Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
þô§À¡! ¿¡õ!!
#8
<b>தெய்வீகம் கிரிமினல்மயம் பாலியல் குற்றங்கள்</b>



காவியுடைக் கயவர்கள் அரசியல் வாதிகள் தொழிலதிபர்கள் பொலிஸ் அதிகாரிகள் கூட்டுச்சேர்ந்து இந்நாட்டை பெண்கள் வாழமுடியாத புண்ணியபூமி ஆக்கிவிட்டார்கள்.

பொதுவில் கிரிமினல் குற்றங்கள் பெருகி வருவதைப்போவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கிரிமினல் குற்றங்கள் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. அவை சில தனிநபர்களை சம்மந்தபட்ட தனித்தனி சம்பவங்களாக இப்போது நடப்பதில்லை.

அமைப்பு ரீதியில் இயங்கக்கூடிய சமூகவிரோத கும்பல்களால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை சூறையாடப்படுகின்றன. ஒருபுறம் ஏற்கனவே தெய்வீகம் என்ற பெயரில் காமற்க்கூத்துக்ள் நடத்தும் காவியுடைக் கயவர்களின் ஆச்சிரமங்கள் மறுபுறம் பெருகி வரும் சமூகவிரோதக்கும்பல்கள் மபீயாக்களின் அட்டூயங்கள். இரண்டும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பொலிஸ் அதிகாரிகளுடன் கூட்டுச்சேர்ந்து இந்நாட்டையே பெண்கள் வாழமுடியாத புண்ணிய பூமி ஆக்கிவிட்டார்கள்.

முன்பு ஜுனியர்விகடன், தாராசு, நக்கீரன், பொலீஸ் செய்தி போன்ற கிசுகிசு ஏடுகளின் வதந்திகள் பரபரப்பு செய்திகளாக இருந்த இத்தகைய குற்றங்கள் இப்போது மதிப்புக்குரிய தேசிய ஏடுகளின் அதர்ச்சி அலரல் செய்திகளாகிவிட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து வீட்டைவிட்டு ஓடிப்போன கமல்சர்மா என்பவன் கேசவானந் என்று பெயரை மாற்றிக்கொண்டான். காவியுடைஅணிந்தான். குஜராத் மாநிலம் துவாரகா நகரில் சதானசேவா மண்டலம் என்கின்ற அமைப்பை நிறுவி மதப்பிரங்கம் செய்தான். பிறகு ஒரு அனாதை ஆச்சிரமம் நிறுவினான். அனாதை ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுமிகள், இளம் பெண்கள் ஊழியர்கள் ஆன்மீக ஆசி அருள் வழங்குவதாக ஈர்க்கப்பட்ட அப்பாவிகப் பொண்கள் என்று தனது காமவெறிக்குப் பலியாக்கினான்.

