Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டூப் ரிவி
#1
<span style='font-size:25pt;line-height:100%'>கவுண்(டர்)டென்</span>

அடங் கொக்கமக்கா... வணக்கமுங்க! நேரடியா நிகழ்ச்சிக்குப் போலாண்டா டேய்! கேமரா தலையா! <i>என கவுண்டமணி சவுண்டுவிட, அதிரடி கவுண்ட் டவுன் ஆரம்பமாகிறது. </i>


<img src='http://img92.echo.cx/img92/7929/p1541bl.jpg' border='0' alt='user posted image'>


இந்த வாரம் பத்தாவது இடத்துல இருக்கறது <span style='color:orange'>மன்மதன்!

படத்தோட ஹீரோ இருக்கானே, சரியான பம்பைத் தலையன் பிரேமானந்தா. பள்ளிக்கூட வயசுல வாய்லேருந்து பல்பம் எடுத்துத் தர்றேன்னு சொல்லி ஹீரோவை ஏமாத்திடறா ஒரு பொண்ணு. அந்தக் கடுப்புல வளர்ற ஹீரோ பின்னால பெரிய சாமியாராகி, வாய்லேருந்து லிங்கம் எடுக்கறேன்னு டமாஷ் பண்ணி, பல பொண்ணுங்களை உஷார் பண்றான். ஒரு நாளு, இந்த லிங்க வாயனை பொசுக்குனு போலீஸ் அமுக்கிருது. கடைசியா கோர்ட்டு கொடுக்கற ஷாக்கிங் தீர்ப்போட முடியுது படம். முடி வளர்த்தேன், முடி வளர்த்தேன்... உன்னால் புள்ள வாயிக்குள்ள லிங்கம் எடுத்தேன்!ங்கற பாட்டுல பிரேம்ஸ் அழுது பொரண்டு புழுதி கிளப்புறாரு. அடிக்கடி லிங்கம் எடுக்கும்போது மூக்குல ரத்தம் வர்றதும், அப்பப்போ பேக்கிரவுண்ட்ல ஹேய்... ஹேய்... மன்மதானந்தா! மாட்டப் போறானந்தா!னு வர்ற மியூஸிக்கும் கலக்குதுடா டேய்! ஹீரோயின் திவ்யா மாதாஜிக்கு இதில் பெரிய வாய்ப்பு இல்லேன்னாலும், பிரேம்ஸை டாவடிச்சு, இடையில ஏமாத்திட்டுப் போயிடுது மர்ம ரோசா. மொத்தத்துல மன்மதன்... மண்ணக் கவ்வுன மதன்! <i>என்று அஷ்டகோணலாக முகம் காட்டுகிறார். </i>

<b>கவுண்டமணி:</b> ஆங்... இப்ப அடுத்ததா ஒன்பதாவது இடத்துல இருக்கிற படம் காதல்!

இங்கிலாந்து இளவரசரு வெள்ளெலித் தலையன் சார்லஸ்தான் ஹீரோங்கண்ணா! கமீலாங்கற கவுனு போட்ட கெழவிதான் ஹீரோயினாம். என்னா பெரிய பொல்லாத கதை? பொடலங்கா கதை! ஹீரோ தன்னைவிட வயசுல முத்திப்போன முள்ளங்கி மண்ட கமீலாவ லவ்வுறாரு. ஆனா, அவரோட அரச குடும்பத் துல அதை எதிர்க்கறானுங்க. அதனால கடுப்பாகி, ஹீரோவும் ஹீரோயினும் நாட்டை விட்டு அயர்லாந்து, சுவிட்சர்லாந்துனு நட்டு கழண்டு ஓடிப்போயி ஜாலி பண்றாங்க. டென்ஷனாகி அவங்களைப் பிரிக்குது அரச குடும்பம். அதுல டார்ச்சராகி ஙேஙேஙேஙேஙே னு வளராத தாடியச் சொறிஞ்சிக்கிட்டு அலையறாரு சார்லஸ. அதப் பார்த்து பயந்துபோயி, சார்லஸ மகனுங்களே சேர்ந்து டேய் டாடி நல்லாருடா!னு காதலைச் சேர்த்து வைக்கிறானுங்க. இப்ப ஒரு பாட்டு ஸீன். பாத்தா பாருங்க... பாக்கலைன்னா போங்கடா டேய் <i>என்றதும், கமீலாவை உப்பு மூட்டை தூக்கியபடி சார்லஸ் பாடுகிற பாடல் வருகிறது. </i>


<i>உனக்கென வாழ்கிறேன்,
அரச பதவியும் தருகிறேன்
ரெண்டு மகனுங்க இருக்கையில்
நான் டாவு அடிக்கிறேன்
கமீலாவே.... கமீலாவே...
பண்ணிப்புட்டேன் கண்ணாலமே!</i>

