04-22-2005, 04:14 PM
sOliyAn Wrote:நாளை ஒரு காலம் நலமாக விளைய நீயும்
தூங்கடா கண்ணே தூங்கு!
சீட்டுத்தான் போட்டு நீயும்
சீராக வளர்வாயோ?
'டிஸ்கோ'தான் அலைந்து நீயும்
'டிசிப்பிளீனை' மறப்பாயோ?
கோஸ்டிகளாய் மாறி நீயூம்
'கோர்ட்டுக்கு' போவாயோ?
தமிழனையே சுரண்டி நீயும்
தமிழனென்று சொல்வாயோ?
காதல் என்று காலமெல்லாம்
கனவில்தான் வாழ்வாயோ?
மோதல் என்று உருக்குலைந்து
வாழ்தல் என்று நினைப்பாயோ?
தூங்கடா கண்ணே தூங்கு!! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வெறும்
காற்றடைத்த பையென்று
நானறிய முதலாய்
பெற்றிட்ட அன்னைக்காய்
பெருந்தவம் செய்யேன்..!
கனவு எனினும்
பெற்ற காதல்
புனிதம் காப்பேன்
உன்னையும் காப்பேன்
அன்னையே உன்
கருவறையில் வாழ்ந்ததற்காய்
இது சத்தியம்
இப்ப என்னை உறங்கவிடு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

