Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவின் பெயரால் வன்னியில் தாக்குதலுக்கு இராணுவம்
#5
அண்மையில் தென் தமிழீழ சொருவிலில் துரோகக் கும்பலுக்கு எதிரான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய-இலங்கை புலனாய்வாளர்களினால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராக "கருணா கும்பலின் பெயரில்" செயற்பட்ட "ENDLF" துரோகக் கும்பல் என்பது வெட்ட வெளீச்சமாகியுள்ளது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட துரோகிகளின் "விஜயன்" என்பவன் "ENDLF" கும்பலின் இந்திய பிரஜாவுரிமை பெற்ற முன்னனித் தலைவனென்றும், இந்திய அமைதிப்படை காலத்தில் திருமலையில் முகாமிட்டு பல தமிழ் இளையர்கள், யுவதிகள் கொல்லப்பட்டதற்கும், காணாமல் போவதற்கும் காரணமான இரத்த வெறி பிடித்த மிருகம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இவ் "ENDLF" கும்பலானது இலங்கை-இந்திய ஒப்பந்த காலத்தில் இந்திய புலனாய்வுப் பிரிவால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கும்பலாகும். ஆரம்பத்தில் "PLOTE". "EPRLF" களில் இருந்தவர்களைச் சேர்த்து "பரந்தன் ராஜன்", "டக்லஸ்" கூட்டுத் தலைமையுடன் "THREE STAR" எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின் "ENDLF" என பெயர் மாற்றம் பெற்ற இக்கும்பலானது ஆரம்பத்திலேயே தலைமைப் போட்டி "பரந்தன் ராசன்", "டக்லஸ்" இனுள் ஏற்பட்டதன் காரணமாக பல "டக்லஸ்ஸின்" ஆதரவாளர்கள் "பரந்தன் ராஜனினால்" கொல்லப்பட "டக்லஸ்" இந்தியாவிற்கு தப்பியோடிய சம்பவம் நடைபெற்றது. இதன் பின் இக்கும்பல் பின் இந்திய அமைதிப்படை உதவியுடன் யாழ்நகர், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருமலை, மட்டு-அம்பாறையில் நர மாமிச வேட்டையாடிய நிகழ்வுகள் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க, மன்னிக்க முடியாத ரணங்கள்.

பின் வரலாற்றுத் தோல்வியுடன் இந்திய இராணுவம் மூட்டை முடிச்சுகளோடு பின் வாங்கிய போது ஈழத்தை விட்டு அடித்துத் துரத்தப்பட்ட இக்கும்பலானது இந்தியாவில் பல இடங்களில் தங்க விடப்பட்டது. அங்கு அண்ணநகர், வடபழனி, ... உட்பட தங்கியிருந்த இடங்களில் கொள்ளைகள், கொலைகள், வழிப்பறி, ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் என தம் திறமைகளை விஸ்தரித்த இக்கும்பலிலுள்ள பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல, இக்கும்பல் அழிந்துவிடும் தறுவாயில்தான் "கோடாலிக் காம்பு கருணாவின்" துரோகங்கள் செயற்பாடுகள் தணலாக எறிந்து கொண்டிருந்த இந்திய புலணாய்வாளர்களுக்கு எண்ணையாக மாறீயது. மீண்டும் "துரோகி கருணாவின் பெயரால்" இக்கும்பகுக்கு புத்துயிரளிக்கப்பட்டது.

இன்று தமிழ்த் தேசியத்தின் பலம், வளர்ச்சி, ... பற்றியறியாத இக்கும்பலானது இந்திய எஜமானர்களினால் வேள்விக்கு வளர்க்கப்பட்ட அடிமாடுகளாக ஒன்றன்பின் ஒன்றாக மாலைகளிட்டு அனுப்படுவது, இக்கும்பலின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
" "
Reply


Messages In This Thread
[No subject] - by jeya - 04-17-2005, 02:02 PM
[No subject] - by eelapirean - 04-17-2005, 04:11 PM
[No subject] - by MEERA - 04-17-2005, 08:40 PM
வேள்விக்குச் செல்லும் அடிமாடுகள்! - by cannon - 04-18-2005, 12:59 AM
[No subject] - by நேசன் - 04-18-2005, 01:06 AM
[No subject] - by MEERA - 04-18-2005, 01:41 AM
[No subject] - by sinnappu - 04-18-2005, 08:06 AM
[No subject] - by thuvarakan - 04-20-2005, 10:20 AM
[No subject] - by aswini2005 - 04-20-2005, 10:29 AM
[No subject] - by sinnappu - 04-20-2005, 11:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)