04-23-2005, 03:31 AM
Quote:எண்ணத்தால் எட்டடுக்கு மாளிகையைக் கட்டிவைத்தேன்
உன்னையே நினைத்துநான் உயர்வடையக் கனவுகண்டேன்
பால்கொடுத்த மார்பில்நீ காலெடுத்து உதைந்தாயோ
தலைசரித்த தோளைநீ துள்ளிநின்று வதைத்தாயோ
நாளையொரு தங்கைப்பாப்பா மண்காணும் வேளையிலே
அவள்வாழப் பணத்துக்கு நம்பிக்கையே நீதாண்டா
வெறுங்கையாய் உனக்கொருத்தி வீடுவந்து புகுந்திட்டால் - உன்
தங்கைவிதி எப்படியோ கரம்பற்ற யார்வருவார்?
இலாப நட்டம் பார்த்துவாழும் தமிழர்தம் வாழ்வினிலே
ஏமாந்த சோணகிரி என்றபெயர் வேணுமாடா?
மேடைப்பேச்சாளர் சொல்வார்கள் செய்யார்கள் - அவர்
பேச்சினிலே வீணாகப் போதையேறிப் போகாதே!
எட்டடுக்கு மாளிகை எதற்கம்மா
ஏறி நின்று எகிறிக்குதிக்காவா?
ஏனம்மா நீயிப்படி?-இப்போழுதும்
நான் உயர்ந்த விட்டேன்-தன்
மானத்தவன் என்பதால்...
என்னை விற்று வாழ்வதிலும்-உன்
மார்பினில் காலால் உதைப்பது மேல்
என் தங்கையை வாழ வைப்பது -
என் கடமை அதை
என் மனைவி மீது சுமத்தவது..
சுயநல வாழ்வு..
எனைபோன்று பல தமிழர்
எங்களுள் உள்ளனராம்மா..
ஏன் நீ கலங்கு கிறாய்...
மேடைப் பேச்சாார் செய்யாரென்று
நானுமறிவேன் தாயே!-அதனால்
நானே செயல் வடிவம் கொடுப்பேன்..-மது
போதை ஏறினால் மறக்கலாம்- பண
போதை ஏறினால் மனிதம் மதிக்காது
ஏனிதை நீ மற்தாய் தாயே!....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

