04-17-2005, 01:02 PM
கருணா குழு - ஈ.என்.டி.எல்.எப். கூட்டை அம்பலமாக்கியுள்ள சொறிவில் தாக்குதல்
*<b> முகாமில் காணப்பட்ட புகைப்படங்கள் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள்</b>
கிழக்கில் தொடரும் மோதல்களின் பின்னணியில் பொலநறுவை மாவட்டம் தற்போது கொலைக்களமாக மாறியுள்ளது. யுத்தம் நடைபெற்ற மிக நீண்டகாலப் பகுதியில் ஒரு சில சம்பவங்களுக்கான களமாயிருந்த பொலநறுவை மாவட்ட எல்லைப் பகுதி இன்று சமர்க்களமாக மாறியுள்ளது. அடிக்கடி இங்கு நடைபெறும் மோதல்கள் மற்றும் காய் நகர்த்தல்களால் பொலநறுவை மாவட்ட எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழ் மக்கள் திகைப்படைந்து போயுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் நடவடிக்கைகளுக்கு புலிகள் முற்றுப் புள்ளி வைத்ததையடுத்து கருணா குழுவினர் மட்டக்களப்பின் வடமேற்கு எல்லையிலுள்ள பொலநறுவை மாவட்டத்திற்குள் நகர்ந்தனர். இப்பகுதியில் வெலிக்கந்தை படைமுகாமிற்கு சமீபமாகவிருந்து இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் இவர்கள் செயற்பட்டு வருவதாக புலிகள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை படைத்தரப்பு மறுத்து வருகின்ற போதிலும் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள் புலிகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகின்றன. அதேநேரம், இந்த எல்லைப்புற மாவட்டத்தில் புலிகளுக்கெதிராக நடைபெறும் தாக்குதல்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
பொலநறுவை - மட்டக்களப்பு எல்லையில் வெலிக்கந்தைக்கு அருகிலிருந்து செயற்பட்ட கருணா குழுவினர், பின்னர் புலிகளின் பல அதிரடித் தாக்குதல்களையடுத்து, பொலநறுவை - வாழைச்சேனை வீதியில், மேலும் மேற்காக நகர்ந்து மன்னம்பிட்டிக்கும் வெலிக்கந்தைக்கும் இடையில் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்தனர்.
இப்பகுதிகளிலுள்ள தமிழ் கிராமங்களுக்கு மிக நெருக்கமாக சிங்களக் கிராமங்களிருப்பதால் இங்குள்ள தமிழ் -சிங்கள மக்களிடையே திருமண உறவுகளும் சர்வ சாதாரணம். அதேநேரம் இப்பகுதியில் ஆங்காங்கே முஸ்லிம் கிராமங்களுமுள்ளதால் இந்த எல்லைப் புறப் பிரதேசம் தங்களுக்கு பாதுகாப்பானதென கருணா குழுவினர் கருதியிருக்கலாம்.
அதேநேரம், புலிகளுக்கெதிரான கருணா குழுவின் நடவடிக்கைகளின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவே இருப்பதாய் குற்றஞ்சாட்டப்பட்டு வருவதால் வெலிக்கந்தை மற்றும் மன்னம்பிட்டி படை முகாம்களின் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தங்களுக்கு அருகே இவர்களை வைத்துக் கொண்டு இயக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
இதைவிட, கிழக்கிலிருந்து வன்னிக்கான புலிகளின் தரை வழிப் பயணம் இப் பகுதிகளூடாகவே நடைபெறுவதால் புலிகளின் முக்கியஸ்தர்களை மட்டக்களப்புக்கு வெளியே தங்களுக்குச் சாதகமான இடத்தில் வைத்து இலக்கு வைக்கவும் கருணா குழுவினருக்கு இப் பிரதேசம் மிகவும் வசதியாகவிருந்தது.
