Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
þô§À¡! ¿¡õ!!
#11
மதப் போதனைகள் என்பது போதிப்பவனை நம்பச் சொல்லவில்லை.... வணங்கச் சொல்லவில்லை...அவனுக்கு அடிபணியச் சொல்லவில்லை....! ஆன்மீக ரீதியில் சொல்லப்படும் அம்சத்தை உள்வாங்கி...மனதை சீரிய வழியில் நெறிப்படுத்துவதற்காக சொல்லப்படுகின்றனவே தவிர வேறு எதற்குமல்ல... அதுவும் மனப் பலவீனங்களைத் தவிர்ப்பதற்கு...!

மனித உளவியற் கல்விக்கும் ஆன்மீகக் கல்விக்கும் இடையே பல நிலை ஒருமைப்பாடுகள் இருப்பதை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றனர்...!

ஆன்மீகம் என்பது ஒரு கல்வி... அதைப் போதிக்க எல்லோராலும் இயலாது போதிப்பவர் அனைவரும் ஆன்மீக வாதியல்ல..இப்போ விஞ்ஞானத்தைப் போதிக்க என்ன தேவையோ அதே போல ஆன்மீகம் பற்றி சரிவர தெரிந்தவனே அதைப் போதிக்க முடியும்....அல்லது அவற்றிற்கான நூல்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்..! இதற்கு ஆன்மீகத் துறைக்கு வருபவர்கள் விஞ்ஞானத்துறைக்கு வருபவர்களுக்கு ஈடான முறையில் தரப்படுத்தப் பட வேண்டும்...! அப்படிச் செய்ய வேண்டின்... எதிர்காலத்தில் ஆன்மீகத்தை ஒரு கல்வியாக பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை பாடமாக்கி அதைப் பயிலச் சொல்வதே சிறந்தது...! அதுவே மதம் மற்றும் ஆன்மீகம் தொடர்பில் அதிக தெளிவை சமூகத்தில் ஏற்படுத்தி இப்படியான போலிச்சாமியார்களின் திருவிளையாடல்களைக் குறைக்க அல்லது ஒழிக்கவும் வகை செய்யும்...!

குறிப்பாக யோகாசனப் பயிற்சியின் போது ஆன்மீகப் போதனைகள் அளிக்கப்படும்...அது உடலுக்கும் உளத்துக்கும் வலிமை அளிப்பதற்காகும்... இதையும் நவீன உடற்பயிற்சி முறைகளுக்குள் அடக்கி ஒரு தேர்வுக்குரிய பயிற்சியாக விரும்பியர் பெற வழிகாட்டலாம்...!

அதை விட்டுவிட்டு... பிரேமானந்தா காமானந்தா காஞ்சிக் காமக் கோடிகள்...என்று தமக்குத்தாமே பெயர் சூட்டி விளம்பரம் செய்யும் மனித மிருகங்களிடம் மதத்தை ஆன்மீகத்தைப் படிக்கச் சொல்லி யாரும் சொன்னதில்லை...இவை அறியாமையின் வெளிப்பாடுகள்...! இந்த அறியாமை கூட ஒரு வகை மனப்பலவீனமே... அந்தப் பலவீனத்தைப் போக்க மதக் கல்வி, ஆன்மீகக் கல்வி சரியான முறையில் திட்டமிட்ட வகையில் ஒழுங்கு முறையின் கீழ் அளிக்க வேண்டும்...!

கட்டடக்கலை விதிமுறைப்படி அமைக்கப்பட்ட கோயில்கள் மன ஒருமைப்பாட்டுக்கு என்று விசேடித்து அமைக்கப்பட்ட இடங்கள்...!(வீட்டிலும் அப்படியான சூழலை ஏற்படுத்தலாம்..மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில்) அப்படியான இடங்களுக்கு ஓய்வான நேரத்தில் சென்று ஆன்மீக நூல்களைப் படிப்பது (பல்கலைக்கழகங்களில் நூலகங்கள் வாசிப்பதற்கு ஏற்ப சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பது போல..!) மனதை ஒரு நிலைப்படுத்தி கற்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வழி செய்யும்...!

ஆனால் இன்று வாழும் பக்த கோடிகளும் சரி...காம கோடிகளும் சரி.. கோயில் எதற்கு என்ற அடிப்படை அறியாது மந்தைகள் வைக்கும் கூடாரமாக்கி மிருகங்களைவிடக் கேவலமாக காம லீலைகள் புரியும் இடங்களாகவும் வியாபார நிலையங்களாகவும் தத்தமது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்...இவை மதத்தினதோ அல்லது ஆன்மீகக் கல்வியினதோ தவறல்ல..விஞ்ஞானத்தைப் படித்து நல்லதும் செய்யலாம் கெட்டதும் செய்யலாம்...அதே போல்தான் இதுவும்...!

