04-19-2005, 05:35 PM
குட்டி நாய்க்கும் குடிகாரனுக்கும் இடம் கொடாதே.
இது நான் அனுபவித்த சம்பவம். அன்றொரு நாள் எனது நண்பன் ஒருவனுக்கு பிறந்தநாள் என்று அழைத்திருந்தான். அங்கே பலவிதமான மதுவகைகள் உணவு என ஒரே அமர்க்களம். அதில் அறிமுகமில்லாத ஒரு அன்பர். ஓசி என்றால் டீசலும் குடிக்கும் பேர்வழி. நல்லா மங்கு மங்கு என மங்கி விட்டு புலம்பத்தொடங்கினார். எல்லா நண்பர்களும் அவரை அடக்க முயற்சி செய்தார்கள். முடியவில்லை. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை அணுகினேன். அவருக்கும் என்னை பிடித்துவிட்டது. அந்த வெறியிலும் நான் சொல்வதை கேட்பது போல பட்டது. இது அன்றைய சம்பவம்.
இது நடந்த நீண்ட நாட்களின் பின்னர் எனது தாய் தந்தையர் இங்கு வருகை தந்திருந்தனர். அவர்களை வாகனத்தில் ஏற்றி சென்று கொண்டிருந்த போது எனது வாகனத்திற்கு கையில் இருந்த எதையோ எறிந்து தூஸண வார்த்தைகளால் யாரோ என்னை அழைத்தார்கள். வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி இறங்கிப்பார்த்தால் அதே அன்பர். காலை 11.00 மணிக்கே நிறை போதையில். அவருக்கு எதுவும் புரிய வைக்க முடியா நிலைமை. பெற்றோர்கள் ஒரு மாதிரியாய் என்னை பார்த்தனர். அப்போது நான் அவர்களுக்கு அவரது அறிமுகம் கிடைத்த சந்தர்ப்பத்தை விளக்கி பின்னர் சொன்னேன் "குட்டி நாய்க்கும் குடிகாரனுக்கும் இடம் கொடுக்க கூடாது என்று". தந்தை எனது உல்டா பழமொழியை வெகுவாக ரசித்தார்.

.
.!!
.!!