாப்பிடுவம் நான் இனியும் உனக்கு புத்திமதி சொல்ல தேவையில்லை உன்னிலை மாற்றம் தெரியிது இனியெண்டாலும் யோசிச்சு நட.

ஓம்சிவா நான் கன பிழை விட்டிட்டன் சாப்பிட்டு முதல் வேலையா வீட்டிக்கு போன் அடிக்க வேணும்.

சண் வீட்டு இலக்கத்தை அழுத்த மறுமுனையில் அவனின்தாயார். தம்பி உனக்கு என்னடா நடந்தது இரண்டு வருசமா ஒரு தகவலும் இல்லை நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை வைக்காத நேத்தியில்லை நல்லாயிருக்கிறியே அப்பு பாவமடா உன்ரை மனிசி ஒவ்வொரு நாளும் கண்ணீரும் சோறும்தான் திண்டபடி இந்தா அவளோடை முதல்லை கதை.தெலை பேசி கை மாறியதுஅவளின் குரல்விம்மியபடி எப்பிடியப்பா இருக்கிறியள் உங்களுக்கு ஒண்டும் இல்லையே நாங்கள் எல்லாரும்சரியா பயந்து போய் இருந்தநாங்கள் . என்று அழுகையும் கதையும் மாறிமாறி வந்தது

எனக்கு ஒண்டும் இல்லை நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ இனி நான் அடிக்கடி ரெலிபோன் எடுப்பன் அம்மா அப்பாவையும் கவலைப்பட வேண்டாமெண்டு சொல்லு.பிள்ளை சண்முகி என்ன செய்யிறாள்.

அவள் இப்ப நல்லா கதைக்கிறாள் அடீக்கடி உங்களை எங்கையெண்டு கேப்பாள் இந்தாங்கோத கதையுங்கோ சண்முகி ஓடியா அப்பா கதைக்கிறார்.
அப்பா எங்கையப்பா இருக்கிறீங்கள் ஏன் என்னை பாக்க வாறேல்லை.அம்மாட்டை உங்களை கேட்டால் அம்மா அழுவா ஒண்டும் சொல்லுறேல்லை ஏனப்பா.??
அந்த குழந்தையின் மழலையில் தத்தி தத்தி வந்து விழுந்த கேள்விகளிற்கு பதில்சொல்த்தெரியாமல் சண்ணின் கண்கள் கலங்கியது.

பிள்ளை அப்பா உங்களையும் அம்மாவையும் கெதியா அப்பாட்டை கூப்பிடுறன் என்ன அப்பாவை கெதியா பாக்கலாம்.அம்மாக்கு இனி கரைச்சல் குடுக்கூடாது என்ன நல்ல பிள்ளை. தொலை பேசி கதை;தது முடித்து விட்டு படுக்கப் போனான்.

அவனது குழந்தையின் குரல் அவனது காதுகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது 'அப்பா எப்ப எங்களை பாக்க வருவீங்கள்...."கெதியாய் அவர்களை கூப்பிடுற அலுவல்களை பார்க்க வேண்டும் என நினைத்தவாறே நித்திரையாகிப் போனான்..


பிற்குறிப்பு:சண் இப்பொழுது வேறொரு நகரத்தில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். நத்தாசா ; நான் வேலைசெய்யும் இரவு விடுதிக்கு இடை யிடை வந்து போவாள் ஒவ்வொரு தடைவையும் ஒவ்வொருத்தருடன். இன்னமும் பல சண்முக நாதன்கள் எம்மிடையே புலத்தில் உள்ளனர் அவர்களும் திருந்துவார்களா?? மீண்டும் உங்களை உண்மை கலந்த கற்பனையுடன் சந்திக்கிறேன்.
; ;
Reply