<b>கவுண்டமணி:</b> கெழவன் ரவுசப் பாத்தீங்களா! காதல்... முதியோர் காதல்! அடுத்ததா எட்டாவது இடத்துல இருக்கறது ஜி! நம்ம கேப்டன் விஜயகாந்து நடிகர் விஜயகாந்தாவே வந்து கலக்கியிருக்காருங்கோ. ஒரு நடிகன் அரசியலுக்கு வந்தா என்னாகும்ங்கறதுதான் கதை. நடிகர் சங்க எலெக்ஷன்ல நிக்கிற விஜயகாந்துக்கு கலைத் துறை மந்திரிகிட்டே இருந்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டல் வருது. கடுப்பாகிற விஜயகாந்த், சங்க தேர்தல்ல மட்டுமில்லை, உங்க தேர்தல்லயும் நிப்பேன்னு சொல்லி, பொசுக்குனு அரசியல்ல குதிக்கிற கதை. வழக்கமா காலால அடிக்கிறவரு, இதுல அத்தனை பேரையும் வாயால வசனம் பேசியே கொல்றாரு. கள்ளக்குறிச்சி, மதுரை, தூத்துக்குடினு ஊர் ஊரா மீட்டிங்லயே ஷட்டிங் நடத்தின படம். ஜி... ஓவர் பேச்சு!


அந்தக் கண்றாவியை நீங்களும் கொஞ்சம் பாருங்க சாமியோவ்!

<i>சுற்றி கரை வேட்டிகள் இருக்க நடுவே கன்னச் சதையாட, கண்கள் சிவக்கப் பேசுகிறார் விஜயகாந்த்</i>, என் கையில பட்ட ஒரு திருட்டு வி.சி.டி, நான் பக்கத்துல பார்த்த சி.எம். ஸீட்டு நான் எடுத்துக்கறேன். ஏய்... எனக்கு அரசியல்ல தளும்பு வாங்கவும் தெரியும், அழும்பு பண்ணவும் தெரியும். இப்ப சொல்றேன் கேட்டுக்க... தமிழ் நாட்டுல மொத்தம் முப்பத் தோராயிரம் ஊராட்சி... <i>சட்டென்று கட் ஆகிறது ஸீன். </i>

<b>கவுண்டமணி:</b> அடங்குங்க புள்ளிவிவரத் தலையரே. ச்சீ... தலைவரே! ஓகே., இப்ப ஏழாவது இடத்துல ஒரு திகில் படம் ராம்

<i>சிறை காம்பவுண்ட் சுவரின் மேல் காவி வேட்டி வெற்று உடம்போடு ஒற்றைக்காலில் நின்றபடி மந்திரம் சொல்கிறார் ஹீரோ... வானாகி மண்ணாகி, சங்கர்ராமன் மர்டராகி, ஜெயிலாகி பெயிலாகி, காஞ்சி கலவையாகி... என்ப தோடு காட்சி கட் ஆகிறது.</i>

<b>கவுண்டமணி:</b> சூப்பர்ல! அடுத்து ஆறாவது இடத்துல ஒரு கிளுகிளு படமுங்கோ. காக்கிவாடன் பட்டி மயிலு, எம்.எல்.எம். குயிலு ஜெகஜ்ஜால ஜெயலட்சுமி ஹீரோயினா கலக்குற தேவதையைக் கண்டேன். பொதுவா போலீஸ்கிட்டே கேஸ் கொடுப்போம். அந்த போலீஸ் மேலயே ஒரு பொம்பள சரமாரியா கேஸ் போடறாள்னு ரொம்ப வித்தியாசமா திங்க் பண்ணியிருக் கானுங்க. படத்தோட ஓபனிங்லயே பல தொப்பைத் தலையனுங்க சேர்ந்து, துண்டக் காணோம் துணியக் காணோம், தூங்கும்போது துப்பாக்கியக் காணோம்... என்னடி செஞ்சே நீதான் என்னடி செஞ்சே, தொடாமலே தூக்குறியே, சி.பி.ஐ|யில தாக்குறியே என்னடி செஞ்சே நீதான் என்னடி செஞ்சே?னு பாடற சோகக் குத்து சூப்பர். இன்டர்வெல் வரைக்கும் ஜெயலட்சுமி கூட நிக்குற அழகர்சாமி, திடுதிப்புனு அம்மணிக்கு எதிரா கோல் அடிக்கறது செம ட்விஸ்ட்.

