04-18-2005, 02:12 AM
இருபாலையில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி; இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் உள்ள இருபாலைச் சந்திப்பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற மினி பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் காயமடைந்தனர். இச் சம்பவத்தையடுத்து அங்கு வந்த பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய மினி பஸ்சை அகற்ற முற்பட்டதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பொலிஸாரை விரட்டியடித்து சம்பவத்துடன் தொடர்புடைய மினி பஸ்சை எரியூட்டியுள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
முகமாலையிலிருந்து பயணிகளுடன் வந்து கொண்டிருந்த மினி பஸ் ஒன்று இருபாலைச் சந்தியில் ஏற்கனவே துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் விபத்துக்குள்ளாகிய நிலையில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளையும் அதனை ஓட்டி வந்தவர்களையும் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவரும் இருபாலைப் பகுதியைச் சேர்ந்தவருமான தேவராஜா உதயகுமார் (வயது 26) என்பவர் பலியானதுடன், அதே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களான தேவராஜா ஜெயராஜ் (வயது 28) செல்லையா றஞ்சன் (வயது 26) ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய மினி பஸ்ஸினை சம்பவ இடத்திலிருந்து அகற்ற முற்பட்டனர்.
எனினும், அங்கு திரண்ட மக்கள் நீதிவான் சம்பவ இடத்தை பார்வையிடமுன் மினி பஸ்ஸை அங்கிருந்து அகற்ற வேண்டாம் என கோரினர். இதனை ஏற்க மறுத்த பொலிஸார், வலுக் கட்டாயமாக சம்பவ இடத்திலிருந்து மினி பஸ்ஸை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய முற்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாரை அங்கிருந்து விரட்டியடித்ததுடன் சம்பவத்திற்குக் காரணமான மினி பஸ்ஸையும் அடித்து நொருக்கி தீயிட்டனர். இதில் அம் மினி பஸ் முற்றாக எரிந்து நாசமானது.
இதனையடுத்து, அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. யாழ் மாநகர சபையின் தீயணைக்கும் படையினர் எரிந்து கொண்டிருந்த மினி பஸ்ஸின் தீயை அணைக்க முற்பட்ட போதும் அது முற்றாக எரிந்து நாசமாகிவிட்டது.
இவ் விபத்தினால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதியூடான போக்குவரத்தைத் தடை செய்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் வீதிக்கு குறுக்காக ரயர்களைப் போட்டும் எரித்தனர். இதனால் இவ்வீதியூடாக போக்குவரத்துத் தடைப்பட்டது.
இதனையடுத்து, பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியதையடுத்து பொது மக்களும் பொலிஸார் மீது கற்களை வீசினர். இதனால் அங்கு ஒரு களேபரம் ஏற்பட்டது.
எனினும், அங்கு வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தினக்குரல்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>