09-15-2003, 06:26 PM
இளைஞன் Wrote:[quote=Karavai Paranee]சரி சரி நேற்று முழுவதும் மீடீயா மூலம் உலகையே கலங்கடித்த பேய்ப்படத்திற்கு முடிவுவைத்தாகிவிட்டது. மேலே காணப்படும் படம் மலேசியாவில் 2,3 வருடங்களிற்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். அதை வைத்து இந்திய இளைஞர்கள் ஆடிய ஆட்டம். அம்பலமாகியுள்ளது.
<img src='http://www.yarl.com/forum/files/pai.jpeg' border='0' alt='user posted image'>பல சமயங்களில் சில ஏமாற்றுத்தனங்களுக்காக இப்படியான வேலைகளை பலர் செய்வதுண்டு.ஆரம்பத்திலேயே இது ஒரு பித்தலாட்டமாக இருக்கும் என்பது தெரியும்.ஆனாலும் உடனடியாக எழுதுவது சரியல்ல.
இலங்கையில் வாழ்ந்து, மறைந்த பகுத்தறிவாளர் Dr.கோவுர் (Dr.A.T.Kovoor) அவர்களுடன் வாழ்ந்த காலத்தில் இப்படியான நிகழ்வுகள் நடக்குமிடத்துக்கு அவருடன் செல்வதுண்டு.நடப்பவை மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
பகுத்தறிவுடைய விஞ்ஞான உலகில் கூட இப்படியான சுத்து மாத்துகள் வேலைகள் தொடர்வது தவிர்க்கப்படவேண்டும்.

