09-15-2003, 06:07 PM
<img src='http://www.kumudam.com/reporter/180903/4t.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>ஆர். விவேக்ஆனந்தன்</span>
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமான உள்நாட்டுப் போர், தற்போது ஒரு முடிவுக்கு வந்து சமாதான பேச்சு வார்த்தைகள் தொடரும் இவ்வேளையில், கடந்த பதின்மூன்று வருடங்களாக தமிழக மக்களுடன் சகோதர, சகோதரிகளாகப் பழகிவந்த இலங்கைத் தமிழ் அகதிகள், கனத்த இதயத்துடன் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கேயிருந்து அகதிகளாக வரும்போது இருந்த சோகத்தைவிட, தற்போது பல மடங்கு சோகத்துடன் அவர்கள் சென்ற காட்சி, தமிழர்களுடைய பாசப்பிணைப்பின் உதாரணமாகத்தான் இருந்தது.
<img src='http://www.kumudam.com/reporter/180903/4.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/180903/4p.jpg' border='0' alt='user posted image'>
1990_ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் உச்சகட்ட போர் நடைபெற்றபோது, வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த ஈழத்தமிழர்களில் மீனவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வந்தனர். சுமார் 61 படகுகளில் இப்படி நாகப்பட்டினம் வந்திறங்கிய தமிழ் அகதிகளின் படகுகள், சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, கடல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் உயிர்பிழைக்க நம் தமிழகத்தை நோக்கி வந்த நேரம், துரதிர்ஷ்டவசமாக ராஜீவ்காந்தியின் மரணம் நிகழ, மீண்டும் அலைக்கழிக்கப்பட்ட அவர்கள், திருச்சி, கோவை, தருமபுரி, வேலூர் என பல்வேறு அகதிகள் முகாம்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்த படகுகள், எவ்வித பராமரிப்புமின்றிக் கிடக்க, சென்னையைச் சேர்ந்த ஈழ இதிலியர் மறுவாழ்வு கழகத்தினர் அகதிகள் சம்பந்தமான பேச்சுவார்த்தையைத் தொடங்கியதோடு, அவர்களின் படகுகளையும் பாதுகாக்க ஏற்பாடு செய்தனர்.
அத்துடன் மத்திய_மாநில அரசுகள் தமிழ் அகதிகளின் சார்பில் இலங்கை அரசுக்கு தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பயனாக அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கத் தொடங்கின. முதற்கட்டமாக, சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த படகுகளைச் செப்பனிட்டுத் தருமாறு இலங்கை அரசு கோரியதையடுத்து, அந்தப் பணிகளும் தொடங்கின.
இந்தப் பணிகளைப் பார்வையிட்டு, இந்திய அரசிடமிருந்து மொத்த படகுகளையும் மீட்டுத் தருவதற்காக இந்தியாவுக்கான இலங்கை துணைத்தூதர் சுமித் நாகந்தலா கடந்த 4_ம் தேதி நாகப்பட்டினம் வந்திருந்தார். அதற்கு முன்னதாகவே, சென்ற மாதம் 10_ம் தேதி அகதிகளை அழைத்துச் செல்வதற்காக திரிகோணமலையிலிருந்து மீனவர் குழு ஒன்றும் வந்து சேர்ந்தது. இக்குழுவினர் நாகை மீனவர்கள் இல்லங்களில் தங்கியிருந்தனர்.
ஒருவழியாக எல்லா ஃபார்மாலிட்டிகளும் முடிய, கடந்த எட்டாம் தேதி அகதிகள் இலங்கைக்கு மீண்டும் செல்லத் தயாராயினர்.
அவர்கள் புறப்பட்ட அந்த அதிகாலை வேளை, துறைமுக வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சொந்த நாட்டிற்குத் திரும்பும் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அதையும் மீறிய மெல்லிய சோகம் ஒன்று அவர்கள் முகத்தில் படர்ந்திருந்ததையும் காண முடிந்தது.
முதல்கட்டமாக அகதி மீனவர்களின் குடும்பத் தலைவர்கள் மட்டும் படகுகளில் புறப்பட்டு இலங்கைக்குச் செல்வதாகவும், அவர்களின் குடும்பங்கள் விமானங்கள் மூலம் புறப்பட்டுச் செல்ல இரண்டு நாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் படகுகளில் செல்வது ஆபத்தானது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்!
இலங்கைத் தமிழ் அகதிகளின் விசைப்படகுகளை இழுத்துச் செல்ல, நாகை ஆரிய நாட்டுத் தெரு, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மீனவர்கள் பன்னிரண்டு விசைப்படகுகளில் சென்றனர். அவர்களுக்குத் தலா நானூறு லிட்டர் டீசலும், இருபதாயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டதாம். கடலில் செல்லும் மீனவர்களுக்குப் பாதுகாப்பாக, இந்திய கடற்படையைச் சேர்ந்த ப்ரியதர்ஷினி கப்பலும் சென்றது.
அகதிகளை அழைத்துச் செல்ல இலங்கை திரிகோணமலையிலிருந்து வந்திருந்த படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சித்திரசேகரன் என்பவர் நம்மிடம் ஒட்டுமொத்த உணர்ச்சிகளையும் கொட்டியபடி பேசினார்:
"எங்களுடைய முதல் நன்றியை தமிழக அரசுக்கும், எங்கள் நாட்டு எம்.பி. சம்பந்தத்திற்கும்தான் சொல்ல வேண்டும். இலங்கையில் இப்போதுதான் சமாதானத்தின் அவசியத்தை இரு தரப்பினரும் உணர்ந்துள்ளார்கள். பொருளாதார இழப்பு, உயிரிழப்பு என... அப்பப்பா...! எத்தனையோ இழப்புகள்! விடுதலைப் புலியான எனது மகன் இறந்ததுகூட பல வருடங்கள் கழித்துதான் எனக்குத் தெரிந்தது" என்று சோகப் பெருமூச்சுவிட்டவர், "எம்.ஜி.ஆர். மட்டும் தற்போது உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தளவுக்குக் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்" என்றும் கூறி சிலிர்த்தார்!
கடைசியாக இலங்கை ராணுவத்தினால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் தொடர் சம்பவத்திற்கும் அதிர்ச்சித் தகவல் ஒன்றைக் கூறினார் சித்திரசேகரன்.
"தமிழக எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்கு மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்களின் வலைகளைத் திருடிக் கொண்டும், சிலர் அவர்களின் வலைகளை வெட்டி நாசம் செய்துவிட்டும் திரும்பி விடுகின்றனர். இப்போது இங்கேயுள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் இலங்கை மீனவர்களிடம் திருடப்பட்ட அந்த வலைகளைப் பார்த்தேன்! பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அங்கே போராட்டம், அறிக்கைகள் என அரசுக்குத் தொல்லை கொடுக்க, அதனால்தான் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்!"" என்றார் சித்திரசேகரன்.
அதிகாலை மூன்று மணியிலிருந்து படகுகளில் அவரவர்கள் பொருள்களை ஏற்றிவைக்க, சரியாக ஏழரை மணியளவில் மாவட்ட கலெக்டர் வீரசண்முகமணி மற்றும் சுங்கத்துறை உதவி ஆணையர் பெருமாள், கடற்படை அதிகாரி புளோரா ஆகியோரிடம் விடைபெற்ற தமிழ் அகதிகள், கண்களில் பெருக்கெடுத்த நீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு கைகளை ஆட்டியபடி புறப்பட்டுச் சென்றனர்!
நன்றி குமுதம் ரிப்போட்டர்