Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசந்தம் வந்தும்...
#1
<img src='http://img256.echo.cx/img256/6562/bird127to.jpg' border='0' alt='user posted image'>

<b>வசந்தமிது வசந்தம்
பூமித்தாயின் விந்தையிது
அதிகாலை வேளையது
குருவி தானும் பாட்டெடுக்க
தென்றல் தானும் தாள மிட
தெம்மாங்கு விழுகுது காதெங்கும்..!

மலரவள் மொட்டு விரியும் நேரமது
பனித்துளி தூவுது பன்னீர்
ஆதவன் கரங்கள் சீராட்ட
காற்றுக் காவுது வசீகர வாசம்
கனவுகள் பெருகுது
வர்ணம் வர்ணமாய்...!

சோலையவள் கோலம் மாற்றி
பசுமைச் சேலை கட்ட
தோப்பெங்கும் பறவைகள்
கும்மியடிக்குது
துள்ளியோடும் புள்ளி அணில்
தூது செல்ல
சருகுகள் சரசரத்தே
சேதி சொல்லுது...!

பள்ளிச் சிட்டுக்கள்
பாடச் சுமை இறக்கிச் சிறகடிக்க
மகிழ்ச்சியங்கு களைகட்டுது..!
சின்ன உயிருமங்கே
சுறுசுறுப்பாய் இயங்குது
சிறப்பான காலத்துள்
தன்னினம் பெருக்கிட....!

வண்ணத்துப் பூச்சியவள்
"பஷன் சோ" காட்ட
மலர்களங்கே ஏங்கித் தவிக்குது
சமயம் பார்த்துத்
கள்ளனவன் கருவண்டு
திருடுகிறான் அமுதம்
மகரந்தமது காற்றில் பறந்து
துப்புத்துலக்குது...!

போர்த்துத் திரிந்த மனிதரெல்லாம்
போர்வை விலக்கி
முக்கால் முழத்தோடு அலைய
கண்கள் பலதும் கூட அலையுது
காட்சிகள் இலவசமாய்க் காண...!
அங்கு...
கார்கள் கூட விதிவிலக்கல்ல
அவையும் கூட ஆடை கழற்றுது...!

இப்படியாய்...
வசந்தக் கதை வாசமாய் வீச
சொந்தக் கதை சோகமாய்
அன்பு செய்யும் வேளை வந்தும்
மலரவள் ஊடல் நேரம் கூடிப்போச்சு...!
கொள்கை கொண்ட
குருவிதானும் என்ன செய்யும்
தனிய இருந்து
சோகம் ராகம் இசைக்குது...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வசந்தம் வந்தும்... - by kuruvikal - 04-24-2005, 02:02 PM
[No subject] - by tamilini - 04-24-2005, 03:07 PM
[No subject] - by KULAKADDAN - 04-24-2005, 03:30 PM
[No subject] - by kuruvikal - 04-24-2005, 04:18 PM
[No subject] - by hari - 04-24-2005, 04:20 PM
[No subject] - by Malalai - 04-24-2005, 07:18 PM
[No subject] - by kuruvikal - 04-24-2005, 08:26 PM
[No subject] - by kavithan - 04-26-2005, 10:29 PM
[No subject] - by shanmuhi - 04-26-2005, 10:35 PM
[No subject] - by Kurumpan - 04-27-2005, 10:29 AM
[No subject] - by kuruvikal - 04-27-2005, 12:03 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)