04-18-2005, 11:55 PM
<b>பிரேமானந்தா சாமியல்ல ஒரு காமுகன் கொலைகாரன், கொள்ளைக்காரன்</b>
எங்கள் நாட்டில் பிறபிடமாக கொண்ட காவியுடைச்சாமி பிரேமானந்தா மகாராஜா 125 நாடுகளில் தனது ஆச்சிரமங்களை வைத்திருந்தான். சத்திய சாயிபாபாவின் சீடனெனத் தொடங்கிய இவனது பித்தலாட்டங்களில், இறுதியில் இவன் தன்னைதானே ஒரு சாமியாக மாற்றிக் கொள்ளும் அளவிற்க்கு வளர்ந்தது. விபூதி விங்கம், தங்கச் சங்கிலி, பூ என்பவற்றை வரவழைத்துப் பேய்க்காட்டி அருள் பெற்ற சாமியென்று தன்னை அறிவித்தான். இதில் மயங்கிய மேட்டுக்குடி, மத்தியதரப் பெண்கள் இவனது இரைக்கு உள்ளானனார்கள்.
யாழ்பாணத்தில் சுண்ணாகத்தில் காங்கேசன்துறை வீதியில் ஒரு பெரிய நாற்சார் வீட்டில் தனது ஆச்சிரமத்தைத் தொடங்கினான். பூபாலசிங்கம் ஆச்சிரமம் எனப் பெயரிட்டுத் தொடங்கிய இவ் ஆச்சிரமத்தில் வசதியான பெண்கள், மற்றும் மிகவசதியான ஆண்களுக்கு மட்டுமே ஆச்சிரமத்துக்குள் செல்ல அனுமதியுண்டு. இனக்கலவரம் மற்றும் இயக்கங்களின் ஆதிக்கத்துடன் தனது ஏமாற்றலைத் தொடர இந்தியாவே தகுந்த வாய்பான இடம் எனக் கண்ட பிரேமானந்தா, அங்கு தனது ஆச்சிரமத்தைத் தொடங்கினான். அத்துடன் 125 நாடுகளுக்கு தனது கிளைகளை விரிவுபடுத்தினான்.
ஆச்சிரமங்களில் பெண்களைத் தங்கவைத்து கல்வி புகட்டுவதாகக் கூறி பெண்கள்த் தங்கவைத்து கல்வி புகட்டுவதாகக் கூறி பெண்கள் விடுதியைத் திறந்தான். இந்தியா, தமிழ்நாட்டு அரசு ஆதரவுடன் அவர்களுக்கும் ஆசி வழங்கியபடி தனது மன்மத லீலைகளை தொடர்ந்தான். அங்கு தங்கி கல்விகற்ற பெண்களின் மாதவிலக்கு நாட்களைக்கூட அட்டவனையிட்டு தனது டயறியில் குறித்து வைத்துக்கொண்டு பெண்களை மிரட்டிக் கற்பழித்தான். மறுத்தவர்களைத் தண்டித்து தனக்குக் கீழ்படியச் செய்தான். அம்பலமாகும் போதும், எதிர்க்கும் போதும் படுகொலை செய்து உண்மைகளை மறைத்தான். மக்கள் தமது இயலாமையில் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவழிபடும் அப்பாவித்தனங்களை பயன்படுத்தி, இவன்போன்ற காவியுவடச் சாமிகள் மக்களின் பக்தி வெள்ளத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி அவர்களைக் குதறி வருவது இது முதல் சம்பவம் அல்ல. சத்திய சாயிபாவின் ஆச்சிரமத்தில் அண்மையில் 4 இளைஞர்கள் கொல்லப்பட்டதும் பெண் சம்மந்தப்பட்ட கொலையே என இந்திய அரசே ஒத்துகொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இதே சத்தியசாயிபாபாவை வீடியோ எடுத்த இந்தியத் தொலைத் தொடர்பு நிருபர், அதை மிகக் குறைந்த வேகத்தில் ஓடவிட்ட பொழுது சத்தியசயிபாபாவின் அற்புதங்கள் அனைத்துமே பொய்யெனக் கண்டுபிடித்தார். வெளியிலிருந்து ஒருவர் கொடுப்பது வீடியோவில் தெளிவாகவே தெரிந்தது. இதை ஒளி ஒலி பரப்ப தொலைகாட்சி நிறுவனம் மறுத்ததாம். இதன் பின்னணியில் இந்திய அரசு இருந்தது அம்பலபட்டது. இதுபோன்ற ஆசாமிகளை அரசியல்வாதிகளே உயிர்கொடுத்து பாதுகாத்து வளர்த்து எடுக்கின்றனர். மக்களைத் திசைதிருப்பி தமது பகல் கொள்ளைகளைத் தொடர இது வசதியாகவே அமைந்து விடுகிறது.
பிரோமானந்தா சுவாமியின் அருள்களை இலங்கையில் பல மந்திரிகளும், அவர்களின் மனைவிமாரும் பெற்றுக்பொள்ள படையெடுத்தனர். எதைஎதைப்பெற்றனரோ அவர்களுக்கே வெளிச்சம். தொண்டமான் சொந்த மண்ணில் தொடங்கிய உறவை தமிழ்நாட்டிலும் தொடந்தார். இந்தியாவரும் ஒவ்வருமுறையும் பிரரேமாந்த சுவாமியிடம் அருள்வாங்கி செல்கிறார். தொண்டா பலலட்சம் பெறுமதியான சொத்துக்ளுடன் பல நூறுபெண்களை கற்பழித்து சில பத்து கொலைகளுடன் இந்தச் போலி ச்சாமி பிரேமானந்தா இன்று கையும்களுவுமாக மாட்டிவிட்டார். மௌனசாமிகளின் மன்மத வேசம் இன்று காற்றில் பறக்கிறது.
பிரான்ஸ்சில் சத்தியசாயிபாபாவின் கிளையை தமிழர்கள் நடத்துவது ஏன்தானோ. சாயிபாபாவின் பெண வெறியாட்டங்கள் நாங்கு கொலைகளுடன் அம்பலமாகியும், போலிப்பித்தலாட்டங்களும் கன்னிப்பூசைகளும் அம்பலமாகியும் இவர்களுக்கு சூடுசுரணைவரவில்லையா? இவர்கள் பித்தலாட்டக்காரர்கள். காமுகர்கள், கொலையாளிகள். எல்லாச்சாமிகளும் பசுத் தோல் போர்தத புலிகளோ. இவர்கள் தண்டிக்கவேண்டிய குற்றவாளிகள் மட்டுமல்ல. இவர்கள் மாபெரும் சமூகவிரோதிகள்.
1994

<b> . .</b>