04-24-2005, 11:53 AM
sOliyAn Wrote:வாறன் வாறன் வாய்நீளுது
தாறன் தாறன் சுள்ளிக்கம்பால் ரண்டு
மூளைச்சு மூண்டிலை விடமுந்தி
முந்திரிக்கொட்டைகளாய் என்ன கதை?!
கனக்கக் கதைச்சியெண்டா நீ
பாலில்லை சொல்லிப்போட்டன்
பழஞ்சோத்து தண்ணிதந்து
வாய்க்கொழுப்பை அடக்குவன்நான்
முழக்கிக் கதைச்சி யெண்டா - இப்ப
மூரிமட்டை வரும், சொல்லிப்போட்டன்
பெலத்துக் கதைச்சியெண்டா - இப்ப
பனைநாரால் கட்டி வைப்பன் - கொப்பனைப்போல்
விதண்டாவாதம் செய்தியெண்டா
விளக்குமாறுதான் வரும் சொல்லிப்போட்டன்!! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மூன்று இலைக்கும்
முளை தந்தவள் நீயம்மா
முலை தர மறுத்தால்
மூலைக்கடையில் புட்டிப்பால்
வாங்கிக் குடிப்பேன்...!
வீரக் காளை நானாக
கனவு கண்டவள் நீயம்மா
சுள்ளி காட்டி வீரம் கிள்ளினாய்
"சுப்பர் மானாய்" மாறிடுவேன்...!
தாய்க் கொழுப்புத் தானம்மா
என் வாய்க் கொழுப்பாய் ஆச்சு
எல்லாம் நீ தந்த சொத்தம்மா
நானாய் எதுவும் வாங்கவில்லை..!
பெலத்துக் கத்திறது
தாய் நீ தந்த
தமிழினத்தின் சொத்தாச்சே
இனமானம் காக்க
அதை நான் பத்திரப்படுத்தத்
தவறுவனோ...!
அப்பனையேன் இழுக்கிறாயம்மா
அவன் தான் மெளனியாச்சே
விதண்டாவாதம்
சோழியன் மாமா சொல்லித்தந்தது
கோள்மூட்டி மாமா
கோவணத்தோட நிக்கப் போறார்
வீரக் காளையிவன்
வீர விளையாட்டு அறியவில்லைப் போலும்
சொல்லி வை
ஓசித் தேத்தண்ணிக்கு
வீட்டுப் பக்கம் தலைகாட்டினால்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->