இப்படிப்பட்ட500 க்கும் மேலான பெண்களை மயக்கியும் மிரட்டியும் கற்பழித்தும் கெடுப்பதில் இந்தக்காவியுடைக் கயவனுக்கு ஹேமா சர்மா என்ற பெண்ணே உடந்தையாக இருந்திருக்கிறாள். இந்த கேசவானந்தே பல பெண்களைக் கெடுத்ததுமின்றி, அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் ஆகிய பெரும்புள்ளிகளின் காமவெறிக்கு அவர்களை இரையாக்கினான்.இதனால் தனது கிரிமினல் குற்றங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டதோடு, இலவசமாக பலஏக்கர் நிலமும், ஏராளமான சொத்துக்களும் ஆடம்பர வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டு பெரும் செல்வாக்குப் பெற்றான். தனது காமவெறிக்கு இணங்கமறுத்த பெண்களைக்கொலையும் செய்தான். பல கருச்சிதைவுகளும் செய்தான். அப்படிக் கருச்சிதைவின்போது ஒரு பெண் இறந்துபோனதால் இநதக் காவியுடைகயவன் கேசவாந்தின் இரகசிய வாழ்க்கை அம்பலமானது. அவன் கைதுசெய்யப்பட்டு நாடுமுழுவதும் பலரதுகடும் வெறுப்பு, ஆத்திரத்துக்கு இலக்காகி அவனுக்காக வாதாட ஒரு வழக்கறிஞ்ரும்முன் வராதநிலை ஏற்பட்டள்ளது. ஆனாலும் அவனது நெருங்கிய கூட்டாளிகளான பெரும் புள்ளிகள் எவரும் கைதாக வில்லை. அவனே இது தனக்கு எதிரான மதப் போட்டியார்களின் சதிதான் என்று திமிரோடு பேசி வருகிறான்.; இதைத் தொடர்ந்து அதே குஜராத் மாநிலம் "ரத் நகருக்கு அருகே ஒருஆச்சிரமத்தை நடத்திவரும் சுவாம்மி பகவான்ராம் என்கின்ற வசந்மோடி என்ற காவியுடைக் கயவனும் இதேகுற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளான். தான் பகவான் ராமனது அவதாரம் என்றும் தனதுபக்தன் லட்சுமனுடைய மனைவி நைனா பட்டேல் தான் உண்மையில் தனது மனைவி சீதை என்று சொல்லி அவளை அறையில் பூட்டிவைத்துத் தகாத முறையில் நடந்துவந்தான். இதனால் ஆத்திரமுற்ற அக்கிராம மக்கள் அவனது ஆச்சிரமத்தை சூறையாடித் தீயிட்டுக் கொழுத்தினர். அப்போது அதன் அடித்தனத்தில் இரகசிய அறையும், அதில் ஆபாச வக்கிர வீடியா புகைப்படங்களும் பெண்களது உள்ளாடைகளும் கருத்தடை சாதனங்களும் குவிந்து கிடந்ததைக் கண்டார்கள்.

தெற்க்கே திருவண்ணாமலையில்சாந்தி மலை அறக்கட்டளை எனப்படும் காவியுடைகளின் ஆச்சிரமத்தில் பூசாரியாக இருந்தமவுன சாமியார் என்ற பொன்னுச்சாமி கடந்த மாதம் மர்மமான முறையில் மாண்டுபோனான். இவன் அருள்வாக்கு தருவதாகக் கூறி பல பெண்களைக் கெடுத்து வருகிறான் இவனோடு சேர்த்து ஜெர்மன் இளைஞர்களிடம் நமது கிராமத்துப் பெண்களை கூட்டிக்கொடுத்து லட்சம் லட்சமாக சம்பாதித்து அறக்கட்டளை நிர்வாகிகளுடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக இவன் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது அவனிடம் அருள் பெறுவதாக வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து, கணவனால் தாக்கப்பட்டு அம்பலப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டுருக்கலாம் என்று உள்ளுர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அந்த அறக்கட்டளைக் கெதிராக பெண்கள் உட்பட பெருமளவு மக்கள் திரண்டு ஆர்பாட்டம் கூட நடத்தியுள்ளனர். ஜலகான் நகரில் நடந்துள்ள பாலியல் கிரிமினல் குற்றங்கள் வேறுமாதியானவை. அந்நகர காங்கிரஸ் கவுன்சிலர் காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினரின் மகன் சிவசேனாவின் உள்ளுர் பிரமுகர் இன்னும் சில பெரும் புள்ளிகள் அடங்கிய கிரிமினல் கும்பல் நகரையே குறிப்பாக இளம் பெண்களை பயபீதிக்குள்ளாக்கி வைத்திருந்தது. பல பள்ளி கல்லுரி பெண்களை காலதிப்பதாக மணந்து கொள்வதாக ஆசைவார்த்தை காட்டி பல பெண்களைக் கடத்திக் கொண்டுபோய் குளீர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து கற்பழித்தனர். அதை வீடியோ புகைப்படங்கள் எடுத்து பணக்காரவீட்டுப் பெண்களானால் மரட்டிப் பணம் பறித்தனர். சதாரணபெண்களானால் அதையே காட்டிக்காட்டி மேலும் மிரட்டி தாமும் கூட்டாளிகளும் சேர்ந்து தமது காமவெறிக்கு இரையாக்கி கொண்டனர். வீடியோ நாடா, புகைப்படங்களை விற்று சம்பாதித்தனர். ஜந்தாண்டுகளாக இந்த கிரிமினல் குற்றங்கள் நடந்து வந்தன.500-க்கும் மேற்பட்ட பெண்கள் இதற்குப் பலியாகினர். பொலிஸ் உளவுத்துறை எல்லாம் புரட்சியாளர்பளை வேட்டையாடத்தான். இப்படிப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்க்கல்ல. பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஒருவன் ஜலகான் குற்றக் கும்பலின் நடவடிக்கை குறித்து உளறிவிட்டதால்தான் விடயம் வெளியே பரவிவிட்டது. பத்திரிகைகள் ,சமூகசேவை அமைப்புக்கள், தனிநபர்கள், எதிர்கட்சியினர் பெரும்குரல் கொடுத்தபின் சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் குற்றங்களின் அளவு தன்மையைக் குறைத்துப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தப்புவிப்பதில் பொலிஸ் உடந்தையாகவே உள்ளது. சமூக இழிவு கருதி குற்றம் சுமத்தவும் சாட்சிசொல்லவும் பாதிக்கபட்ட பெண்கள் முன்வர மறுக்கின்றனர். இதுவும் குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிட்டது. அதிகாரத்தில் உன்ன பெரும்புள்ளிகளோடு நெருங்கிய தொடர்பு இருப்பதோடு அவர்களை மிரட்டித் தப்பிக் கொள்வதற்கான சில ஆதாரங்கள் இக் குற்றவாளிகளிடம் உள்ளன.

