Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளியோவியம்
#28
வணக்கம்...

இப்போது இங்கு இணைக்கப் போகின்ற படங்கள் தொடுதல் உணர்வை மையப்படுத்தியது. யேர்மன் மொழியில் Taktilititaet என்று கூறுவார்கள். தமிழில் உணர்தல், தொட்டுணர்தல் என்று சொல்லலாம் என நினைக்கிறேன். அதாவது படங்களில் நாம் காட்சிப்படுத்துகின்ற பொருளின் மூலம் அதனைத் தொட முடியும்/தொடலாம் என்கிற உணர்வை உண்டுபண்ணுதல். இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய மாதிரிச் சொன்னால் ஒரு முள்ளைக் காட்சிப்படுத்தினால் அது குத்தும் என்கிற உணர்வை அது உண்டுபண்ணும் அல்லவா - அதனைத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். சண்முகி அக்கா விளங்கக் கூடிய மாதிரி சொல்லியுள்ளேனா? அல்லாவிட்டால் படங்களைப் பாருங்கள் சிலவேளை படங்கள் இன்னும் விளக்கமாக இருக்கும்.

ஒளி பட்டுத் தெறிக்கும் அளவு, பின்புற முன்புறக் காட்சிகள், மேடு பள்ளம் (பரிமாணத் தோற்றம்) போன்வற்றை சரியான முறையில் காட்சிப்படுத்தும் பொழுது காட்சிப்படுத்தப்படுகின்ற பொருள் பார்வையாளர்களிடம் தொடுதலுணர்வைத் தூண்டும். பின்வரும் படங்களைக் கவனியுங்கள். (இவற்றில் அனைத்தும் தொடுதலுணர்வை 100% ஏற்படுத்துவதாகச் சொல்ல முடியாது.)


<img src='http://www.yarl.com/forum/files/1_104.jpg' border='0' alt='user posted image'>
இதில் வெளிச்சத்தின் தெறிப்பு ஓரளவு சரியாக இருந்தபோதிலும் மேடு பள்ளம் (பரிமாணம்) அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனாலும் தடவக்கூடியதாய் உள்ளது என்பது தெரிகிறது.

<img src='http://www.yarl.com/forum/files/2_960.jpg' border='0' alt='user posted image'>
இங்கே Mouse காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பான்மையான இடம் ஒரே தோற்றத்துடன் அல்து "வழுக்கல்" தோற்றத்துடன் இருப்பதால் இதுவும் பெரியளவு தொடுதல் உணர்வைக் கொடுக்கவில்லை. ஆனாலும் Mouse இன் Roller இன்னும் அண்மித்துக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அதில் உள்ள மேடு பள்ளங்கள் அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கும்.

<img src='http://www.yarl.com/forum/files/3.jpg' border='0' alt='user posted image'>
இதில் நீர்த்துளிகளும், அதில் பட்டுத் தெறிக்கும் ஒளியும் சேர்ந்து தொடுதலுணர்வை வெளிப்படுத்துகின்றன. தொட்டால் விரலில் ஈரம்படும் என்கிற தோற்றத்தைத் தருகிறதல்லவா?

<img src='http://www.yarl.com/forum/files/4.jpg' border='0' alt='user posted image'>
இங்கு பொருள் கை அணிகலன். இதில் ஒளி பட்டுத் தெறிக்கும் அளவு பொருத்தமாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அண்மித்தக் காட்டியிருக்கலாம். அதேபோல் விரல்களைத் தெளிவில்லாமல் காட்டியிரக்கலாம். விரல்கள் தெளிவாகக் காட்டிருப்பதால் விரல்கள் தான் அதிகம் கவனிப்புப் பெறும். மற்றும்படி தொடுதலுணர்வை ஏற்படுத்துகிறது.

<img src='http://www.yarl.com/forum/files/5.jpg' border='0' alt='user posted image'>
இங்கும் ஒளிபட்டுத் தெறித்து நிழலையும் வெளிச்சத்தையும் சரியான விகிதத்தில் பகிர்ந்தளிப்பதால், அதன் நெழிவுகள் தடவ முடியும் என்கிற தோற்றத்தைத் தருகிறது.

<img src='http://www.yarl.com/forum/files/6.jpg' border='0' alt='user posted image'>
இங்கும் ஒளிபட்டுத் தெறித்து நிழலையும் வெளிச்சத்தையும் சரியான விகிதத்தில் பகிர்ந்தளிப்பதால், அதன் நெழிவுகள் தடவ முடியும் என்கிற தோற்றத்தைத் தருகிறது.

<img src='http://www.yarl.com/forum/files/7.jpg' border='0' alt='user posted image'>
இதுவும் முதலாவது படத்தைப் போன்றதுதான். ஆனால் ஒளி பட்டுத் தெறிக்கும் அளவு சரியாக இல்லை. இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

<img src='http://www.yarl.com/forum/files/8.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/9.jpg' border='0' alt='user posted image'>
இரண்டாவது படத்தில் குறிப்பிட்டது போன்று ஒரே மட்டமான பகுதி அதிகம் என்றாலும் M என்கிற எழுத்து மேடான பகுதி என்பது தெரிகிறதல்லவா?