எனினும், இப் பகுதிகளுக்குள்ளும் கருணா குழுவுக்குள்ளும் ஊடுருவிய புலிகள் இப் பகுதிகளில் வைத்து கருணா குழுவினர் மீது அடுத்தடுத்து அதிரடித் தாக்குதல்களை நடத்தி வந்ததால், பொலநறுவை - வாழைச்சேனை பிரதான வீதிக்கு சமீபமாகவிருந்து செயற்பட்ட கருணா குழுவினர் பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதான வீதியிலிருந்து கிராமங்களுக்குள்ளே நீண்டதூரம் சென்று பாதுகாப்பு தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தீவுச்சேனை தமிழ் கிராமமும் இவ்வாறானதொன்றே. மேற்படி பிரதான வீதியின் வடக்குப் பக்கமாக மன்னம்பிட்டிக்கும் வெலிக்கந்தைக்கும் இடையில் ( வெலிக்கந்தைக்கு சமீபமாக) பிரதான வீதியிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் தீவுச்சேனையில் பலத்த இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்கள் முகாம் அமைந்திருந்தது. கடந்த மாத நடுப்பகுதியில் ஆங்கில வார இதழ் ஒன்றினால் அம்பலப்படுத்தப்பட்டது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாமிருப்பது அம்பலத்திற்கு வந்த மறுநாள் இந்த முகாம் மீது புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்த இது மேலும் அம்பலப்படுத்தப்பட்டது. கிழக்கில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் கூட போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இங்கு கருணா குழுவின் முகாமிருப்பதாகத் தெரிவித்தனர்.
எனினும், தீவுச்சேனைக்கு நீண்ட நாட்களின் பின்னர் கண்காணிப்புக் குழுவினர் சென்ற போது அங்கு, கருணா குழுவினரின் முகாமிருந்த அடையாளங்கள் இல்லாதிருந்தன. ஆனாலும், தங்கள் விசாரணைகள் தொடர்வதாக கண்காணிப்புக் குழு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வெலிக்கந்தைக்கு தெற்கே (பொலநறுவை - வாழைச்சேனை வீதிக்கு தெற்கே) சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் திம்புலாகல பிரதேச சபை எல்லைக்குள்ளும் அரலகன்வில பொலிஸ் பிரிவிலுமுள்ள சொறிவில் தமிழ் கிராமத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
சொறிவில் கிராமத்திலிருந்து மேலும் தெற்காக (அம்பாறை நோக்கி) ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வண்ணாந்துறை எனும் பகுதியுள்ளது. இது பற்றைக் காடுகள் நிறைந்த பகுதி. இப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆயுதக் குழுவொன்று முகாமிட்டுள்ளது. இங்கு பத்திற்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் நடமாடுவதை அப் பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
சொறிவில்லுக்கு அருகே மலியதேவபுர, நாமல்பொக்குண கிராமங்களுமுள்ளன. சொறிவிலில் இந்த ஆயுதக்குழு முகாம் அமைத்த பின்னர் மேற்படி மூன்று கிராமங்களிலும் இந்த ஆயுதக் குழுவின் நடமாட்டங்களும் நடவடிக்கைகளும் அதிகரித்தன. மலியதேவபுர மற்றும் நாமல் பொக்குண கிராமங்களில் 121 சிங்களக் குடும்பங்கள் வசிக்கின்றன. சொறிவிலில் 246 குடும்பங்களுள்ளன. திம்புலாகல விகாரைக்கு செல்லும் பாதையின் தென் பகுதியிலேயே இந்த மூன்று கிராமங்களுமுள்ளன.
சொறிவில் மட்டக்களப்பு எல்லையிலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. கடந்த வாரம் இந்த மூன்று கிராமத்தவர்களையும் கூட்டமொன்றுக்கு அழைத்த இந்த ஆயுதக் குழு, இந்த மக்களிடமிருந்து ஆதரவு தேடும் முயற்சியில் ஈடுபட்டது. இப்பிரதேசத்தவர்கள் பெரும்பாலானோர் வறியவர்களென்பதால் இவர்களது வருமானத்திற்காக சில சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தூண்டிய இந்த ஆயுதக் குழு இதற்குத் தாங்களும் உதவுவதாகவும் கூறியதாக `லங்காதீப' சிங்களப் பத்திரிகை தெரிவித்திருந்தது.