<i>தேவதையைக் கண்டேன்...
தெருவில் நின்றேன்!</i>


<b>கவுண்டமணி:</b> இப்ப நாம அடுத்ததா பார்க்கப் போறது அஞ்சாவது இடத்தைப் பிடிச்ச படம்... அல்டிமேட் அழுகை ஸ்டார் ஃபீலிங் தலையர் வைகோவோட ஆட்டோகிராஃப்


<i>குலுங்கிக் குலுங்கி அழுகிறார் வைகோ. அதைப் பார்த்துப் பாடுகிறார் கலைஞர், ஒவ்வொரு துளிகளுமே சொல்கிறதே, என் மேல் தம்பி வைத்த பாசத்தை. அழுகைக்கு அர்த்தம் தெரிகிறதே, தம்பி ஸ்டாலின் மேல் நீ வைத்த நேசத்தை. அதைக்கேட்டு உணர்ச்சிவசப் பட்டுக் குமுறிக் குமுறி அழு கிறார் வைகோ.</i>

<b>கவுண்டமணி:</b> ஆவூன்னா அழுவாச்சிதான்! ஆட்டோகிராஃப் அழுகை கிராஃப்! ஓகே. நாலாவது இடத்தில் மாயாவி!

மர்மத் தலையன் ஜோஷ்வா ஸ்ரீதர்தான் ஹீரோ. நடாஷானு ஒரு அப்பாவிப் பொண்ணு ஹீரோயினு. கதை ஒரு மண்ணும் புரியலீங்கோ. திடீர்னு ஹீரோ வும் ஹீரோயினும் காணாமப் போறாங்க. கடத்தல்னு இவனுங்க சொல்றானுங்க, இல்லைனு அவனுங்க சொல் றானுங்க, கல்யாணம் பண்ணிட்டாங்கனு இவனுங்க சொல்றானுங்க, இல்லைனு அவனுங்க சொல்றானுங்க, காதல்னு இவனுங்க சொல்றானுங்க, நட்புனு அவனுங்க சொல்றானுங்க... என்னங்கடா டேய்! விளையாடறீங்களா... ஆனா, ஜோஷ்வா பாடற மீடியா ஏண்டா என்ன சுத்துது? கீ போர்டுக்குள்ள ஆந்த கத்துது!ங்கற பாட்டு சூப்பர். இப்ப அந்த ஜோஷ்வா நம்ம ஸ்டுடியோவுக்கு வந்திருக்காரு <i>என்கிறபோதே ஜோஷ்வா உள்ளே நுழைகிறார். </i>
<b>கவுண்டமணி:</b> வா மியூஸிக் வாயா! மாயாவி படம் ஒண்ணும் புரியலியே?

<b>ஜோஷ்வா:</b> நாங்க நல்ல நண்பர்கள்தான்.


<b>கவுண்டமணி:</b> அத நான் உன்கிட்ட கேட்டனா... ஏற்கெனவே இருக்கற இம்சையில ஏண்டா இப்படி எக்ஸ்ட்ரா டார்ச்சர் பண்றீங்க! ஒழுங்கா படத்தோட கதையைச் சொல்லு. படுவா பிச்சுப்புடுவேன் பிச்சு!

<b>ஜோஷ்வா (பயந்து போய்):</b> கடத்தல் இல்லை. நாங்க விரும்பிதான் டூர் போனோம். கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். ஆனா, சேர்ந்து இருப்போம். அதாவது...

<b>கவுண்டமணி (டென்ஷனாகி):</b> டேய்! கன்ஃபியூஸ் மண்டையா... ஓடிப்போயிரு. இனிமே இந்த ஏரியா பக்கம் உன்னைப் பார்த்தேன், மவனே கடிச்சி வெச்சிருவேன்... ஆமா <i>எனப் பாய, அலறி ஓடுகிறார் ஜோஷ்வா.</i>

<b>கவுண்டமணி:</b> அப்பிடியே பாகிஸ்தான் பார்டர் பக்கம் ஓடிரு. மாயாவி... எஸ்கேப்! <i>(ஸ்க்ரீனைப் பார்த்து)</i> மகா ஜனங்களே! இதுக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை. அடுத்ததா மூணாவது இடத்தில், கலைஞர் கதை வசனத்துல புன்னகை மன்னன் துரை முருகன் கலக்கும் கண்ணம்மா. படத்துல கதையெல்லாம் கேட்கக் கூடாது. ஸீனுக்கு ஸீன் ஒரு வில்லி அம்மாகிட்டே ஹீரோ ஆவேசமா வசனம் பேசிட்டு வெளிநடப்பு பண்றதுதான் கதை. சரியில்லை நாட்டு நடப்பு, அதனால் செய்கிறேன் வெளிநடப்பு!ங்கற பஞ்ச் டயலாக் வரும்போதெல்லாம் உடன்பிறப்புக்களின் விசிலு காது கிழிக்குது சாமீயோவ்.

