Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
9 பேர் சுட்டுக் கொலை... !
#24
சொறிவில மோதலில் மறைக்கப்பட்ட நான்கு சடலங்கள் இந்தியர்களுடையது?

சொறிவில மோதலில் இறந்த ஒன்பது சடலங்களில் நான்கு சடலங்கள் இந்தியர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பொலன்னறுவை மாவட்டம் சொறிவில கிராமத்தில் கருணா குழுவினரின் முகாமில் நடந்த இத்துப்பாக்கி சூட்டுச்சம்பவமானது சிறீலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கருணா குழுவினரின் முகாம்கள் இருக்கின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கருணா குழுவினருக்கு பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்த பிரதேசத்தில் முகாம்கள் இருப்பதை ஆங்கில வார இதழான சண்டே லீடர் சில வாரங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியது.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பிரதிநிதி ஸ்டீன் ஜோர்னசன் சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னலையில் அளித்த சாட்சியத்தில் இதனை உறுதிபட தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியத்திலும் இதனை நிராகரிக்கும் வகையில் சாட்சியமளித்திருந்தனர். இவர்கள் அதாவது நான் சொல்வதெல்லாம் உண்மை என சத்தியம் செய்து இச்சாட்சியத்தை அளித்துள்ளனர்.

இப்படி இவர்கள் சாட்சியமளித்து இரு வார காலத்திற்குள் கருணா குழுவினரின் முகாம்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இவர்களது சாட்சியம் பொய் என்பதை நிரூபித்து விட்டதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இச்சம்பவமானது சிறீலங்கா அரசிற்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை மேலும் உறுதிப்படுத்தியதாகவே கருத வேண்டியுள்ளது.

இருந்தபோதிலும் சிறீலங்கா இராணுவ அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் அப்படியான முகாம்கள் எதுவும் இல்லை என ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

குறிப்பிட்ட கருணா குழுவின் முகாமில் தங்கியிருந்தவர்கள் தொடர்பாக தொடர்ந்தும் மர்மங்கள் நீடிக்கின்றன. இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்பினர் சில தகவல்களை ஊடகங்களுக்கும் தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது. ஆனால் நான்கு சடலங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் பொலிசாரினால் இந்திய வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் பொலிசார் இது பற்றி எதுவும் கூற மறுக்கின்றனர்.

இதனைத் தவிர இரண்டு சாக்குகளில் துப்பாக்கி ரவைகள்ää இராணுவ உரு மறைப்பு வலைகளும் அங்கு காணப்பட்டுள்ளன.
நன்றி: புதினம்
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 8) :wink:
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 04-15-2005, 07:13 AM
[No subject] - by sinnappu - 04-15-2005, 07:40 AM
[No subject] - by thamilvanan - 04-15-2005, 07:49 AM
[No subject] - by கறுணா - 04-15-2005, 02:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 02:09 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 03:00 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 04:38 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:23 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:25 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 06:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 06:41 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 07:40 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:09 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:12 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 08:16 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 08:26 PM
[No subject] - by KULAKADDAN - 04-15-2005, 08:48 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:14 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:18 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:41 PM
[No subject] - by eelapirean - 04-16-2005, 06:13 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 03:30 PM
[No subject] - by anpagam - 04-18-2005, 02:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)