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னம் அதிகமாயிருக்கும் இப்பிரதேசத்திலேயே இந்த ஆயுதக் குழுவின் முகாமிருந்துள்ளது. ஐந்து சிறிய கொட்டில்களில் மூன்று கொட்டில்களுக்குள் பத்துக்கும் மேற்பட்டோரும் இரண்டுக்குள் அவர்களுக்கான உணவுப் பொருட்களும் இருந்துள்ளன. இங்கேயே வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் திடீர் தாக்குதலொன்று நடைபெற்றதில் இவற்றிலிருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொழுது புலர்ந்த பின்னர் அப்பகுதிக்குச் சென்ற கிராமவாசிகள், மூன்று கொட்டில்களுக்குள்ளும் அவற்றின் வெளிப்புறத்திலும் 9 பேர் இறந்து கிடப்பதையும், சிலர் படுகாயமடைந்திருப்பதையும் பார்த்துள்ளனர். படையினரும் பொலிஸாரும் பின்னர் அங்கு வந்து இறந்தவர்களது சடலத்தை அரலகன்வில ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றதுடன் காயமடைந்த இருவரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
எனினும், ஐந்து சடலங்களே ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மிகுதி நான்கு சடலங்களுக்கும் என்ன நடந்ததெனத் தெரியவரவில்லை. ஆனாலும், தாங்கள் 9 சடலங்களை பார்த்ததாக கிராமவாசிகள் கூறுகின்றனர். அப்படியாயின் மிகுதி நால்வரும் இராணுவத்தைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
முதலில் இந்தச் சம்பவத்தை பற்றி படைத்தரப்பு எதனையும் கூறவில்லை. பின்னர் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயாரட்ண, விடுதலைப்புலிகளின் உள் முரண்பாட்டால் வன்னிப் புலிகளுக்கும் கருணா குழுவினருக்குமிடையே நடைபெற்ற மோதலில் ஐவர் கொல்லப்பட்டதாகக் கூறினார். எனினும், இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்புமில்லையெனக் கூறிய புலிகள், கருணா குழுவுக்கும் ஈ.என்.டி.எல்.எவ். வுக்கும் (பெட்டிச் செய்தியை பார்க்கவும்) இடையிலான மோதலின் விளைவே இதுவெனக் கூறினர்.
அதேநேரம், இக் குழுவினருடன் இருந்த சிலரது கை வரிசையே இதுவென வேறொரு தகவல் கூற, இத் தாக்குதலை புலிகள் நடத்தினார்களா அல்லது கருணா குழுவுக்கும் ஈ.என்.டி.எல்.எவ்.வுக்கும் இடையிலான மோதலா அல்லது உடனிருந்தவர்களின் கை வரிசையா இதுவென்ற கேள்வியும் எழுந்தது.
பெரும்பாலும் இது, இக்குழுவுடன் உடனிருந்த சிலரது கைவரிசையே எனக் கருதப்படுகிறது. எனினும், உடனிருந்தவர்கள், ஊடுருவிய புலிகளா அல்லது கருணா குழுவைச் சேர்ந்தவர்களா அல்லது ஈ.என்.டி.எல்.எவ்.வை சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை. கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொட்டாவையில் கடந்த வருட நடுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் போன்று இதுவும் நடைபெற்றிருக்கலாம்.
துப்பாக்கிச் சூட்டை கேட்டு விழிப்படைந்த மக்கள், அங்கு மோதல் நடைபெற்றது போல், அதாவது, இரு தரப்புகளிடையே சண்டை நடைபெற்றது போல் தெரியவில்லையென்றும், யாரோ சிலர் கண்டபடி சுடுவது போன்றே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறினர். அத்துடன், தாக்குதலுக்கு முன்னர் அப்பகுதியில் எவரது நடமாட்டமோ அல்லது தாக்குதலின் போது வெளியார் நடமாடியதற்கான அறிகுறியோ அப்பகுதியில் தென்படவில்லையென்றும் கூறினர்.
இதேநேரம், அங்கிருந்த 5 கொட்டில்களுக்குள் மூன்று கொட்டில்களுக்குள்ளேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதால், குறைந்தது மூவராவது தங்களுடனிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. இந்த மூவரும் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தப்பிச் செல்லும்போது, இவர்கள் வசமிருந்த முக்கிய பொருட்களையும் கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு சென்றிருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.
அதேநேரம், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பெருமளவு புகைப்படங்கள் சிதறிக் கிடந்தன. இவையெல்லாம், படையினருடன் இளைஞர் குழுவொன்று இணைந்து எடுத்த படங்களாகும். படையினர் இளைஞர் குழுவொன்றுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்குவது போன்றும் அவர்களுடன் இவர்கள் இணைந்து செயற்படுவது போன்றும் அந்தப் புகைப்படங்கள் தென்படுகின்றன.