Messages In This Thread
ஒருகதை - by shiyam - 03-28-2005, 06:53 PM
[No subject] - by shiyam - 03-28-2005, 06:59 PM
[No subject] - by Danklas - 03-28-2005, 08:36 PM
[No subject] - by shanmuhi - 03-28-2005, 10:01 PM
[No subject] - by shiyam - 03-28-2005, 10:58 PM
[No subject] - by shanmuhi - 03-28-2005, 11:07 PM
[No subject] - by tamilini - 03-28-2005, 11:33 PM
[No subject] - by hari - 03-29-2005, 06:26 AM
[No subject] - by thivakar - 03-29-2005, 07:51 AM
[No subject] - by Vasampu - 03-29-2005, 11:07 AM
[No subject] - by Vasampu - 03-29-2005, 11:09 AM
[No subject] - by kuruvikal - 03-29-2005, 12:05 PM
[No subject] - by Thusi - 03-29-2005, 12:06 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 12:07 PM
[No subject] - by MUGATHTHAR - 03-29-2005, 12:15 PM
[No subject] - by kuruvikal - 03-29-2005, 12:24 PM
[No subject] - by kuruvikal - 03-29-2005, 12:35 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 01:05 PM
[No subject] - by shobana - 03-29-2005, 02:32 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 05:26 PM
[No subject] - by THAVAM - 03-29-2005, 10:00 PM
[No subject] - by shiyam - 03-30-2005, 01:57 AM
[No subject] - by THAVAM - 03-30-2005, 08:20 AM
[No subject] - by aswini2005 - 03-30-2005, 12:31 PM
[No subject] - by shiyam - 03-30-2005, 12:41 PM
[No subject] - by shiyam - 04-26-2005, 04:06 PM
[No subject] - by Mathan - 04-26-2005, 05:12 PM
[No subject] - by shiyam - 04-26-2005, 05:36 PM
[No subject] - by Mathan - 04-26-2005, 05:39 PM
[No subject] - by KULAKADDAN - 04-26-2005, 09:43 PM
[No subject] - by shanmuhi - 04-26-2005, 10:27 PM
[No subject] - by shiyam - 04-27-2005, 10:25 PM
[No subject] - by Danklas - 04-27-2005, 11:12 PM
[No subject] - by shobana - 04-28-2005, 11:42 AM
[No subject] - by sinnappu - 04-28-2005, 12:30 PM
[No subject] - by shiyam - 06-04-2005, 06:30 PM
[No subject] - by THAVAM - 06-04-2005, 07:53 PM
[No subject] - by Mathan - 06-04-2005, 08:25 PM
[No subject] - by tamilini - 06-04-2005, 09:05 PM
[No subject] - by shiyam - 06-04-2005, 10:07 PM
[No subject] - by tamilini - 06-04-2005, 10:10 PM
[No subject] - by shiyam - 06-04-2005, 10:13 PM
[No subject] - by AJeevan - 06-04-2005, 10:18 PM
[No subject] - by THAVAM - 06-04-2005, 10:20 PM
[No subject] - by sathiri - 06-04-2005, 10:25 PM
Re: ஒருகதை - by AJeevan - 06-04-2005, 11:30 PM
[No subject] - by Mathan - 06-04-2005, 11:59 PM
[No subject] - by KULAKADDAN - 06-06-2005, 10:27 PM
[No subject] - by இளைஞன் - 06-06-2005, 10:37 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 10:54 PM
[No subject] - by இளைஞன் - 06-06-2005, 11:06 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 11:21 PM
[No subject] - by KULAKADDAN - 06-06-2005, 11:49 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 11:54 PM
[No subject] - by அனிதா - 06-07-2005, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 12:57 AM
[No subject] - by Mathan - 06-07-2005, 12:57 AM
[No subject] - by AJeevan - 06-07-2005, 01:41 AM
[No subject] - by shiyam - 08-29-2005, 11:50 PM
[No subject] - by Danklas - 08-30-2005, 04:47 AM
[No subject] - by வெண்ணிலா - 08-30-2005, 06:41 AM
[No subject] - by shiyam - 08-30-2005, 06:55 AM
[No subject] - by tamilini - 08-30-2005, 10:31 AM
[No subject] - by KULAKADDAN - 08-30-2005, 11:24 AM
[No subject] - by Rasikai - 08-30-2005, 12:37 PM
[No subject] - by tamilini - 08-30-2005, 01:17 PM
[No subject] - by KULAKADDAN - 08-30-2005, 03:14 PM
[No subject] - by shanmuhi - 08-30-2005, 07:51 PM
[No subject] - by Senthamarai - 08-31-2005, 09:14 AM
[No subject] - by Mathan - 08-31-2005, 11:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)