Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர் விடுதலை இழுபறியாவது ஏன்?
#6
<!--QuoteBegin-gururaja+-->QUOTE(gururaja)<!--QuoteEBegin-->ஈழத்தமிழர் விடுதலை இழுபறியாவது ஏன்?
-சங்கரன்-
 
 
1980இல் வீறுகொண்டெழுந்த தமிழ் இழைஞர்களின் உணர்ச்சிகளின் பிரவாகம் தமிழ் ஈழத்தை எட்டியது. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முதன்முதலில் ஈழம் என்ற தனி நாடே தமிழருக்கு தன்னாட்சியுடைய வாழ்வை தரும் என்ற கொள்கையை முன்வைத்தவர் \"அடங்காத்தமிழன்\" சுந்தரலிங்கம். தனது பாராளுமன்ற அங்கத்துவத்தை துறந்து தனிநாட்டு கொள்கையின் அடிப்படையில் 1950 - 60 வரையிலான காலப்பகுதியில் மக்கள் முடிவைக் கேட்டு போட்டியிட்ட சுந்தரலிங்கம் மாகாணசுயாட்சி கோரிக்கையுடன் போட்டியிட்ட தமிழரசு கட்சியிடம் தோல்வியடைந்து பாராளுமன்ற அரசியலை கைவிட்டார். பிரித்தானியாவில் பல்கலைக்கழக ஆசிரியராக இருந்த போது பிரித்தானிய மகாராணிக்கு கணிதம் கற்று கொடுத்தவர் சுந்தரலிங்கம். 1958 கலவரத்தில் தமிழர்களை கொல்ல லொறிகளில் வவுனியா வந்த சிங்களவர்ளை தான் பாராளுமன்றத்தில் \"காடெல்லாம் சுடுவோம்\" என்று சூழுரைத்தபடியே இளைஞர்களை பயிற்றுவித்து சுட்டு விரட்டியவர். இவரது காட்டு காணிகளே பின்னர் காந்திய நிறுவனத்தின் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இடங்களாக அமைந்தன.

<!--QuoteBegin-gururaja+-->QUOTE(gururaja)<!--QuoteEBegin--> தமிழீழம் தனியரசு ஒன்றே இலக்கு என்று தமிழ் இளைஞர்கள் பொங்கியதால் தமிழர் போராட்டம் விடுதலையின் சிகரத்தை எட்டியது. ஆனால் பின்னர் பலர் தமது கொள்கையில் தடம் புரண்டு தமிழர் விடுதலைக்கு தடைக்கற்களாகினர். இம் மாற்றுக் குழுக்களின் செயற்பாட்டினால் தமிழரின் விடுதலையும் சுதந்திரமும் காலம் கடந்து நீண்டு செல்கின்றது. தமிழ் இளைஞர்களின் தலைமையில் ஏற்பட்ட தலைமைத்துவ ஒழுக்கவியல் முரண்பாட்டால் தமிழரின் உரிமைப் போராட்டத்தையும் விடுதலையையும் அதால பாதாளத்துக்குள் தள்ளியது. 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு\" என்பது போல் தமிழ் இளைஞர்கள் ஐக்கியப்பட்டிருந்தால் தமிழீழம் என்ற தனிநாடு அன்றே உருவாகியிருக்கும்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் பின்ணணியில் பலமான புவிசார் அரசியல் அமைந்திருக்கிறது. சிவகுமாரன் போன்றவர்கள் தன்னிச்சையாக ஆயுதம் ஏந்தியது ஒரு புறம் இருக்க, முதலாவது இயக்கமாக உருவான ரெலோ கடத்தலில் ஈடுபட்வர்களை திரட்டி இந்திய புலனாய்வு பிரிவு தமது நோக்கங்களுக்காக உருவாக்கிய அவர்களது இராணுவத்தின் ஒரு இரகசிய பிரிவான ஐந்தாம் படையாகவே அமைந்திருந்தது. ஏனைய பல இயக்கங்களும் தமிழர்விடுதலைக் கூட்டணியும் கூட இந்திய புலனாய்வு பிரிவின் தேவைகளுக்கே அறிந்தும் அறியாமலும் பயன்பட்டனர். விடுதலைப்புலிகள் மட்டுமே குறிப்பிட்ட ஒருவரின் (தலைவர் பிரபாகரனின்) மிகவும் அவதானமான எவரையும் நம்பாத போக்கினால் இந்திய புலனாய்வுதுறையால் பயன்படுத்தப்பட முடியாதவர்களாக அமைந்தனர்.

இந்திய புலனாய்வு பிரிவு காடையர்களையும், கூலிக்கு கொலை செய்பவர்களையும் திரட்டி எல்லாமாக 47 "விடுதலை இயக்கங்களை" உருவாக்கி, ஆயுதங்களும் கொடுத்து அனுப்பி வைத்தது. இவைகளை முடிந்தவரை அழிப்பதை தவிர விடுதலைப்புலிகளுக்கு வேறு வழி இருக்கவில்லை. இதிலே ஐக்கியம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
i
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 03-30-2005, 07:18 PM
[No subject] - by ratha - 03-30-2005, 10:22 PM
[No subject] - by Nilavan - 03-31-2005, 05:10 PM
[No subject] - by நேசன் - 04-19-2005, 05:54 PM
Re: ஈழத்தமிழர் விடுதலை இழுபறியாவது ஏன்? - by Jude - 04-21-2005, 07:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)