இதேநேரம், இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் விஜயன் (ராசேந்திரன் பேரின்பநாதன் - திருகோணமலை), கவியன் (செல்லையா குழந்தைவேலு - திருகோணமலை) ஆகிய இருவரும் ஈ.என்.டி.எல்.எவ். வைச் சேர்ந்தவர்களெனவும் துரை (சின்னப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை), வாசு (தேவதாசன் தெய்வேந்திரன்), காந்தன் (கந்தசாமி ஜெயநிதன்) ஆகிய மூவரும் கருணா குழுவைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது. மிகுதி நால்வர் யார் என்ற கேள்விக்கு இது வரை விடை கிடைக்கவில்லை.
கருணா குழுவுடன் ஈ.என்.டி.எல்.எவ்.சேர்ந்த பின்னர் இரு தரப்பும் ஒன்றாக இருந்த போது நடைபெற்ற முதல் சம்பவம் இதுவாகும். இதன் மூலம் இவ்விரு குழுக்களையும் இணைத்து களமிறக்கும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் சொறிவில் கிராமத்தை சேர்ந்தவரென்பதால் கிழக்கிற்கு வெளியேயும் கருணா குழுவினருக்கு ஆட்களைச் சேர்க்கும் முயற்சிகள் ஆரம்பமாகி விட்டதும் உறுதியாகியுள்ளது.
இதைவிட ,தீவுச்சேனை முகாமே சில காரணங்களுக்காக இப் பகுதியில், பிரதான, வீதியிலிருந்து நீண்ட தூரக் கிராமத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈ.என்.டி.எல்.எவ்.வும் இங்கு வந்து சேர்ந்ததால் அயல் நாட்டு புலனாய்வுப் பிரிவும் இப்போது புலிகளுக்கெதிராக களமிறங்கி விட்டதோ என்ற ஐயமும் எழுந்துள்ளது.
அதேநேரம் மட்டக்களப்போ அல்லது அம்பாறையோ அல்லது அதற்கு வெளியே எங்கு சென்றாலும் கருணா குழு நிழல் போலப் பின் தொடரப்படுவதை இது நன்கு தெளிவுபடுத்தியுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதன் மூலம் இந்தக் குழுவினருடனான படையினரின் தொடர்புகள் உறுதியாகிவிட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
மக்களுக்கு அறிமுகமில்லாத ஒரு குழு திடீரென அங்கு வந்து முகாமமைத்து மக்களை அழைத்து கூட்டம் நடத்திய பின்பும் இது பற்றித் தங்களுக்கு எதுவுமே தெரியாதென படைத்தரப்பு கூறினால் அது மிகப்பெரும் நகைச் சுவையே. ஆனாலும் கருணா குழுவுடன் மட்டுமல்லாது தற்போது ஈ.என்.டி.எல்.எவ்.வுடனும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்புகள் ஏற்பட்டுள்ளமை இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கிழக்கில் தொடரும் நிழல் யுத்தம் முடிவுக்கு வரப் போவதில்லையென்பதை இது நன்கு தெளிவுபடுத்தியுள்ளது. நிழல் யுத்தம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்து இராணுவத்தினரின் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லப்படுவதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தவறி வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும், ஆதாரம் தேவையென கண்காணிப்புக் குழு அடி, முடி தேடுவதால் `நிழலை` கண்காணிப்புக் குழு பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இங்கும் கண்காணிப்புக் குழு செல்ல நீண்ட நாட்களெடுக்குமென்பதால் இங்கும் தமிழ்க் குழுக்களின் முகாமிருந்ததற்கான ஆதாரமில்லாது போகலாம்.
அதேநேரம், கருணா குழு படையினருடன் சேர்ந்தியங்கவில்லை முகாம்களை அமைத்தே அவர்களும் செயற்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் வெளியுலகிற்கு காண்பிக்க முடியும். ஆனாலும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருக்கும் கருணா குழுவின் முகாம்களே தாக்கப்படுகையில், புலிகளின் பகுதிக்குள்ளேயே கருணா குழுவின் முகாம்களிருப்பதாக படைத்தரப்பு கூறுவது எடுபடுமா என்ற கேள்வியும் எழுகிறது.
எவை எப்படியிருந்தாலும் அரசாங்கம் உறுதியான சில முடிவுகளை எடுக்காவிட்டால் தற்போதைய நிழல் யுத்தம் நிஜப் போராகுவதற்கு மிகவும் குறுகிய காலமே தேவையென்பது சர்வ நிச்சயம்.
thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>