04-22-2005, 02:43 PM
தூங்கடா மகனே..... தூங்கு....!!
போர் படிந்த மார்பிலே
நீ குடிக்க பாலில்லை
தோளிலே தூங்க வைக்க
தேசம் காத்த உன் தந்தை இல்லை
தூங்கடா மகனே.... தூங்கு.....!!!!
விடிலை விழுங்கிய எம் இரவுகளின்
வரலாறு சொல்வேன் கேளடா......
நிலத்தின் களங்கம் துடைத்த
நித்திய காவலரின்
கதைசொல்வேன் கேளடா....
இதுதான் வாழ்க்கையென
அர்த்தமற்று வாழ்ந்தோமடா
விடுகதைக்கு விடைகாண
விடுதலை பெறவேண்டுமென
வீரமகன் வந்தானடா....
வீறு கொண்டவனது வீரப்படை
வெற்றி கொண்ட வரலாற்றை
காதோரம் பாடிட காலம் போதாதடா....
ஆனாலும்...
நாளை வரும் விடுதலை என
நம்பி;(க்) கை நீள்கிறது...
எம் காலம் கிடைகுமாவென
ஆதங்கம் சேருது....
முழித்திருக்கும் உன் தேவை
எதிர்காலம் வேண்டிடும்
இன்று மட்டும்....
அமைதியா தூங்கடா... என் மகனே...!!!
போர் படிந்த மார்பிலே
நீ குடிக்க பாலில்லை
தோளிலே தூங்க வைக்க
தேசம் காத்த உன் தந்தை இல்லை
தூங்கடா மகனே.... தூங்கு.....!!!!
விடிலை விழுங்கிய எம் இரவுகளின்
வரலாறு சொல்வேன் கேளடா......
நிலத்தின் களங்கம் துடைத்த
நித்திய காவலரின்
கதைசொல்வேன் கேளடா....
இதுதான் வாழ்க்கையென
அர்த்தமற்று வாழ்ந்தோமடா
விடுகதைக்கு விடைகாண
விடுதலை பெறவேண்டுமென
வீரமகன் வந்தானடா....
வீறு கொண்டவனது வீரப்படை
வெற்றி கொண்ட வரலாற்றை
காதோரம் பாடிட காலம் போதாதடா....
ஆனாலும்...
நாளை வரும் விடுதலை என
நம்பி;(க்) கை நீள்கிறது...
எம் காலம் கிடைகுமாவென
ஆதங்கம் சேருது....
முழித்திருக்கும் உன் தேவை
எதிர்காலம் வேண்டிடும்
இன்று மட்டும்....
அமைதியா தூங்கடா... என் மகனே...!!!
:: ::
-
!
-
!

