Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளியோவியம்
#34
நன்றி மதன், மழலை அஜீவன் அண்ணா...

மதன் நீங்கள் இதுசம்பந்தமாக எடுக்கின்ற படங்களையும் இங்கு இணையுங்கள்.

மழலை எந்தக் கமரா என்றாலும் பரவாயில்லை. அதிமுக்கியம் உங்களுக்குள் இருக்கின்ற கற்பனைத் திறன், இரசனைத் தன்மை. உங்களிடம் அது நிறையவே இருக்கும். காரணம் உங்கள் சில கவிதைகளைப் படித்துணர்ந்தேன். எனவே முயற்சி செய்யுங்கள். "படம் எடுப்பது கமராவல்ல, கண்கள் தான்" என்று இத்துறையில் புகழ்பெற்ற ஒரு கமராக் கலைஞர் சொல்லியுள்ளார். (அவர் பெயர் சரியாகத் தெரியவில்லை). கமராவின் தொழில்நுட்பம் செலவுகளையும், நேரத்தையும் மிச்சப்படுத்துமே ஒழிய, உங்கள் இரசனைதான் சிறந்த நிழற்படங்களை எடுக்க உதவும். Digital Camera ஆக இருந்தால் நீங்கள் பயிற்சி செய்வதற்கு இலகுவாக இருக்கும் - காரணம், நேரமும் மிச்சம், அதிக செலவும் இல்லை. அதாவது நிறையப் படங்களை எடுத்து சரியில்லாவிட்டால் Memory Card இல் இருந்து அழித்து அழித்து மீண்டம் எடுக்கலாம். Filmroll இற்காக பணம் செலவளிக்கத் தேவையில்லை. Analog Camera இருந்தாலும் பரவாயில்லை - ஆனால் படம் எடுத்து அதனைகஇ கழுவக் குடுத்து வர நேரமெடுக்கும் - அதில் பிழையிருந்தால் திரும்பவும் அத்தனை வேலையும் செய்யவேண்டும். ஆகவே உங்களிடம் உள்ள கமராவை பயன்படுத்தி படங்களை எடுத்துப் பாருங்கள். உங்களை ஒரு சிறந்த இரசனையாளராக நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பொருட்களையும் இரசனையோடு பாருங்கள். முக்கியமாக ஒரு பெரிய பரப்பை எடுப்பதை முதலில் தவிருங்கள். ஒரு பெரிய பொருளின் சிறிய பகுதியை காட்சிப்படுத்த முயலுங்கள். உதாரணமாக அந்த "நீர்த்துளிகள்" படம் ஒரு Shampoo போத்தலின் மூடியாகும்.

எப்படி எடுக்கவேண்டும்?
கமராவை உங்களுக்கு இயக்கத் தெரியும் தானே? அவ்வளவும் போதும். எவ்வளவு வெளிச்சம் எங்கிருந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யுங்கள். நிழற்படத்தின் கருப்பொருளே வெளிச்சம்தானே? Photography என்றால் ஒளியினால் வரைதல் என்று பொருள்படும். அதனால் தான் இங்கு ஒளியோவியம் என்று தலைப்பிட்டேன். எனவே வெளிச்சம் எப்படி அமையவேண்டம் என்பது முக்கியம். வீட்டுக்குள் இருக்கும் மின்விளக்கு வெளிச்சமா, அல்லது யன்னலூடே வரும் சூரியவெளிச்சமா சரியாக இருக்கும் என்பதை நீங்களே ஒரு கலைஞராக, கமராக் கவிஞராக இருந்து முடிவு செய்யுங்கள். அதேபோல ஒருபொருளைக் காட்சிப்படுத்தும்போது அது படத்தில் சரி நடுவில் தான் இருக்கவேண்டும் என்று முயற்சிக்காதீர்கள். ஒரு பக்கமாக இருந்தால் நல்லது. கட்டாயமல்ல, அதேபோல் எப்போதுமே அப்படித்தான் இருக்குவேண்டும் என்று அவசியமும் இல்லை - தேவைக்கேற்ப அது வெளிப்படுத்தும் பெர்ருளிற்கேற்ப படத்தில் அந்தப் பொருளின் நிலை எங்கிருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். காட்சிக்கா தூரத்தையும் முடிவு செய்யுங்கள். தூரத்திலிருந்து Zoom செய்வதன் மூலம் காட்சியை அண்மிக்கலாம், அல்லது காட்சிக்கு/பொருளிற்கு மிக அண்மையில் சென்று காட்சிப்படுத்தலாம். இதனையும் உங்கள் இரசனைக்கேற்ப செய்யுங்கள். Zoom செய்வதற்கும், நீங்கள் பொருளிற்கு அருகில் சென்று காட்சிப்படுத்துவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை பின்னர் இணைக்கிறேன்.