<img src='http://www.yarl.com/forum/files/10.jpg' border='0' alt='user posted image'>
இது Mouse இன் Circuit. இதில் எல்லாப் பகுதியும் தொடுதல் உணர்வை வெளிப்படுத்தவில்லை. உதாரணமாக முள்ளுப்போன்று காட்சி தரும் Pin களை மட்டும் அண்மித்துக் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.


சரி... இதுவும் பயிற்சிப் படங்கள்தான். இதில் நீர்த்துளி இருக்கின்ற படம் தான் எனக்குத் திருப்தியைத் தந்தது. மற்றையவற்றில் சிறு சிறு குறைகள் உள்ளன. அவற்றை இங்கே இணைத்து அதன் குறைகளையுமு் குறிப்பிட்டுள்ளேன். அதிலிருந்து தொடுதல் உணர்வு என்பது என்னவென்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

இது ஒரு Product Photography செய்யும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Product Photography என்னும் போது விளம்பரம், அல்லது விளக்கக்கட்டுரைக்கான படங்களுக்கு இந்த தொடுதல் உணர்வை ஏற்படுத்தும் நுட்பம் பயனுள்ளது. பார்வையாளர்களை ஒரு பொருளை வாங்கத் தூண்டுதல், அல்லது படங்களின் மூலம் அதன் தன்மையை விளக்குதல் போன்றவைக்கு இது தேவைப்படும்.

உங்கள் படங்களையும் இணையுங்கள். நன்றி.


Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 04-14-2005, 03:04 PM
[No subject] - by tamilini - 04-14-2005, 03:07 PM
[No subject] - by sOliyAn - 04-14-2005, 03:48 PM
[No subject] - by kuruvikal - 04-14-2005, 04:08 PM
[No subject] - by AJeevan - 04-14-2005, 08:28 PM
[No subject] - by இளைஞன் - 04-14-2005, 09:38 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 12:18 AM
[No subject] - by AJeevan - 04-15-2005, 01:39 AM
[No subject] - by இளைஞன் - 04-15-2005, 02:03 AM
[No subject] - by kavithan - 04-15-2005, 02:44 AM
[No subject] - by kuruvikal - 04-15-2005, 02:59 AM
[No subject] - by இளைஞன் - 04-15-2005, 08:52 PM
பரிமாணம் - by இளைஞன் - 04-15-2005, 09:22 PM
[No subject] - by KULAKADDAN - 04-15-2005, 11:00 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:20 PM
[No subject] - by Malalai - 04-15-2005, 11:44 PM
[No subject] - by kuruvikal - 04-16-2005, 01:20 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 01:21 AM
[No subject] - by AJeevan - 04-16-2005, 01:41 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 11:46 AM
[No subject] - by vasisutha - 04-16-2005, 04:04 PM
[No subject] - by tamilini - 04-16-2005, 04:31 PM
[No subject] - by இளைஞன் - 04-16-2005, 05:49 PM
[No subject] - by KULAKADDAN - 04-20-2005, 04:33 PM
[No subject] - by இளைஞன் - 04-21-2005, 10:16 PM
[No subject] - by shanmuhi - 04-21-2005, 10:37 PM
தொடுதலுணர்வு - by இளைஞன் - 04-22-2005, 12:00 AM
[No subject] - by shanmuhi - 04-22-2005, 12:10 AM
[No subject] - by இளைஞன் - 04-22-2005, 12:44 AM
[No subject] - by Mathan - 04-22-2005, 12:51 AM
[No subject] - by Malalai - 04-22-2005, 01:57 AM
[No subject] - by AJeevan - 04-22-2005, 11:56 AM
[No subject] - by இளைஞன் - 04-23-2005, 02:27 PM
[No subject] - by Malalai - 04-23-2005, 05:22 PM
[No subject] - by KULAKADDAN - 04-23-2005, 06:36 PM
[No subject] - by இளைஞன் - 04-24-2005, 12:02 PM
[No subject] - by KULAKADDAN - 04-28-2005, 11:31 PM
[No subject] - by இளைஞன் - 04-29-2005, 12:59 AM
[No subject] - by vasisutha - 04-29-2005, 02:09 AM
[No subject] - by KULAKADDAN - 04-29-2005, 08:09 PM
[No subject] - by Malalai - 05-03-2005, 07:41 PM
[No subject] - by KULAKADDAN - 05-03-2005, 07:43 PM
[No subject] - by tamilini - 05-03-2005, 07:44 PM
[No subject] - by Malalai - 05-03-2005, 08:58 PM
[No subject] - by Malalai - 05-03-2005, 08:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)