04-16-2005, 06:16 PM
தமிழ் சினிமாவில எங்கட தாவடிக்காரர்
ராமகிருஷ்ணா எண்ட வெற்றிப்படம் குடுத்ததால தமிழ் சினிமாவில விக்ரம் மாதிரியே ஒரு ஆசாமி மேல எல்லாரிண்ட பார்வையும் விழுந்திருக்கு.அவர் யாரெண்டு தெரியாதே ஜெய் ஆகாஷ்தான் எண்டு சொல்லுவியள்.ஆனா அவரிண்ட பூர்வீகத் பற்றி தெரிஞ்சா புல்லரிச்சுப்போவியள்.
ஜெய் ஆகாஷ் யாழ்ப்பாணம் தாவடி எண்ட இடத்தை சேர்ந்தவர்.அந்தக்காலத்தில 83 பிரச்சினயோட லண்டனுக்குப்போய் அங்க படிச்சு(உதிரித்தகவல்:இவரோடதான் விஜயிண்ட பாரியாரும் படிச்சவ.அவவும் யாழ்ப்பாணத்து அம்மாதானே.) பிறகு இந்தியாவுக்கு ஏதோ தற்செயலா வரேக்க சினிமாக்காரரிண்ட கண்ணில எத்துப்பட்டு அதுக்குள்ள குடிபோனவர்.
தொடக்கத்தில தமிழில பெரிசா வாய்ப்புகள் வரேல்ல.ஆனானப்பட்ட அருண்குமார் போல நல்ல பின்னணி உள்ள ஆக்களே ஹீரோவா நடிச்சு சனத்திண்ட மத்தியில நல்ல இடத்தைப்பிடிக்க படாதபாடு படேக்க இவர் பாவம் போன ஸ்பீடில ஹீரோவாகவேணும் எண்டு ஆசப்பட்டது கொஞ்சம் ஓவர்தான்.எண்டாலும், ஒண்டை அடைச்சாலும் கடவுள் மற்ற வழியால குடுப்பார் எண்டு இவருக்கு தெலுங்குப்பக்கம் அப்ப சாதுவாக கை குடுத்திச்சுது.பிறகென்ன ஆள் கிடைச்ச சான்ஸை விடேல்ல.ஜமாச்சிருக்கிறார்.பிறகு அங்க பெரிய பெரிய தயாரிப்பாளற்ற படங்களில எல்லாம் தன்ர பாய்ச்சலைக்காட்டினார்.
ரோஜாவனம் அது இது எண்டு சும்மா இரண்டொரு தமிழ்ப்படங்களிலயும் இஞ்சாலவந்து தலையக்காட்டினவருக்கு ராமகிருஷ்ணா எண்ட படத்தில ஹீரோவா நடிக்க சான்ஸ் கிடைக்க, தெலுங்கு கைவரிசைய இங்கயும் காட்டியிருக்கிறார்.படம் வெற்றி.இப்ப தமிழ்நாட்டு தயாரிப்பாளர்களும் இவற்ற கதவத்தட்ட வெளிக்கிட்டினம்.
குருதேவா,செவ்வேள் எண்டு இவற்ற இரண்டு படங்கள் வர இருக்குது.பாப்பம் பெடி நிக்குமோ ஓடுமோ எண்டு.என்னெண்டாலும் எங்கட ஆள் ஒருத்தன் பாலுமகேந்திராவுக்கு பிறகு சினிமாவில ஒரு கலக்கு கலக்கிறார் எண்டேக்க சந்தோசம்தான்.
கிட்டடியில இவர் யாழ்ப்பாணத்துக்கு சொந்த ஊரையும் பாத்திட்டு கொழும்பிலும் நிண்டுட்டு போனவர்.அப்ப அவரை சந்திக்க சந்தர்ப்பம் கிடச்சது.கதைக்ககேக்க தனக்கு தமிழில ஒரு கலக்கு கலக்குவதுதான் விருப்பமாம்.அது ராமகிருஷ்ணா மூலம் நிறைவேறும் எண்டு முன்னுக்கிருந்த மேசையில அடிச்சு சொன்னார்.அப்ப படம் வரேல்ல.ஆனா சொன்னமாதிரி படம் நல்ல போயிருக்கு.
என்ன இப்ப இஞ்ச வந்திருக்கிற சதாவோட முந்தி தெலுங்கில கிசுகிசுப்பட்டவர் இஞ்ச வேறயாரேடேனும் கசமுசா பண்ணி ஊர் மானத்தக்கெடுக்காம இருந்தாச்சரி.
by அருணன்/அலை ஓசை

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>