படம் முழுக்க துரைமுருகன் இந்தா இந்தானு ஏகப்பட்ட குத்து டான்ஸை போடறாரு. சபையில என்ன நடந்ததுனு துரைமுருகன் தன் தலைவர்கிட்டே விவரிக்கிற காட்சிகள் சுவாரஸ்யம். அதை நீங்களே பாருங்க <i>என்றதும் ஸீன் வருகிறது.</i> தலைவரே! அந்தம்மா வரும்போது அமைச்சர் களெல்லாம் இந்தா இப்படி ஆடறாங்க. ந்தா... ந்தா... ந்தா! <i>என்றபடி வளைந்து நெளிந்து ஆடுகிறார். வேட்டியை மடித்துக்கட்டி உருள்கிறார்.</i> அப்புறம் அந்தம்மா பேசும்போது இப்படி கையத் தட்டி பல்டி அடிக்கிறாங்க! <i>என்றபடி</i>, ஆஹா! மோனோ ஆக்டிங் செஞ்சே முதுகு பழுத்துரும் போலயிருக்கேடா <i>என முனகுவதோடு காட்சி முடிகிறது.</i> கண்ணம்மா... அம்மம்மா!

<b>கவுண்டமணி:</b> அடுத்ததா இரண்டாவது இடத்தில் வங்கப் புளி கங்குலியோட ஆக்ஷன் ரீப்ளே ஸ்டோரி திருப்பாச்சி.


பேட்ட நேராப் புடிச்சி போல்ட் ஆனாத் தான் அவுட்டு. பேட்ட திருப்பிப் புடிச்சி அவுட்டானா அது டவுட்டு!னு பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டே பேட்ட தலைகீழா பிடிச்சி ஆடி சரமாரியா டக் அவுட் ஆகறாரு ஹீரோ புளி மூட்டை மண்டையன், வாத்துத் தலையன் கங்குலி. பட்டாசு பாலுவா வர்ற சச்சின் டெண்டுல்கரோட லோக்கல் சண்டை, சகட சனியனா வர்ற இன்ஸமாமோட இன்டர்நேஷனல் சண்டைனு வெத்து வாய்லயே மொழம் போட்டுக்கிட்டிருக்காரு ஹீரோ. கடைசியா நாடே கூடி நடத்துற போராட்டத்துல அவரை டீம்லயிருந்து தூக்கறாங்களா... இல்லையாங்கிறதுதான் கதை. திருப்பாச்சி... வெறுப்பாச்சி! <i>என்றபடி, நாக்கைத் துருத்து கிறார்.</i>

<b>கவுண்டமணி:</b> முதல் இடத்தைப் பிடிச்சிருக்கிறது... ஆய்த எழுத்து!
சந்திரமுகி, சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ்னு மூணு ஹீரோக்கள் ஒரே நேரத்தில் சந்திச்சு சவால் விடற கதை. இந்தப் படம் இந்த வாரம்தான் ரிலீஸாகுது. ஆனா, அதுக்குள்ளே பரபரப் பாகிருச்சு. ஒருத்தருக்கு தன்னோட சூப்பர் ஸ்டார் பட்டம் போயிருமோனு பயம். இன்னொருத்தருக்கு அந்த சூப்பர் ஸ்டார் பேரைத் தட்ட முடியுமானு நப்பாசை. மூணா வது ஆளுக்கு, படப் பேரே அடிக்கடி பிரச்னையாகுதேனு கவலை. இப்படி மூணு பேரு தங்களோட வாழ்க்கையில் ஒண்ணா சேர்ந்து நிக்கிறதுதான் ஆய்த எழுத்து... இவங்க தலையெழுத்து! <i>என்கிற கவுண்டமணி,</i> அட! நெத்திலி மீனு நேயர் தலையனுங்களா, புரோகிராம் முடிஞ்சு போச்சுங் கடா! <i>என்று ஸ்கிரீனிலேயே உதைவிடுகிறார்</i>. </span>

thanks
vikatan.com
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
டூப் ரிவி - by vasisutha - 04-16-2005, 04:04 AM
[No subject] - by shanmuhi - 04-16-2005, 09:04 AM
[No subject] - by KULAKADDAN - 04-16-2005, 04:54 PM
[No subject] - by தூயா - 04-17-2005, 11:24 AM
[No subject] - by sinnappu - 04-20-2005, 06:08 PM
[No subject] - by vasisutha - 06-13-2005, 01:32 AM
[No subject] - by kavithan - 06-13-2005, 01:52 AM
[No subject] - by வெண்ணிலா - 06-13-2005, 07:40 PM
[No subject] - by அனிதா - 06-13-2005, 10:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)