04-21-2005, 03:07 AM
"காதலில்' ஐக்கியமாகும் அசின்!
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ashin-500.jpg' border='0' alt='user posted image'>
தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் காதல் காட்சிகளில் அப்படியே ஐக்கியமாகி விடுகிறாராம் அசின்.இது எப்படி அவரால் சாத்தியமாகிறது என்பது தான் கோடம்பாக்கத்தில் இப்போதய கசமுசா.
மலையாள குஜிலியான அசினுக்கு தாய்மொழியில் யாரும் சீண்டுவார் இல்லை. ஆனால் இவர் தமிழ், தெலுங்கில் சக்கைப்போடு போடுகிறார். முதலில் தமிழிலும் இவர் அதிர்ஷ்டமில்லாத நடிகை என்று ஒரு பெயர் வந்த போதிலும் பிறது சுதாரித்து விட்டார்.
"குமரன் சன் ஆப் மகாலட்சுமி'யில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த காதல் காட்சிகள் இப்போதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் இவர் காதல் காட்சியில் ரவியுடன் மிகவும் யதார்த்தமாக ரொமாண்டிக்காக நடித்ததாக பலரும் பாராட்டுகின்றனர்.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ajit-ashin400.jpg' border='0' alt='user posted image'>
இதே போல "காக்க காக்க' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷûடன் காதல் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளாராம். இதைப் பார்த்த தெலுங்குவாலாக்கள் வாயில் வைத்து விரலை எடுக்கவில்லையாம்.
அந்தப் படத்தில் அவர் வெங்கடேஷûடன் ஒன்றிப் போய் நடித்ததால் அடுத்த படங்களுக்கும் அசினையே புக் செய்யுங்கள் என்று தயாரிப்பாளர்களிடம் அன்புக்கட்டளை போடுகிறாராம்.
இது தவிர தற்போது இவர் சூர்யாவுடன் ஜோடி போடும் கஜினியிலும் வழக்கம் போல காதல் காட்சிகளில் தனது தெறமையை காட்டியுள்ளாராம். டைரக்டர் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காதல் காட்சிகளில் சூர்யாவுடன் சூடாக நடித்துள்ளாராம். (பாவம் ஜோதிகா..!)
இவரால் மட்டும் எப்படி காதல் காட்சிகளில் இவ்வளவு ஒன்றிப் போய் நெருக்கமாக நடிக்க முடிகிறது? இது தான் இப்போது கோடம்பாக்க மக்களிடையே உலவும் கசமுசா.
எப்படி உங்களால் காதல் காட்சிகளில் இப்படி ரொமாண்டிக்காக நடிக்கமுடிகிறது? ஏதாவது முன் அனுபவம் உண்டா என்று அவர் வாயை கிளறினோம்.
அய்யய்யோ.. அப்படியெல்லாம் கிடையாதுங்க. நான் கேரளாவில் பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்த போது தான் எனக்கு முதன்முதலாக கூட படிச்ச பசங்க லவ் லெட்டர் கொடுத்தாங்க. அதைப் பாத்து பயந்த நான் எத்தனை நாள் தூங்காமல் இருந்திருக்கிறேன் தெரியுமா?
கல்லூரிக்கு வந்த பிறகு கேட்கவே வேண்டாம். தினமும் எனக்கு பத்து லவ் லெட்டராவது வரும். அதைப்படித்துப் பார்த்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும்.
நிறைய லவ் லெட்டர் எனக்கு வந்திருக்கிறதே தவிர நான் இதுவரை யாருக்கும் லவ் லெட்டர் எழுதியதும் கிடையாது, யாரையும் காதலித்ததும் கிடையாது என்கிறார் அசின்.
அசின் சொன்னால் சரி தான்.
thats tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>