எனவே உங்களை ஒளியோவியக் கலைஞராக, கவிஞராக நினைத்துக்கொண்டு படங்களை அணுகுங்கள், இரசியுங்கள், காட்சிப்படுத்துங்கள். சரி... இந்தளவு விளக்கம் தற்போதைக்கு காணும் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள். நீங்கள் எடுத்த படங்களை இணையுங்கள். என்னென்ன திருத்தங்கள் செய்யலாம், இன்னும் எப்படிச் சிறப்பாக செய்யலாம் என்பவற்றை பிறகு பார்ப்போம். சரியா? எப்போது இணைக்கப் போகிறீர்கள்? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அஜீவன் அண்ணா உங்கள் கருத்திற்கு நன்றி. ஒரு கொஞ்சம் இன்னும் வளரட்டும். அதன் பின்பு குறும்படப் பகுதிக்கு நீங்கள் சொன்னது போன்றே மாற்றிவிடலாம்.


Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 04-14-2005, 03:04 PM
[No subject] - by tamilini - 04-14-2005, 03:07 PM
[No subject] - by sOliyAn - 04-14-2005, 03:48 PM
[No subject] - by kuruvikal - 04-14-2005, 04:08 PM
[No subject] - by AJeevan - 04-14-2005, 08:28 PM
[No subject] - by இளைஞன் - 04-14-2005, 09:38 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 12:18 AM
[No subject] - by AJeevan - 04-15-2005, 01:39 AM
[No subject] - by இளைஞன் - 04-15-2005, 02:03 AM
[No subject] - by kavithan - 04-15-2005, 02:44 AM
[No subject] - by kuruvikal - 04-15-2005, 02:59 AM
[No subject] - by இளைஞன் - 04-15-2005, 08:52 PM
பரிமாணம் - by இளைஞன் - 04-15-2005, 09:22 PM
[No subject] - by KULAKADDAN - 04-15-2005, 11:00 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:20 PM
[No subject] - by Malalai - 04-15-2005, 11:44 PM
[No subject] - by kuruvikal - 04-16-2005, 01:20 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 01:21 AM
[No subject] - by AJeevan - 04-16-2005, 01:41 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 11:46 AM
[No subject] - by vasisutha - 04-16-2005, 04:04 PM
[No subject] - by tamilini - 04-16-2005, 04:31 PM
[No subject] - by இளைஞன் - 04-16-2005, 05:49 PM
[No subject] - by KULAKADDAN - 04-20-2005, 04:33 PM
[No subject] - by இளைஞன் - 04-21-2005, 10:16 PM
[No subject] - by shanmuhi - 04-21-2005, 10:37 PM
[No subject] - by shanmuhi - 04-22-2005, 12:10 AM
[No subject] - by இளைஞன் - 04-22-2005, 12:44 AM
[No subject] - by Mathan - 04-22-2005, 12:51 AM
[No subject] - by Malalai - 04-22-2005, 01:57 AM
[No subject] - by AJeevan - 04-22-2005, 11:56 AM
[No subject] - by இளைஞன் - 04-23-2005, 02:27 PM
[No subject] - by Malalai - 04-23-2005, 05:22 PM
[No subject] - by KULAKADDAN - 04-23-2005, 06:36 PM
[No subject] - by இளைஞன் - 04-24-2005, 12:02 PM
[No subject] - by KULAKADDAN - 04-28-2005, 11:31 PM
[No subject] - by இளைஞன் - 04-29-2005, 12:59 AM
[No subject] - by vasisutha - 04-29-2005, 02:09 AM
[No subject] - by KULAKADDAN - 04-29-2005, 08:09 PM
[No subject] - by Malalai - 05-03-2005, 07:41 PM
[No subject] - by KULAKADDAN - 05-03-2005, 07:43 PM
[No subject] - by tamilini - 05-03-2005, 07:44 PM
[No subject] - by Malalai - 05-03-2005, 08:58 PM
[No subject] - by Malalai - 05-03-2005, 08:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)