கடந்த ஒருஇரு மாதங்களில் அம்பலமானவைதாம் இந்த விவகாரங்கள் என்றாலும் இப்படிப்பட்ட கிரிமினல் குற்றங்கள் நமது நாட்டில் எங்கும் வேருன்றிப் போயுள்ளன. ஜலகான் மபீயா கும்பலைப் போலவே அஜ்மீர் நகரில் பாலியல் கிரிமினல் குற்றங்கள் நடந்த விவகாரம் ஓராண்டுக்கு முன்பு இராஜஸ்தானையும்குலுக்கியது. சென்னையில் நடிகர் சுமனும் ஒரு வீடியோ கடைக்காரனும் இப்படிச் செய்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிடிபட்டனர். கேரளத்தில் இப்படிப் பரவலாக நடப்பதாக பத்திரிகைச் செய்திகள் வெளிவருகின்றன. காவியுடை கயவாளிகள் நடத்தும் ஆச்சிரமங்கள் அனைத்துமே பாலியல் வன்முறைக் குற்றங்களின் ஊற்று மூலங்களாகவே உள்ளன. நாட்டின் பிரதமர் அரசுத்தலைவர் உட்பட உயர்பதவியிலுள்ள பலரின் ஆன்மீக குருவான சாயிபாவா ஆச்சிரமத்தில் பெண் விவகாரமாகவே பொலிஸ் தலையிட்டு நாலு இளைஞர்களைச் சுட்டுக் கொன்றுது என்று அரசுத்தலைவர் சர்மாவே ஒப்புக்கொண்டார். இன்னும் கடாச்சேரி, தேவேந்திரா பிரமச்சாரி, ரஜனிஷ் போன்றவர்களின் ஆச்சிரமங்கள் காமவெறியாட்ட மடங்களாகவே இருந்தன.

