04-18-2005, 11:48 AM
<img src='http://img225.echo.cx/img225/2418/kagayaambiente4na.jpg' border='0' alt='user posted image'>
<b>என் மனக் கோட்டைக்குள்
ஒரு வாசம்
என்னவள் வாசம்...!
உடலாளும் அவள் நேசம்
மலர்ந்திட்ட மங்கல நேரம்
மனதெங்கும் வசந்தம்
மலர்க்கொடி நாட்டி
புரியுது அன்பாட்சி....!
அன்புக்கரசி கலைக்குவாணி
நினைவுப் புயலாய்
என்னைத் துரத்துறாள்
படை கொண்ட அவள் வதனம்
காட்டியது முதலாய்...!
பக்குவமாய் இருந்த உள்ளம்
பள்ளி கொள்ள மறக்குது
பள்ளி செல்லவும் மறுக்குது
பறவை நானும்
கடமை நாடி பறக்க முயல
சிறகும் அவள் பெயர்
சொல்லித் துடிக்குது...!
அவள் வருந்திசை
நாடிப் பறக்குது...!
சிந்தை கலங்கா
சிட்டு இது
சின்னவள்
சிங்கார மொழி தேடி
சிறகடிக்குது
சின்னதாய் ஓர் வார்த்தை
தினமும் உதிரடி
தின்ன எனக்கு
அதுதான் தீனி...!
காலமும் உன்
பாசம் வீசி
சுவாசம் தந்து
என் மூச்சுக் காத்திடு...!
நிஜக் கண்கள் திருடி
கண்ணாகியவள் காட்டுவது - தன்
கனவுக் காட்சியாக
நிஜம் மறக்குது
காலமும் வீணாகுது...!
மலரே மனமி(ர)றங்கி
என் கரம் சேராயோ
உண்மையாய் நித்தியமாய்
உள்ளத்தில் பொங்கும்
என் அன்பில் மூழ்காயோ...!
காற்றோடு போகும்
கப்பலாய் அன்றி
என் உயிரோடு கலந்திட்ட
உறவாக....!</b>
<b>என் மனக் கோட்டைக்குள்
ஒரு வாசம்
என்னவள் வாசம்...!
உடலாளும் அவள் நேசம்
மலர்ந்திட்ட மங்கல நேரம்
மனதெங்கும் வசந்தம்
மலர்க்கொடி நாட்டி
புரியுது அன்பாட்சி....!
அன்புக்கரசி கலைக்குவாணி
நினைவுப் புயலாய்
என்னைத் துரத்துறாள்
படை கொண்ட அவள் வதனம்
காட்டியது முதலாய்...!
பக்குவமாய் இருந்த உள்ளம்
பள்ளி கொள்ள மறக்குது
பள்ளி செல்லவும் மறுக்குது
பறவை நானும்
கடமை நாடி பறக்க முயல
சிறகும் அவள் பெயர்
சொல்லித் துடிக்குது...!
அவள் வருந்திசை
நாடிப் பறக்குது...!
சிந்தை கலங்கா
சிட்டு இது
சின்னவள்
சிங்கார மொழி தேடி
சிறகடிக்குது
சின்னதாய் ஓர் வார்த்தை
தினமும் உதிரடி
தின்ன எனக்கு
அதுதான் தீனி...!
காலமும் உன்
பாசம் வீசி
சுவாசம் தந்து
என் மூச்சுக் காத்திடு...!
நிஜக் கண்கள் திருடி
கண்ணாகியவள் காட்டுவது - தன்
கனவுக் காட்சியாக
நிஜம் மறக்குது
காலமும் வீணாகுது...!
மலரே மனமி(ர)றங்கி
என் கரம் சேராயோ
உண்மையாய் நித்தியமாய்
உள்ளத்தில் பொங்கும்
என் அன்பில் மூழ்காயோ...!
காற்றோடு போகும்
கப்பலாய் அன்றி
என் உயிரோடு கலந்திட்ட
உறவாக....!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

