04-17-2005, 06:06 PM
கோலிவுட்டிலிருந்து மாயமான த்ரிஷா
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/trisha-srikanth-300.jpg' border='0' alt='user posted image'>
வளர்த்துவிட்ட கோலிவுட்டை த்ரிஷா இப்போது மறந்தே விட்டாராம். முழு நேரமும் ஐதராபாத்திலேயே கிடக்கிறாராம்.
சிம்ரனுக்குப் பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வரும் நடிகை என்றால் அது த்ரிஷா தான் என்றால் அது மிகையில்லை. அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களும் த்ரிஷா இருந்தால் தான் ஆச்சு என்று கூறுகிறார்கள்.
ஆனால் அவருக்கு என்னவோ தெலுங்கில் தான் குறியாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசிக்கலாம். வேறு என்னவாக இருக்க முடியும்? எல்லாம் துட்டு படுத்தும் பாடு தான்.
கோலிவுட்டை விட தெலுங்கில் கொட்டிக் கொடுக்கிறார்களாம். தெலுங்கில் ஒரு படம் ஓடிவிட்டால் போதும். அப்புறம் தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் பொட்டியுடன் கியூவில் நிற்பார்கள். இதே நிலை தான் இப்போது த்ரிஷாவுக்கும் ஏற்பட்டுள்ளது.
இதனால் "ஏத்தி விட்ட ஏணியையே' எட்டி உதைக்கும் அளவுக்கு த்ரிஷா வந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவரை எப்போது தொடர்பு கொண்டாலும் ஹைதராபாத்தில் வாசம் செய்வதாகவே தகவல் வருகிறது என்று பொருமுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.
த்ரிஷா தமிழை விட தெலுங்கில் என்னவோ சில ஹிட் படங்களை கொடுத்தது எல்லாம் வாஸ்தவம் தான். ஆனால் ஹைதராபாத்திலேயே டென்ட் அடிக்கும் அளவிற்கு ஒன்றும் அவர் அங்கு பிசியாக இல்லை என்று ஆதங்கத்தை கொட்டுகின்றனர் கோடம்பாக்க தயாரிப்பாளர்கள்.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/trisha4-450.jpg' border='0' alt='user posted image'>
இவர்களது இந்தக் கோபத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. நல்ல கதை, நல்ல டைரக்டருடன் முன்னணி நடிகர்களை பார்க்க சென்றால் அவர்கள் கூறுவது த்ரிஷாவை புக் செய்து விட்டு வாருங்கள் பார்க்கலாம் என்று.
அவர்களுக்கு சரி சொல்லிவிட்டு த்ரிஷாவை பார்க்கப் போனால் அவர் இருப்பது ஹைதராபாத்தில். சரி அவரது பாடிகார்டை (பயப்படாதீர்கள் அம்மா தான்) பிடித்தால், அவர் கூறுவது என்ன தெரியுமா?
அவளுக்கு சென்னையை விட ஹைதராபாத் ரொம்பப் பிடித்திருக்கிறது. இது தவிர அவள் தெலுங்கில் சில படங்களை ஒத்துக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் அவள் அங்கேயே இருக்கிறாள் என்கிறாராம்.
சரி, தெலுங்கில் தருவதை விட அதிகமாகவே தருகிறோம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா என்றால் சம்பளத்துக்காக குப்பை படங்களில் எல்லாம் என் மகள் நடிக்க மாட்டாள். அவள் ரேஞ்சே இப்போ வேறு என்று கூறுகிறாராம் இந்த அம்மா.
வேறு வழியில்லாமல் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விட்டு நடையைக் கட்டுகிறார்களாம் கோடம்பாக்கத் தயாரிப்பாளர்கள்.
தட்ஸ் தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>