04-16-2005, 04:26 PM
Quote:ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...!
Quote:அதுதவிர மாயா தன்னை ஈழத்தமிழராய் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைத் தான் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய, மாயாதான் ஈழத்தமிழரை உலக அரங்கில் அடையாளப்படுத்துகிறார் என்று சொல்லப்படவில்லை. கட்டுரையை திரும்பவும் வாசியுங்கள் அது நன்கு புலப்படும்
கட்டுரைகள் எதுவும் மாயாவை ஈழத்தமிழரின் ரட்சகர் என்று சொல்லவில்லை.....அவரின் அடைகையை அவர் ஈழத்தமிழரின் பிரச்சனையும் கருத்திலேடுக்கிறார். அவருண்டு தன்பாடுண்டு என இருக்கவில்லை என்பதையே சுட்டுகிறன. அவரை யாரும் தலையில் வைத்து கொண்டாடவும் இல்லை. அவரது போக்கு அல்லது அவரது பிரபல்யம் தேர்ந்து கொண்ட வழி தனிப்பட் ரீதியில் யாருக்கும் பிடிக்காது இருக்கலாம்.
ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீராங்கனை தமிழரின் கலாச்சார உடையுடன் ஓடு என கேட்பது எவ்வளவு அபத்தமானதோ அதேயளவு அபத்தமானது தான் பொப் இசையில் நுளைந்த ஓருவரின் உடையை விமர்சிப்பதுமிருக்கும். அதே போன்றே அவரது பெயரை வேறு விதமாக எழுத முற்படுவதுமிருக்கும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