தமிழ்நாட்டிலும், முத்தக்காமாட்சி மேல்மருத்தூர் பங்காரு போன்ற திடீர் சாமியார்கள் முதற்கொண்டு தீனங்கள், மாடாதிபதிகள், அனைவரின் நடவடிக்கைகளுமே மர்மமாகவே உள்ளன. இவையெல்லாம் ஏதோ விதிவிலக்கான சிலரது கிரிமினல் வக்கிரப் புத்தியால் நடப்பவையல்ல. சாமியார்கள், மபீயா ரவுடிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாக இருக்கும்போது, அவர்கள் இந்தளவு ஆதிக்கம் பெற்றிருப்பதற்கான சமூகக் காரணங்களும் உள்ளன. அதிகாரப் பலமும், பணபலமும் பெற்றுள்ள பெரும் புள்ளிகளின் பின்பலமும் இக் குற்றவாளிகளுக்கு இருக்கிறது. அத்தோடு இவர்களின் குற்றங்களுக்கு கணிசமான பெண்கள் தாமே முன்வந்து, இசைந்து பலியாகியிருக்கின்றனர். தெய்வீகம் மதபோதனை, தந்திரீகம் போன்ற மூடநம்பிக்கை ஒருபுறம் ஜலகான் விவகாரத்தில் ஏராளமான பெண்கள் பலியானதால் அந்தநகரப் பெண்கள் அனைவருமே கெட்டுப்போனவர்கள் என்று கருதி அங்கிருந்து மணமுடிக்கவே மறுப்பதும், கற்பிழந்தவர்கள் என்று இழிவுபடுத்திப் புறக்கணிப்பதும் மறுபுறம், இரண்டுவகையிலும் பிற்போக்கின்ஆதிக்கத்துக்கு பெண்கள் இரையாகியுள்ளனர். ஜலகான் விவகாரத்தில் ஆடம்பர ஆபாச ஒழுக்கக்கேடு நிறைந்த பண்பாட்டின் செல்வாக்குக்கு நிறைந்த இரையாகியுள்ளனர். ஆக குற்றவாளிகளைத் தண்டிப்பது மட்டும் போதாது. அதற்க்கு அடிப்படையான இச் சமூக பண்பாட்டு இழிவுகளையும் துடைத்திட வேண்டும்.

நன்றி புதிய காலாச்சாரம். 1994
<b> . .</b>
Reply


Messages In This Thread
þô§À¡! ¿¡õ!! - by Magaathma - 04-03-2005, 01:22 PM
[No subject] - by Magaathma - 04-04-2005, 08:17 PM
[No subject] - by Magaathma - 04-18-2005, 07:59 PM
[No subject] - by tamilini - 04-18-2005, 08:01 PM
[No subject] - by Magaathma - 04-18-2005, 08:21 PM
[No subject] - by vasisutha - 04-18-2005, 08:52 PM
[No subject] - by kirubans - 04-18-2005, 11:18 PM
[No subject] - by kirubans - 04-18-2005, 11:48 PM
[No subject] - by kirubans - 04-18-2005, 11:55 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 11:52 AM
[No subject] - by kuruvikal - 04-19-2005, 12:42 PM
[No subject] - by shiyam - 04-19-2005, 12:43 PM
[No subject] - by Danklas - 04-19-2005, 04:13 PM
[No subject] - by Magaathma - 04-19-2005, 06:34 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 06:51 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 06:57 PM
[No subject] - by Magaathma - 04-19-2005, 08:25 PM
[No subject] - by kuruvikal - 04-19-2005, 08:32 PM
[No subject] - by kirubans - 04-19-2005, 08:47 PM
[No subject] - by kirubans - 04-19-2005, 09:01 PM
[No subject] - by kuruvikal - 04-19-2005, 09:04 PM
[No subject] - by Magaathma - 04-19-2005, 09:44 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 10:06 PM
[No subject] - by stalin - 04-19-2005, 10:42 PM
[No subject] - by kuruvikal - 04-20-2005, 11:37 AM
[No subject] - by Magaathma - 04-20-2005, 05:03 PM
[No subject] - by kuruvikal - 04-20-2005, 06:30 PM
[No subject] - by Mathan - 04-21-2005, 02:41 AM
[No subject] - by Eelavan - 04-21-2005, 08:48 AM
[No subject] - by kuruvikal - 04-21-2005, 09:07 AM
[No subject] - by stalin - 04-21-2005, 01:43 PM
[No subject] - by Magaathma - 04-21-2005, 10:35 PM
[No subject] - by stalin - 04-22-2005, 01:16 AM
[No subject] - by kirubans - 04-22-2005, 10:30 PM
[No subject] - by kirubans - 04-22-2005, 10:32 PM
[No subject] - by Magaathma - 04-23-2005, 01:24 PM
[No subject] - by Magaathma - 04-23-2005, 06:35 PM
[No subject] - by kirubans - 04-23-2005, 09:04 PM
[No subject] - by stalin - 04-23-2005, 09:58 PM
[No subject] - by Magaathma - 04-24-2005, 12:10 AM
[No subject] - by stalin - 04-24-2005, 12:51 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)