04-22-2005, 07:02 PM
Malalai Wrote:அடங் எப்பங்க உங்க 2 பேரோட சந்தேகமும் சரியாகும் காதல் பற்றி...அப்ப எனக்கும் செய்தி சொல்லியனுப்புங்க....காதல் காதல் என்று சொல்லிட்டு அப்புறம் கண்ணீரில நீந்தாதீங்க அண்ணா...அக்கா சொல்ற மாதிரி சரியா......காதல் அன்பு கிடைக்கிறது இப்ப சரியான சிரமம்.....காதல் எல்லாம் இப்ப ஏதோ ஏதோ எல்லாத்துக்கும் விலை பேசப்படுது......காதல் என்றால் என்ன என்று தெரியாம கண்டது நிண்டதுகளுக்கு எல்லாம் காதல் என்று பெயர் வைக்கிறாங்க....
அதுக்காக காதல் என்ற அன்பின் வடிவம் கொச்சைப்படுத்தப்படலாகாது...! மனிதர்கள் விடும் தவறுகளுக்காக ஏன் அன்பைக் கொச்சைப் படுத்த வேண்டும்...! கருவிலையே பிள்ளைகளை ஈவு இரக்கமின்றி கொன்றழிக்கும் பெண்கள் ஆயிரமாயிரமாய் இருக்கிறார்கள். சொந்தக் கருவிடம் பாசம் வைக்க வேண்டியவளே பாவியாய் இருக்கும் போது... அந்த அன்பே அந்தச் சிசுவுக்குக் கிடைக்காத போது காதலை மட்டும் மனிதர்கள் புனிதமாகவே வைத்திருப்பார்களா...??! காதலின் புனிதத்தை உணர முடியவில்லை என்பதற்காக அது புனிதமற்றதென்றா... அப்படிச் சொல்லிக் கொச்சைப்படுத்தலாமா...காதலே இல்லை எனலாமா...இப்படி என்றால் நாளை தாய் தரும் பாசம் என்ற அன்பின் வடிவமும் தான் இல்லாமல் போகும்...! பின் உலகில் மனிதன் அன்பற்று மிருகங்களை விடக் கேவலமாக வாழ்ந்தழியும் நிலைதான் தோன்றும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

