04-18-2005, 12:22 PM
சச்சின்
<img src='http://cinesouth.com/images/new/15042005-TRV0image1.jpg' border='0' alt='user posted image'>
திருமலை, மதுர, திருப்பாச்சி என வரிசையாக ஆக்ஷ்ன் சிக்ஸ் அடித்துவந்த விஜய், 'சச்சின்' என்னும் மைதானத்தில் காதல் சிங்கிள்களுக்கிடையே காமெடி பவுண்டரி அடித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளிலேயே அழகில் நூறு மார்க் எடுத்து தேவதையாய் வலம் வரும் ஜெனிலியாவிடம் ஐ லவ் யூ.. 'ஜொள்'ளாத மாணவர்களே இருக்க முடியாது. இப்படி இளசுகளின் மனசுக்குள் காதல் கலவரம் நடத்தும் ஜெனிலியாவிடம் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் வித்தியாசமாக பந்து வீசி பார்க்கிறார் விஜய். நாயகியோ, கண்டதும் காதலில் நம்பிக்கை இல்லை என கைவிரிக்கிறார்.
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நாயகனோ, நாயகியின் பதிலால் ரயில் தண்டவாளம், பாய்ஸன் பாட்டில், 'பார்' இப்படி எந்த முட்டாள்தனமான முடிவும் எடுக்காமல் முப்பது நாள் கெடுவுக்குள் 'ஐ லவ் யூ' சொல்லவைக்கிறேன் என சவால் விடுவதுடன் இடைவேளை. கேப்பில் கேண்டின் போய்விட்டு மறுபடியும் உட்கார்ந்தால், வெற்றி நாயகனுக்கா நாயகிக்காக என்பதற்கான விடை க்ளைமாக்ஸில் கிடைக்கிறது.
'ப்ரண்ட்ஸ்' படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க காமெடியில் முத்துக்குளிக்க முயன்றிருக்கிறார் விஜய். படத்திற்குப் படம் பின்னணியில் தாரை, தப்பட்டை முழங்க முதல் காட்சியில் அறிமுகமாகுபவர் இதில் ஆர்ப்பாட்டமின்றி அறிமுகமாவது வித்தியாசம். வாய்க்குள் நாக்கை மடக்கி 'டொக்' சவுண்ட்விட்டபடி கிரிக்கெட் ஆக்ஷ்னில் 'சச்சின்' என்று தனது பெயரை அறிமுகப்படுத்தும் காட்சியில் அரட்டையை ஆரம்பிப்பவர் பதிமூன்றாவது ரீல்வரை காமெடி சரத்தை கொளுத்திப்போட்டு கைத்தட்டலை பெறுகிறார்.
நாயகியின் அழகில் கல்லூரியே கட்டுப்பட்டு கிடக்க விஜய்யோ 'நீயெல்லாம் ஒரு அழகா..' என்று பொய்யாக கலாய்க்கும் காட்சியில் கலகலப்பு. வசீகரா பாடலை ஓடவிட்டு அதற்கேற்றவாறு விஜய் ஆட்டம் போடும்போது, போட்டி நடக்கும் கிரிக்கெட் மைதானத்தைவிட பலமடங்கு பாராட்டு சத்தம். சீனியர் மாணவர் வடிவேலுவிடம் பணிவு என்ற பெயரில் இடுப்பை நெளித்தபடி ஒரு நடை நடக்கும் காட்சியில், எப்படிப்பட்ட நரசிம்மராவ்களும் சிரித்தே ஆகவேண்டும். இப்படி படம் முழுவதும் விஜய் காமெடி கடை விரித்திருப்பதால் நொறுக்குத்தீனி கேட்காமலேயே வாண்டுகள் படம் பார்ப்பது நிச்சயம்.
'பாய்ஸி'ற்கு பிறகு தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கிய ஜெனிலியா டிஸோஸா 'சச்சின்' மூலம் மறுபடியும் கோலிவுட்டில் ரவுண்ட் வர வாய்ப்பு உள்ளது. உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் சின்ன முகத்தில் அழகு மட்டும் பிரம்மாண்டமாய் பிரகாசிக்கிறது. அடிக்கடி ஆத்திரப்படுவதும், நமக்கு பிடிச்சமாதிரி இருக்குறதுல வர்ற சந்தோஷமே தனிதான் என விஜய் சொன்னதை கேட்டு குட்டை பாவாடையுடன் கல்லூரிக்கு ஸ்டைலாக நடந்துவரும் காட்சியிலும் பிரமாதப்படுத்துகிறார்.