அதுமட்டுமன்றி.. ஆன்மீக அல்லது மதச் சிந்தனைகளை வழங்கல் என்று கூறி தான்றோன்றித்தனச் சிந்தனைகளை எவரும் தமது கையில் எடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு கட்டுப்பாடற்ற நிலை இந்து சமயத்துள் அதிகம்..காணப்படுகிறது...! இதை தடுக்க வேண்டும்... அதற்காக வலுவான சட்டங்கள் அமுலுக்கு வர வேண்டும்...! குறிப்பாக இலங்கையில் இந்துக் கலாசார அமைச்சராக இருப்பவருக்கு இந்து சமயம் அல்லது ஆன்மீகம் பற்றி என்ன தெரியும்..தாடி வைத்தால் ஆன்மீகவாதி என்று அர்த்தமா...??! அதை எந்த ஆன்மீக நூல் சொல்கிறது...???!

மனிதக் குற்றவாளிகள் ஆன்மீகத்தை மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை வைத்து ஆன்மீகக் கல்வியை மதக் கல்வியை கொச்சைப் படுத்துவது என்பதும் அறியாமையே....! இப்ப விஞ்ஞானக் குற்றவாளிகளை வைத்து விஞ்ஞானக் கல்வி மீது பழி சுமத்துவது போல...!

வள்ளுவன் வாக்கு... கற்கக் கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக....! (யாழ் இந்துவின் வேத வாசகமும் கூட)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
þô§À¡! ¿¡õ!! - by Magaathma - 04-03-2005, 01:22 PM
[No subject] - by Magaathma - 04-04-2005, 08:17 PM
[No subject] - by Magaathma - 04-18-2005, 07:59 PM
[No subject] - by tamilini - 04-18-2005, 08:01 PM
[No subject] - by Magaathma - 04-18-2005, 08:21 PM
[No subject] - by vasisutha - 04-18-2005, 08:52 PM
[No subject] - by kirubans - 04-18-2005, 11:18 PM
[No subject] - by kirubans - 04-18-2005, 11:48 PM
[No subject] - by kirubans - 04-18-2005, 11:55 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 11:52 AM
[No subject] - by kuruvikal - 04-19-2005, 12:42 PM
[No subject] - by shiyam - 04-19-2005, 12:43 PM
[No subject] - by Danklas - 04-19-2005, 04:13 PM
[No subject] - by Magaathma - 04-19-2005, 06:34 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 06:51 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 06:57 PM
[No subject] - by Magaathma - 04-19-2005, 08:25 PM
[No subject] - by kuruvikal - 04-19-2005, 08:32 PM
[No subject] - by kirubans - 04-19-2005, 08:47 PM
[No subject] - by kirubans - 04-19-2005, 09:01 PM
[No subject] - by kuruvikal - 04-19-2005, 09:04 PM
[No subject] - by Magaathma - 04-19-2005, 09:44 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 10:06 PM
[No subject] - by stalin - 04-19-2005, 10:42 PM
[No subject] - by kuruvikal - 04-20-2005, 11:37 AM
[No subject] - by Magaathma - 04-20-2005, 05:03 PM
[No subject] - by kuruvikal - 04-20-2005, 06:30 PM
[No subject] - by Mathan - 04-21-2005, 02:41 AM
[No subject] - by Eelavan - 04-21-2005, 08:48 AM
[No subject] - by kuruvikal - 04-21-2005, 09:07 AM
[No subject] - by stalin - 04-21-2005, 01:43 PM
[No subject] - by Magaathma - 04-21-2005, 10:35 PM
[No subject] - by stalin - 04-22-2005, 01:16 AM
[No subject] - by kirubans - 04-22-2005, 10:30 PM
[No subject] - by kirubans - 04-22-2005, 10:32 PM
[No subject] - by Magaathma - 04-23-2005, 01:24 PM
[No subject] - by Magaathma - 04-23-2005, 06:35 PM
[No subject] - by kirubans - 04-23-2005, 09:04 PM
[No subject] - by stalin - 04-23-2005, 09:58 PM
[No subject] - by Magaathma - 04-24-2005, 12:10 AM
[No subject] - by stalin - 04-24-2005, 12:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)