04-20-2005, 06:30 PM
Quote:¡§Ã¡ ±Å§Ã¡ ¦º¡ýÉ¡÷ ±ýÚ ¯ñ¨Á¨Â «È¢Â¡Ð ¿øÄÅü¨È «ôÀ¡ø ¾ûÇ¡¾£÷¸û. ¸¡Äõ ¸¼óÐ ¸Å¨ÄôÀ¼¡¾£÷¸û.
எது உண்மை..உண்மையை எப்படி வெளிக்கொணர்வது தரிசிப்பது...சந்தேகம் என்ற ஒன்றை உருவாக்கிவிட்டு...உண்மையையும் மறைத்துக் கொண்டு...இதுதான் உண்மை என்றால்..அதுதான் உண்மையாகிடுமா..ஆன்மீகம் என்பது மனிதனுக்குரியது...மடத்துக்கல்ல....! ஆதிசங்கரர் தன் காலத்தில் ஆன்மீகத்தை மீட்டுப் பாதுகாக்க பரப்ப ஒரு மடத்தை ஆரம்பித்திருக்கலாம்...ஆன்மீகத்தை ஒவ்வொரு மனிதருக்குக் கொண்டு செல்வதற்காக...அன்று அவை நம்பிக்கைக்குரியனவாகவும் பாதுகாக்கப்பட்டன...! இன்று....
மடம் ஆன்மீகத்தைப் பரப்புவதற்குப் பதில் ஆன்ம கேட்டுக்குத்தான் வழி வகுக்கிறது....! குறிப்பிட்ட மடத்தால் ஆதிசங்கரரின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது..மடத்தில் உள்ளவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகள் தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்.. அதை யார் தருவது.. ஆதிசங்கரரா...???! ஆன்மீகம் ஆதிசங்கரரின் காலத்தைப் போல் மடத்தால்தான் வழங்கப்பட வேண்டும் என்ற நிலையின்றில்லை... பள்ளிகள் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் என்று மக்கள் நம்பிக்கைகுரிய இடங்கள் மூலம் வழங்கலாம்... இந்தக் காவிகளும் தாடிகளும் எனி அவசியமில்லை..அவை ஆதிசங்கரர் காலத்தோடு போகட்டும்..ஆதிசங்கரர் காத்த ஆன்மீகம் தான் இக்கால மனிதர்களுக்குத் தேவை... காவிகளும் தாடிகளும் அல்ல...! ஆன்மீகவாதியான விவேகானந்தர் இளைஞர்களை பல்கலைக்கழகம் போகச் சொன்னாரே தவிர மடத்துக்கு அழைக்கவில்லை... கால்பந்து விளையாடச் சொன்னாரே தவிர மடத்தில் கன்னியரை விளையாட்டுப் பொம்மையாக்கி விளையாடச் சொல்லவில்லை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