நாயகியின் டிரஸ் எப்படியோ அதுமாதிரிதான் பிபாசா பாசுவின் கேரக்டரும் தம்மாதுண்டு. திடீரென வருகிறார், ஆக்ஸிடென்ட் உபயத்தில் விஜய்யுடன் கட்டி புரண்டு உருள்கிறார். மறுபடியும் சம்பந்தமின்றி நாயகிக்கு காதல் அறிவுரை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார். சரி போனதெல்லாம் போகட்டும் அழகு பிசாசு என்றெல்லாம் சொன்னார்களே என கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்தால் அழகு பிசாசு வர்ணிப்பில் இரண்டாம் பாதி வார்த்தை மட்டுமே மிச்சமாகிறது.
ஒன்பது வருஷம் ஒரே வகுப்பில் படிக்கும் 'கெட்டிக்கார' மாணவராக வரும் வடிவேலு அவ்வப்போது மட்டும் கிச்சுகிச்சு மூட்டுகிறார். மற்ற நேரங்களில் நகைச்சுவை பெயரில் கீறிவிடுகிறார். சந்தானம், பாலாஜி வகையறாக்களும் வதைக்கின்றனர்.
விஜய்யின் தந்தையாக ஒரே ஒரு காட்சியில் வரும் ரகுவரன், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பும் கிரிக்கெட் வீரராய் காணாமல் போவது ஏனோ?
கதைக்களம் ஊட்டி என்பதால் படம் முழுவதும் புகைவருவது போல் காட்டினால் சூப்பராக இருக்கும் என ஒளிப்பதிவாளர் ஜீவாவுக்கு யார் தூபம் போட்டதோ தெரியவில்லை. பாத்ரூம் காட்சியில்கூட டன் கணக்கில் டார்டாய்ஸ் கொளுத்தியதுபோல ஒரே புகைமூட்டம். அதுவே படம் பார்ப்பவர்களுக்கு கொசுக்கடியாய் அமைந்துவிடுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 'குணடு மாங்கா தோப்புக்குள்ள...' உள்பட குத்துபாடல்கள் ரசிகர்களை கூத்தாட வைக்கும. போனா போகுதென்று ஒரே ஒரு மெலடி மெட்டு, பட்டாணிகளுக்கு நடுவில் பிளம் கேக்.
மகேந்திரனின் வாரிசு இயக்கிய படமாச்சே என்ற எதிர்பார்ப்புடன் உட்கார்ந்தால் ஒரு இடத்தில்கூட எதிர்பார்ப்பை நிறைவேற்றாத இயக்குனர் ஜானை தேடவேண்டியுள்ளது. கோடீஸ்வரனின் மகனான விஜய் சாதாரண கல்லூரியில் ஏன் படிக்கவேண்டும்? அவ்வளவு நாள் கழித்து மகனை பார்க்கவரும் ரகுவரன் சாதாரணமாக மகனுக்கு ஹாய் சொல்லிவிட்டு ஏன் புறப்படவேண்டும்? தேவையில்லாமல் பிபாசுபாசு, விஜய் - ஜெனிலியா விவகாரத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? என நிறைய கேள்விகளுக்கு இயக்குனரிடமிருந்து பதில் வேண்டும்.
பம்பரம் விடுவது, ஆம்லெட் போடுவது, எண்ணை ஊற்றுவது என நாயகியின் வயிற்றில் என்னென்னவோ செய்தாகிவிட்டது. புதுசா எதையாவது சொல்ல வேண்டுமென மூளையை கசக்கி, பிபாசுவின் உச்சி முதல் உள்ளங்கால்வரை விஜய் ஒற்றை பூவிதழை ஊதி தள்ளும் காட்சியை கண்டுபிடித்ததை தவிர வேறு என்ன சொல்லியிருக்கிறார் இயக்குனர் என பார்த்தவர்களிடம் கேட்டால் திருதிருவென முழிப்பது நிச்சயம்.
'சச்சின்' ஆஃப் செஞ்சுரி.
சினி சவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>