04-18-2005, 04:04 AM
<img src='http://img23.echo.cx/img23/6591/trisha2531vn15pd.jpg' border='0' alt='user posted image'>
உன் குரல் வழி
வார்த்தைகள் வழியும்....!
எந்தன் செவியினில்
அமுதம் ஊறும்....!
இதை உன் உள்ளமும் அறியும்
என்பது எனக்கும் தெரியும்....!
மனதினுள் மனக்கோட்டை
மண் வீடாக
கடல் கரையோரம்
வீற்றிருக்கிறதே
அலைகளின் கரங்கள்
தீண்டும் வரைக்கும்,....!
அமுதாகி வந்த உன்னில்
அமிலமும் காண்கிறேன்....!
இரண்டும் சேர்ந்து
செய்யும் இன்பவதை
என்னில் உறையும்
உனக்கும் புரியும் - என்பதை
என் மனம் அறியும்....!
காற்றிலே கலந்து நீ
காதோரம் காதல் சேதி
கவியாக புனைந்திட
பாவியாக நான்
காலத்தைக் கரைக்கிறேன்
கண்ணீரின் துணையுடன் - என்
துணையாக நீ வருவாய்
என்ற துணிவில்....!
உன் குரல் வழி
வார்த்தைகள் வழியும்....!
எந்தன் செவியினில்
அமுதம் ஊறும்....!
இதை உன் உள்ளமும் அறியும்
என்பது எனக்கும் தெரியும்....!
மனதினுள் மனக்கோட்டை
மண் வீடாக
கடல் கரையோரம்
வீற்றிருக்கிறதே
அலைகளின் கரங்கள்
தீண்டும் வரைக்கும்,....!
அமுதாகி வந்த உன்னில்
அமிலமும் காண்கிறேன்....!
இரண்டும் சேர்ந்து
செய்யும் இன்பவதை
என்னில் உறையும்
உனக்கும் புரியும் - என்பதை
என் மனம் அறியும்....!
காற்றிலே கலந்து நீ
காதோரம் காதல் சேதி
கவியாக புனைந்திட
பாவியாக நான்
காலத்தைக் கரைக்கிறேன்
கண்ணீரின் துணையுடன் - என்
துணையாக நீ வருவாய்
என்ற துணிவில்....!
" "
" "
" "

