04-17-2005, 12:34 AM
<img src='http://img232.echo.cx/img232/3496/flower94ok.jpg' border='0' alt='user posted image'>
<b>மலரே...
மனதோடு மலர்ந்தவளே
கண்ணோடும் மலர்ந்திட்டாய்
ஒளி வீசும் ஓவியமாய்
நினைவோடு கலந்து
அகத்தோடும் பொருதி விட்டாய்
அகற்ற ஒரு வழியில்லை...!
அகத்துள் ஒரு கருவறை
அங்கு உனக்காய்
ஒரு கரு வளர்த்தேன்
இன்று குஞ்சாய் நீ
என் மன மடி தவழ்கிறாய்...!
உன் பிஞ்சாய்....
நானும் ஒரு உறவாய்
பிரிவுக்கும் அங்கு இடமில்லை...!
சத்தியம் செய்து தரவில்லை
சான்றுகள் விட்டும் வைக்கவில்லை
முகவரியும் அறியவில்லை
முன்னதாய் அறிந்ததுமில்லை..!
மின்னலாய் வந்த
முகம் மட்டும் போதும்
என் நினைவது
ஜென்மங்கள் தாங்கும்
உன் உருவம்...!
வேண்டாத உறவாய்
நாளை நீ உதறிவிட்டால்...
மலர் நாடும்
வண்டாட்டம் ஒதுங்கும்
திண்டாட்டம் எனக்கு வேண்டாம்..!
சுதந்திரச் சிட்டு நான்
உன் நினைவுச் சுமை தாங்கியும்
பறக்க வேண்டும் இலட்சியப் பயணம்
உறுதி... உரமானது...!</b>
<b>மலரே...
மனதோடு மலர்ந்தவளே
கண்ணோடும் மலர்ந்திட்டாய்
ஒளி வீசும் ஓவியமாய்
நினைவோடு கலந்து
அகத்தோடும் பொருதி விட்டாய்
அகற்ற ஒரு வழியில்லை...!
அகத்துள் ஒரு கருவறை
அங்கு உனக்காய்
ஒரு கரு வளர்த்தேன்
இன்று குஞ்சாய் நீ
என் மன மடி தவழ்கிறாய்...!
உன் பிஞ்சாய்....
நானும் ஒரு உறவாய்
பிரிவுக்கும் அங்கு இடமில்லை...!
சத்தியம் செய்து தரவில்லை
சான்றுகள் விட்டும் வைக்கவில்லை
முகவரியும் அறியவில்லை
முன்னதாய் அறிந்ததுமில்லை..!
மின்னலாய் வந்த
முகம் மட்டும் போதும்
என் நினைவது
ஜென்மங்கள் தாங்கும்
உன் உருவம்...!
வேண்டாத உறவாய்
நாளை நீ உதறிவிட்டால்...
மலர் நாடும்
வண்டாட்டம் ஒதுங்கும்
திண்டாட்டம் எனக்கு வேண்டாம்..!
சுதந்திரச் சிட்டு நான்
உன் நினைவுச் சுமை தாங்கியும்
பறக்க வேண்டும் இலட்சியப் பயணம்
உறுதி... உரமானது...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

